You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

விசா முறைகேடு விவகாரத்தில் கார்த்தி சிதம்பரம் மீது வழக்குப் பதிவு

தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம். அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

எம்.ஆர். ஷோபனா

  1. விஜய் இரு தொகுதிகளிலும் வெற்றி, கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் தோல்வி

  2. திரை நாயகன் விஜய் தமிழக அரசியல் நாயகனானது எப்படி?

  3. 'தொடக்க ஜோடி அதிரடி' - 228 ரன்கள் எடுத்த லக்னௌவை மும்பை வீழ்த்தியது எப்படி?

  4. தொங்கு சட்டப்பேரவை அமைந்தால் யார் ஆட்சி அமைப்பார்கள்?

  5. காணொளி: கரூர் சம்பவத்தைக் குறிப்பிட்டு ஆதவ் அர்ஜுனா கூறியது என்ன?

  6. காணொளி: திமுக தலைமை அலுவலகத்திற்கு வந்த மு.க.ஸ்டாலின்

  7. ஸ்டாலின், விஜய், சீமான் உள்பட நட்சத்திர வேட்பாளர்களின் தொகுதி நிலவரம்

  8. "மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறோம்" - உதயநிதி

    சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றார்.

    வெற்றி சான்றிதழை பெற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, “இரண்டாவது முறையாக என்னை வெற்றி பெற செய்த இந்த தொகுதி மக்களுக்கு நன்றி. நல்ல சட்டமன்ற உறுப்பினராக மக்களுக்கு முழு உழைப்பையும் அர்ப்பணிப்பேன். வெற்றிக்காக உழைத்த தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு நன்றி.

    தமிழ்நாட்டு மக்கள் ஒரு முடிவை, தீர்ப்பை கொடுத்திருக்கின்றனர். அந்த தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறோம். வெற்றி பெற்ற அனைவருக்கும் புதிய அரசுக்கும் வாழ்த்துகள்.” என்றார்.

    தவெக அதிக இடங்களில் முன்னிலை பெறுவது குறித்த கேள்விக்கு, “நாளை அநேகமாக திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் கூட்டம் நடக்கும். இதுதொடர்பாக திமுக தலைவர் அறிவுறுத்தல்களை வழங்குவார்” என்றார்.

  9. விஜய், செங்கோட்டையன், ஆனந்த் உள்பட தவெக தலைவர்களின் தொகுதி நிலவரம்

  10. மு.க.ஸ்டாலின் தோல்வி: திமுகவின் பின்னடைவுக்கு காரணமான 5 விஷயங்கள்

  11. தமிழ்நாட்டில் தோல்வியை சந்தித்த முதலமைச்சர்கள்

  12. கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் தோல்வி

  13. மு.க.ஸ்டாலினை தோற்கடித்த தவெக வேட்பாளர் வி.எஸ். பாபு கூறியது என்ன?

    சென்னை கொளத்தூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த வி.எஸ். பாபு வெற்றி பெற்றுள்ளார். அவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தோற்கடித்துள்ளார்.

    வெற்றி சான்றிதழை பெற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வி.எஸ். பாபு, “விஜய் எந்த வழியில் செல்கிறாரோ அந்த வழியில் நாங்கள் தொண்டனாக இருந்து செயல்படுவோம்” என்றார்.

    அதிக இடங்களில் தவெக முன்னிலை பெற்றுள்ளது குறித்த கேள்விக்கு, “எல்லா புகழும் தளபதிக்கே (விஜய்). வெற்றி பெற்றது நான் அல்ல, தளபதிதான். முழு வெற்றிக்கும் அவர்தான் காரணம்.

    என் தொகுதியில் மக்களிடம் இருந்து லஞ்சம் பெறாமல் திட்டங்களை செயல்படுத்துவோம்.” என்றார்.

  14. "அனைத்து தொகுதிகளிலும் விஜய் தான் வேட்பாளர் என நினைத்து வாக்களித்துள்ளனர்" - செங்கோட்டையன்

    அனைத்து தொகுதிகளிலும் விஜய் தான் வேட்பாளர் என நினைத்து மக்கள் வாக்களித்துள்ளதாக, தமிழக வெற்றிக் கழகத்தின் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

    கோபிச்செட்டிபாளையத்தில் தவெக சார்பில் போட்டியிட்ட கே.ஏ. செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

    “பல்வேறு சோதனைகளை கடந்து மக்களுக்கு சேவை செய்ய ஒரு தலைவர் உள்ளார் என்று மக்கள் விரும்புகிற தலைவராக தவெக தலைவர் இருக்கிறார். தமிழகம் முழுவதும் விதிகளுக்கு உட்பட்டு பல பகுதிகளுக்குச் சென்றார் விஜய். யார் வேட்பாளர் என்பது முக்கியமல்ல, அவர்தான் வேட்பாளர் என நினைத்து மக்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்து இருக்கின்றனர்.

