You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விசா முறைகேடு விவகாரத்தில் கார்த்தி சிதம்பரம் மீது வழக்குப் பதிவு
தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம். அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
எம்.ஆர். ஷோபனா
ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரிய விஜய்
காணொளி: 'ராகுல் காந்தியை விஜய் பதவியேற்பு விழாவுக்கு அழைத்துள்ளார்'
காணொளி: விஜய் முதல்வராக பதவியேற்க என்ன ஏற்பாடுகள் நடந்து வருகின்றன?
'விஜய்க்கு திருப்புமுனை கொடுத்த பூவே உனக்காக' – ஆர்.பி. சௌத்ரியின் 12 பிரபல படங்கள்
காணொளி: ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் விஜய்
காணொளி: விஜயை சந்தித்து ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்
எம்.ஜி.ஆர் – விஜய்: வெவ்வேறு வழிகளில் சென்ற இருவரும் தேர்தலில் வெற்றி பெற்றது எப்படி?
ஆளுநரை சந்திக்கிறார் விஜய்
தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருவதற்காக மக்கள் மாளிகைக்கு தவெக தலைவர் விஜய் மற்றும் முக்கிய நிர்வாகிகள் சென்றுள்ளனர்.
விஜயை நேரில் சந்தித்து காங்கிரஸ் ஆதரவு
புதிய அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெறுமா? - கிரிஷ் சோடங்கர் பதில்
"புதிய ஆட்சியில் காங்கிரஸ் பங்கு வகிக்கும்" என, கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.
தவெக தலைவர் விஜயை சந்தித்த பிறகு காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "காங்கிரஸ் அளித்த ஆதரவுக்காக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, வேணுகோபால் ஆகியோருக்கு விஜய் நன்றி தெரிவித்தார். மேலும் பல கட்சிகள் ஆட்சிக்கு ஆதரவளிக்கும் என நம்புகிறோம்." என்றார்.
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெறுமா என்ற கேள்விக்கு, "ஆட்சியில் காங்கிரஸ் பங்கு வகிக்கும். விஜயை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பார் என நம்புகிறோம். காங்கிரஸ் இந்த ஆட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு மட்டும் தரமாட்டோம், பொறுப்புடன் இருப்போம்." என தெரிவித்தார்.
காங்கிரஸ் திமுக கூட்டணியிலிருந்து விலகியது குறித்து "காங்கிரஸ் முதுகில் குத்திவிட்டதாக" திமுக விமர்சிப்பது குறித்த கேள்விக்கு, "மக்களின் தீர்ப்பே இறுதியானது, அதை நாங்கள் மதிக்கிறோம்." என்றார்.
தவெக ஆட்சியில் காங்கிரஸ் சார்பில் யார் அமைச்சராவார் என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை.
இதனிடையே, தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் சென்னைக்கு வருகை தந்துள்ளார். இதைத் தொடர்ந்து, ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருவதற்காக தவெக தலைவர் விஜய் தன் வீட்டிலிருந்து ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சரானால் விஜய் பெறப்போகும் சம்பளம் என்ன? - ஹெலிகாப்டர் பயணம் உள்ளிட்ட சலுகைகளின் விவரம்
காணொளி: விஜய் பதவியேற்பு விழா - தயாராகும் நேரு ஸ்டேடியம்
விஜய் பதவியேற்பு விழா - தயாராகும் நேரு ஸ்டேடியம்
தவெக அலுவலகத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள்
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவளித்துள்ள நிலையில், காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் பனையூரில் உள்ள தவெக அலுவலகத்துக்கு சென்றுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை, புரொஃபஷனல் காங்கிரஸ் பிரிவின் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் தவெக அலுவலகத்துக்கு சென்று தற்போது விஜயை சந்தித்துள்ளனர்.
உடன் தவெக முக்கிய நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரும் உள்ளனர்.
தொடர்ந்து, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 5 பேரின் ஆதரவு கடிதம் விஜயிடம் வழங்கப்பட்டது.
விஜய்க்கு ஆதரவு ஏன்? காங்கிரஸ் தரப்பு விளக்கம்
தவெக தலைவர் விஜய் ஆட்சியமைக்க ஆதரவளித்தது ஏன் என, காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் இந்த காணொளியில் கூறியுள்ளார்.
