You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விசா முறைகேடு விவகாரத்தில் கார்த்தி சிதம்பரம் மீது வழக்குப் பதிவு
தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம். அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
எம்.ஆர். ஷோபனா
"இது போன்ற குதிரை பேரத்தைக் கண்டதில்லை" - திமுக எம்பி வில்சன்
அமமுக எம்.எல்.ஏ எஸ்.காமராஜின் பெயரில் ஆளுநரிடம் தவெக கடிதம் கொடுத்ததாக டிடிவி தினகரன் குற்றச்சாட்டு எழுப்பிய செய்தியை மேற்கோள்காட்டி திமுக மாநிலங்களவை உறுப்பினர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "தமிழ்நாடு பல ஆண்டுகளில் இது போன்ற குதிரை பேரத்தைக் கண்டதில்லை." எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்தப் பதிவில், "தமிழ்நாட்டு அரசியலில் மாற்றம் கொண்டு வரப்போகிறோம் என அவர்கள் கூறியதை இப்போது புரிந்து கொள்கிறேன். பதவியேற்பதற்கு முன்பாகவே இது அனைத்தும் நடக்கிறது," எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக எஸ்.காமராஜை தொடர்புகொள்ள முடியவில்லை என டிடிவி தினகரன் கூறிவந்த நிலையில் நள்ளிரவு எஸ்.காமராஜ் உடன் ஆளுநரை மீண்டும் சந்தித்தார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "காவல்துறையிலும் ஆளுநரிடத்திலும் புகார் அளிக்க இருக்கிறோம்." எனத் தெரிவித்தார்.
காணொளி: 'தவெகவுக்கு ஆதரவு கொடுக்கவில்லை' - அமமுக எம்.எல்.ஏ காமராஜ்
விஜய்க்கு இடதுசாரிகள் ஆதரவு, ஆளுநரை இருமுறை சந்தித்த தினகரன் - ஒரே நாளில் மாறிய காட்சிகள்
ரஷ்யா - யுக்ரேன் இடையே 3 நாள் போர்நிறுத்தம்: டிரம்ப் அறிவிப்பு
ரஷ்யா மற்றும் யுக்ரேன் இடையே மே 9 முதல் 11-ஆம் தேதி வரை போர் நிறுத்தம் அமலில் இருக்கும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இந்தப் போர் நிறுத்தத்தின்போது இரு நாடுகளும் 1,000 போர்க் கைதிகளைப் பரிமாறிக் கொள்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
"ரஷ்யாவில் வெற்றி தின கொண்டாட்டம் உள்ளது. யுக்ரேனிலும் கொண்டாட்டம் உள்ளது. ஏனெனில் அவர்களும் இரண்டாம் உலகப் போரில் அங்கம் வகித்தனர்," என டிரம்ப் தனது ட்ரூத் சோசியல் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
"இந்தப் போர் நிறுத்தத்தின் போது சண்டையுடன் தொடர்புடைய அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தப்படும். எனது கோரிக்கைக்கு இணங்கியதற்கு அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் ஜெலென்ஸ்கி இருவருக்கும் நன்றிக்கடன்பட்டுள்ளேன்." என்றும் அவர் தெரிவித்தாஸ்ர்.
மேலும் தனது பதிவில், "நீண்ட, கொடிய மற்றும் கடினமான போரின் முடிவுக்கான தொடக்கமாக இது இருக்கும் என நம்புகிறேன். இரண்டாம் உலகப் போர் தொடங்கியதில் இருந்து நடைபெற்ற மிகப்பெரிய மோதல் இது. அதனை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன." என்றும் குறிப்பிட்டார்.
ஒன்றாக பணிபுரிந்தாலும் 'உடன்பிறப்பு' என்பதை அறியாத சகோதரிகள் பல ஆண்டுகள் கழித்து உண்மை அறிந்த கதை
இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நியமனம்
இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த லெஃடினன்ட் ஜெனரல் என்.எஸ்.ராஜா சுப்ரமணி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனுடன் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ராணுவ விவகாரங்கள் துறையின் செயலாளர் பொறுப்பையும் அவர் வகிப்பார்.
தற்போது பொறுப்பில் இருக்கும் ஜெனரல் அனில் சவுகானின் பதவிக்காலம் மே 30-ஆம் தேதி உடன் முடிவடைவதாக பாதுகாப்பு அமைச்சகத்தின் எக்ஸ் தளப் பதிவு தெரிவிக்கிறது.
இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரியான என்.எஸ்.ராஜா சுப்ரமணிக்கு சுமார் 40 ஆண்டுகால அனுபவம் இருக்கிறது. 2025-ஆம் ஆண்டிலிருந்து தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தின் ராணுவ ஆலோசகராக செயலாற்றி வருகிறார்.