    நாளை தமிழகம் இந்தியாவுக்கு ஒரு வழிகாட்டியாக உருவாவதற்கு இயற்கையால் கொடுக்கப்பட்டிருக்கிற வரமாக நான் கருதுகிறேன். உயிர்மூச்சு உள்ளவரை அவரோடு இணைந்து பணிபுரிவேன்” என தெரிவித்தார்.

  15. தேர்தலில் மார்ட்டின் குடும்பத்தாரின் நிலை என்ன?

    'லாட்டரி கிங்' என்று அழைக்கப்படும் சாண்டியாகோ மார்ட்டினின் குடும்பத்தில் மூன்று பேர் வெவ்வேறு கட்சி சார்பாக போட்டியிட்டனர். அவர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் என்ன நிலவரம்?

    மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் அதிமுக சார்பில் லால்குடி தொகுதியில் போட்டியிட்டார். அவர் தற்போது அத்தொகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அத்தொகுதியில் திமுக சார்பில் பாரிவள்ளல், தவெக சார்பில் கிருஷ்ணன், நாம் தமிழர் கட்சி சார்பில் மதன் ஆகியோர் போட்டியிட்டனர்.

    மார்ட்டினின் மருமகனான ஆதவ் அர்ஜூனா தவெக சார்பில் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டார். அவர் தற்போது 15 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அத்தொகுதியில், திமுக சார்பில் கார்த்திக் மோகன், அதிமுக சார்பில் விஜயகுமார், நாம் தமிழர் சார்பில் ரோஷிணி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    அதேபோன்று, மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் புதுச்சேரியில் லட்சிய ஜனநாயக கட்சி என்ற கட்சியை ஆரம்பித்து, தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்து காமராஜ் நகரில் போட்டியிட்டார். இத்தொகுதியில் தற்போது அவர் 10 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்திதியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

  16. திமுக, அதிமுகவை விஞ்சி விஜய்க்கு முதல் தேர்தலிலேயே பெருவெற்றி வசப்பட்டது எப்படி?

    தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, அதிமுக இரு பிரதான திராவிட கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் அவரைப் பின்னுக்குத் தள்ளி தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு முன்னிலை வகித்து வருகிறார். அவரது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த பலரும் தத்தமது தொகுதிகளில் பின்தங்கியுள்ளனர்.

    தற்போதைய நிலவரம் தமிழ்நாட்டில் மக்கள் மாற்றத்தை விரும்பினார்கள் என்பதையே காட்டுவதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

    தமிழ்நாட்டில், 76 ஆண்டுகள் வரலாறு கொண்ட திமுகவையும் 54 ஆண்டுகள் பழமையான அதிமுகவையும் பின்னுக்குத் தள்ளி மூன்று ஆண்டுகளுக்கும் குறைவாகவே வயதான ஒரு கட்சி ஆட்சியைப் பிடிக்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.

    இப்படிப்பட்ட முடிவுகளை இந்த தேர்தல் வழங்கும் அளவுக்கு தமிழக அரசியல் களத்தில் என்ன நடந்தது? விஜய் இதைச் சாத்தியமாக்கியது எப்படி? முழு கட்டுரையை வாசிக்க:

  17. "முதல் தேர்தலிலேயே பெரிய தாக்கம்" - விஜய்க்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து

  18. தவெக முன்னிலை; விஜய் வீட்டின் முன் என்ன நிலவரம்?

    விஜய் வீட்டின் முன்பு என்ன நிலவரம் என்பது குறித்து பிபிசி தமிழின் செய்தியாளர் விஜயானந்த், இந்த நேரலையில் விளக்குகிறார்.

  19. தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026 - முன்னிலை நிலவரம்

  20. தஞ்சாவூர் தொகுதியில் தவெக வெற்றி

    தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்ட தவெக வேட்பாளர் விஜய் சரவணன் 87705 வாக்குகள் பெற்று வெற்றி

    திமுக வேட்பாளர் ராமநாதன் பெற்ற வாக்குகள்: 70750 பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் பெற்ற வாக்குகள்: 26790