"விஜய் நல்லாட்சி தருவார் என நம்புகிறேன்" - தொல். திருமாவளவன்
விஜய் நல்லாட்சி தருவார் என நம்புவதாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த தொல். திருமாவளவன், "ஆட்சியமைக்க ஆதரவு கேட்டு தவெக தலைவர் விஜய் எங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து நாளை (வியாழக்கிழமை) எங்கள் கட்சியின் முன்னணி பொறுப்பாளர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுப்போம்" என்றார்.
"விஜய் மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப நல்லாட்சி தருவார் என நம்புகிறேன்." என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், காங்கிரஸ் தவெகவுக்கு ஆதரவளித்திருப்பது குறித்த கேள்விக்கு, "திமுக தலைமையிலான கூட்டணியில் விசிக நீண்ட காலமாக பயணித்திருக்கிறது. இப்போதும் அந்த நட்பு நீடிக்கிறது. காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சிகள் என்ன முடிவெடுத்திருக்கின்றன என்பதைத் தாண்டி, முன்னணி பொறுப்பாளர்களின் கருத்தை அறிந்து முடிவெடுப்போம்." என்றார்.
வகுப்புவாத சக்திகளை கூட்டணியிலிருந்து வெளியே வைக்க வேண்டும் என்கிற காங்கிரஸின் நிபந்தனை குறித்து பேசிய திருமாவளவன், "பாஜக ஒரு இடத்தில் தான் வெற்றி பெற்றுள்ளது. தவெக ஆட்சி அமைக்க பாஜக தாக்கம் செலுத்தும் என நினைக்கவில்லை." என்றார்.
தோற்றாலும் முதலமைச்சர் பதவியில் இருந்து விலக மறுக்கும் மமதா - அரசமைப்பு கூறுவது என்ன?
10 ஆண்டுகள் கழித்து முறிந்த திமுக - காங்கிரஸ் கூட்டணி
கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தல் முதல் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வரும் நிலையில் தற்போது 10 ஆண்டுகள் கழித்து இந்தக் கூட்டணி முறிந்துள்ளது.
தமிழ்நாட்டை பொருத்தவரை, 2004 நாடாளுமன்றத் தேர்தலுக்காக நீண்ட இடைவெளி கழித்து திமுக - காங்கிரஸ் கூட்டணி அமைத்திருந்தது. இந்த கூட்டணி 2011 சட்டப்பேரவைத் தேர்தல் வரை தொடர்ந்து.
2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கூட்டணியிலிருந்து திமுக வெளியேறியது. அந்த தேர்தலை காங்கிரஸ் தனித்துச் சந்தித்தது.
அதன்பிறகு, 2016 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இரண்டு கட்சிகளும் மீண்டும் கூட்டணி அமைத்தன. அதனைத் தொடர்ந்து, 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டப்பேரவைத் தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் வரை இந்தக் கூட்டணி தொடர்ந்து.
2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு நீண்ட இழுபறிக்குப் பின்பே இரு கட்சிகளுக்கும் கூட்டணி உடன்படிக்கை எட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், காங்கிரஸ் தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது.
தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு
தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் பெயரில் வெளியான அறிக்கையில் இது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இந்திய அரசமைப்பில் நம்பிக்கை இல்லாத வகுப்புவாத சக்திகளை கூட்டணியிலிருந்து வெளியே வைக்க வேண்டும் என்கிற நிபந்தனையுடன் தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக கிரிஷ் சோடங்கர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்க முடிவெடுத்திருப்பதாகவும் பனையூர் சென்று நேரில் அதை தெரிவிக்க இருப்பதாகவும் காங்கிரஸ் கட்சியின் பிரவீண் சக்கவர்த்தி செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
"அடுத்தடுத்த தேர்தல்களுக்கும் கூட்டணி தொடரும்"
மேலும் அந்த அறிக்கையில் "தமிழ்நாட்டு மக்கள், குறிப்பாக இளைஞர்கள், மிகத் தெளிவான, வலுவான தீர்ப்பை அளித்து, அடுத்த அரசை அமைப்பதற்காக விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தை அவர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.
தமிழ்நாட்டு மக்களின் இந்த தீர்ப்பை மதித்து, பாதுகாத்து, நிறைவேற்றுவது எங்களின் அரசியலமைப்பு கடமையாகும். அதன்படி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியும் காங்கிரஸ் சட்டமன்றக் குழுவும், அரசு அமைப்பதற்காக தவெகவிற்கு முழுமையான ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளன." எனத் தெரிவித்துள்ளார்.