அதற்கு முன்னதாக துணை ராணுவ தளபதியாகவும், மத்திய கட்டளை மையத்தின் பொறுப்பிலும் இருந்துள்ளார். அதோடு வடக்கு மற்றும் மேற்கு ராணுவ நிலைகளிலும் முக்கியமான பொறுப்புகளில் இருந்துள்ளார்.
வைஸ் அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். மே 31-ஆம் தேதி முதல் இந்தப் பொறுப்பை அவர் ஏற்கிறார். தற்போது அவர் மேற்கு கடற்படை கட்டளை மையத்தின் தளபதியாக உள்ளார்.
விஜய் ஆட்சியமைக்க அழைப்பாரா? ஆளுநர் முன்னுள்ள வாய்ப்புகள் மற்றும் அதிகாரங்கள்
கேகேஆர் எழுச்சி: கடைசி இடத்தில் இருந்த அணி தொடர்ந்து 4 வெற்றிகளை பெற்றது எப்படி?
'ஃபின் ஆலன் அதிரடி சதம்' - 15 ஓவருக்குள் ஆட்டத்தை முடித்து கொல்கத்தா வென்றது எப்படி?
காணொளி: 'என்றென்றைக்கும் நன்றியோடு இருப்பேன் என விஜய் கூறினார்' - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
காணொளி: ஆயிரக்கணக்கான கோழிகள் கொல்லப்பட்டது ஏன்?
காணொளி: ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரிய விஜய்
திமுக - அதிமுக கூட்டணி சாத்தியமா? டிகேஎஸ் இளங்கோவன் பதில்
காணொளி: 'எங்கள் தலைவர் மீண்டு வருவார்' - தம்பிதுரை பேட்டி
கோவையில் ஆளுநருக்கு எதிராக காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
கோவையில் ஆளுநருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெகவை ஆளுநர் இன்னும் ஆட்சியமைக்க அழைக்கவில்லை. தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, ஆளுநரை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.
அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆளுநருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். தமிழக வெற்றி கழகத்தை ஆட்சி அமைக்க ஆளுநர் உடனடியாக அழைப்பு விடுக்க வேண்டும் என்றும் இல்லையெனில் ஆளுநர் பதவி விலக வேண்டும் எனவும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
இரான் - அமெரிக்கா, இஸ்ரேல்: ஒரே போரில் வென்றுவிட்டதாக கூறும் இரு தரப்புகள்
ஹோர்மூஸ் நீரிணை பிரச்னை எப்போது தீரும்? இரான் பதில்
போர் முடிவுக்கு வந்து அமெரிக்காவின் முற்றுகை நீக்கப்பட்ட பின்னரே ஹோர்மூஸ் நீரிணை சிக்கலைத் தீர்க்க முடியும் என்று இரான் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்காவின் வரைவுத் தீர்மானத்தையும் இரான் எதிர்த்துள்ளது.
"கடற்பயண சுதந்திரம்" (Freedom of Navigation) என்ற தலைப்பில் அமெரிக்கா ஐநா பாதுகாப்பு சபையில் சமர்ப்பிக்கும் வரைவு தவறானது மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று இரானிய தூதர் அமீர் சையத் இர்வானி தெரிவித்தார்.
பஹ்ரைனின் ஐநா பிரதிநிதி இந்த வரைவு பற்றிய தகவலை வழங்கினார். “இரான் வணிகக் கப்பல்கள் மீதான அனைத்துத் தாக்குதல்களையும் உடனடியாக நிறுத்த வேண்டும் மற்றும் அச்சுறுத்தல்களை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று இந்த வரைவு கோருகிறது. இந்த வரைவில் கண்ணிவெடிகளை இடுதல் மற்றும் சட்டவிரோத வரி வசூல் போன்ற சிக்கல்களும் அடங்கும், அவை ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று விவரிக்கப்பட்டுள்ளது" என்கிறார் அவர்.
இதற்கு பதிலளித்த இர்வானி, "நாடுகள் அழுத்தத்தின் கீழ் செயல்படாமல் தர்க்கம், நீதி மற்றும் கொள்கைகளின் அடிப்படையில் செயல்பட இரான் வேண்டுகோள் விடுக்கிறது. இந்த வரைவை நிராகரியுங்கள் மற்றும் இதற்கு ஆதரவு அளிக்காதீர்கள்" என்றார்.
இரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, ஐநா பொதுச்செயலாளர் மற்றும் பாதுகாப்பு சபையின் தலைவருக்கு எழுதிய கடிதத்தில், இதனை "ஒருதலைப்பட்சமான மற்றும் ஆத்திரமூட்டும் ஒரு வரைவு" என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழக அரசியல் அரங்கில் அடுத்தடுத்து மாறிய காட்சிகள் - 24 மணி நேரத்தில் நடந்தது என்ன?
விஜய் முன்னுள்ள வாய்ப்புகள் - தவெக ஆட்சி அமையாவிட்டால் என்ன நடக்கும்?