You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

விசா முறைகேடு விவகாரத்தில் கார்த்தி சிதம்பரம் மீது வழக்குப் பதிவு

தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம். அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

எம்.ஆர். ஷோபனா

  1. காணொளி: விஜய்க்கு ஆதரவா? - திமுக கூட்டணி கட்சிகளின் நிலைபாடு என்ன?

  2. காணொளி: '1 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி' - தவெக வேட்பாளர் பேசியது என்ன?

  3. காணொளி: தவெகவுக்கு ஆதரவா? திருமாவளவன் கூறுவது என்ன?

  4. காணொளி: விஜய் உடன் எந்த கட்சிகள் கூட்டணி?

  5. மு.க.ஸ்டாலின், 14 அமைச்சர்கள் தவெகவிடம் தோல்வி - வாக்கு வித்தியாசம் எவ்வளவு?

  6. நெரிசலில் 41 பேர் பலியான கரூரில் எந்தக் கட்சி வெற்றி? கரூர், கோவை மாவட்ட முடிவுகள்

  7. காணொளி: 'மாதம் ரூ.10 லட்சம்' - கோயா விற்பனையில் வருமானம் ஈட்டும் பெண்

  8. மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜி தோற்க எஸ்ஐஆர் ஒரு காரணமா? 5 விஷயங்கள்

  9. தமிழ்நாடு கள யதார்த்தத்தை பிரதிபலித்த கட்சியினரின் மாறுபட்ட உணர்வுகள்

  10. "நமக்கும் அவர்களுக்குமான வாக்கு விழுக்காடு வேறுபாடு என்பது 3.52% மட்டுமே” - மு.க. ஸ்டாலின்

  11. களத்தில் வித்தியாசம் காட்டி பெருவெற்றி கண்ட விஜய் - தமிழக தேர்தல் முடிவு உணர்த்தும் 5 விஷயங்கள்

  12. "தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியையே மக்கள் விரும்புகின்றனர்" - திருமாவளவன்

    தமிழ்நாட்டில் 'கூட்டணி ஆட்சி'யையே மக்கள் விரும்புகின்றனர் என, விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

    சட்டப்பேரவை தேர்தலில் முதன்முறையாக களம் கண்ட விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை கைப்பற்றியுள்ளது. திமுக கூட்டணி 73 இடங்களிலும் அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

    தேர்தல் முடிவுகள் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அதில், “ஆட்சி அமைப்பதற்குத் தேவையான தனிப் பெரும்பான்மை யாருக்கும் கிட்டாதவகையில் மக்கள் அளித்துள்ள இத்தீர்ப்பு மிகவும் நுட்பமான அரசியலை நமக்கு உணர்த்துகிறது. அதாவது, தமிழ்நாட்டில் 'கூட்டணி ஆட்சி'யையே மக்கள் விரும்புகின்றனர் என்பதே ஆகும். 2016 ஆம் ஆண்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மிகவும் அழுத்தமாக முன்மொழிந்ததை, பத்தாண்டுகளுக்குப் பின்னர் தற்போது வெகுமக்கள் வழிமொழிந்துள்ளனர் என்றே நம்புகிறோம்.” என தெரிவித்துள்ளார்.

    இந்த முடிவுகள் தனக்கு அதிர்ச்சியளிக்கக் கூடியதாக இருந்தாலும், அதிமுக தலைமையிலான “சாதிய- மதவாத சங் பரிவார் கூட்டணியை” மக்கள் வெகுவாகப் புறக்கணித்துள்ளனர் என்பது திமுக கூட்டணிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்பதில் மகிழ்ச்சி அடைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

    “மதவழி சிறுபான்மையினருக்கும் இன்னபிற விளிம்புநிலை மக்களுக்கும் எதிரான சங் பரிவார் அரசியலைத் தமிழ் மண்ணில் வேரூன்றவிடக் கூடாது என்பதே எமது கூட்டணியின் முதன்மையான நோக்கமாக இருந்தது.

    இத்தேர்தலில் எமது இலக்கு தமிழ் மண்ணில் மதசார்பின்மையைப் பாதுகாப்பதே ஆகும். ஆகவே, தவெகவை எமது எதிர்ப்பின் முதன்மை இலக்காக யாம் முன்னிறுத்தவில்லை. மாறாக, பாஜக, அதிமுக ஆகியவற்றை அம்பலப்படுத்துவதிலேயே தீவிரம் காட்டினோம். அதன்மூலம், அதிமுக -பாஜக எதிர்ப்பு வாக்குகள் திமுக கூட்டணிக்கு மட்டுமின்றி தவெகவுக்கும் இயல்பாய் பிரிந்துபோனதை அறியமுடிகிறது.” என அவர் தெரிவித்துள்ளார்.

  13. உங்கள் தொகுதி எம்எல்ஏ யார்? தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் வென்றவர்கள் பட்டியல்

  14. உங்கள் தொகுதி எம்.எல்.ஏ. யார்? புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு

  15. தமிழக அரசியலில் ரஜினி, கமலால் முடியாததை விஜய் சாதித்தது எப்படி?

  16. 'மிடில் ஓவர் யுத்தம்': டெல்லி கேபிட்டல்சுக்கு எதிராக சிஎஸ்கே அணிக்கு காத்திருக்கும் புதிய சவால்

  17. விஜய்க்கு ரஜினிகாந்த் வாழ்த்து

  18. மு.க.ஸ்டாலின் ஹாட்ரிக் வெற்றி பெற்ற கொளத்தூரில் இம்முறை தோற்றது ஏன்?

  19. அமைச்சர் பெரியகருப்பனை ஒரு வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்திய தவெக வேட்பாளர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சீனிவாச சேதுபதி, அமைச்சர் பெரியகருப்பனை ஒரு வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

    நேற்று (மே 4) வாக்கு எண்ணிக்கையின்போது இருவருக்கும் கடுமையான போட்டி நிலவியது. இந்நிலையில், கடைசி சுற்றான 30ம் சுற்றின் முடிவில் சீனிவாச சேதுபதி 83,375 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதேசமயம், பெரியகருப்பன் 83,374 வாக்குகள் பெற்று, ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.

  20. அதிக இடங்களில் வெற்றி பெற்ற தவெக - சில தகவல்கள்

    தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகியுள்ளன. முடிவுகள் குறித்த முக்கிய தகவல்களை சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.

    • சட்டப்பேரவை தேர்தலில் முதன்முறையாக களம் கண்ட விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை கைப்பற்றியுள்ளது. திமுக கூட்டணி 73 இடங்களிலும் அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
    • ஆட்சியமைக்க 118 தொகுதிகள் வேண்டும் என்ற நிலையில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனால், தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது. எனவே, அக்கட்சி ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்கலாம் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
    • தவெக தலைவர் விஜய் தான் போட்டியிட்ட பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். அதேசமயம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்தார்.
    • விஜய்க்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்து குவிந்துவரும் நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோதி உள்ளிட்டோரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
    • திமுக சிறப்பான எதிர்க்கட்சியாக செயல்படும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
    • “மறைந்த தலைவர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் நல்லாசியுடன் ஃபீனிக்ஸ் பறவை போல், அதிமுக மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பும்.” என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.