You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

விசா முறைகேடு விவகாரத்தில் கார்த்தி சிதம்பரம் மீது வழக்குப் பதிவு

தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம். அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

எம்.ஆர். ஷோபனா

  1. ஏஐ மூலம் அமைச்சரின் போலி கையெழுத்தைப் போட்டு மோசடி - அம்பலமானது எப்படி?

  2. டிஜிட்டல் மோசடிகளில் இந்தியர்கள் இழந்த ரூ.23,718 கோடி - ரிசர்வ் வங்கி என்ன செய்ய முடியும்?

  3. செல்போன்களுக்கு வந்த திடீர் எச்சரிக்கை செய்தி: அரசு கொடுத்த விளக்கம் என்ன?

    இந்தியாவில் இன்று காலை பலருடைய ஸ்மார்ட்போன்களுக்கு திடீரென பலத்த சத்தத்துடன் 'எமர்ஜென்சி அலர்ட்' வந்தது.

    இது இந்திய அரசால் அனுப்பப்பட்ட அதிகாரப்பூர்வ சோதனைச் செய்தி.

    பேரிடர் காலங்களில் மக்களுக்கு நேரடியாகவும், உடனுக்குடனும் அவசர கால எச்சரிக்கைகளைச் சென்றடையச் செய்வதே இந்தச் சோதனையின் நோக்கம் என்று அரசு தெரிவித்துள்ளது.

    இது குறித்துத் தொலைத்தொடர்புத் துறை தனது எக்ஸ் பக்கத்தில், "உங்கள் தொலைபேசிக்கு எச்சரிக்கை செய்தி வந்தால் பதற்றமடைய வேண்டாம். இது அவசர கால எச்சரிக்கை அமைப்பின் ஒரு பகுதிதான். பேரிடர் காலங்களில் சரியான தகவல்கள் சரியான நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்ய இந்தச் சோதனை நடத்தப்படுகிறது." என்று தெரிவித்துள்ளது.

    மக்களின் செல்போன்களுக்கு வந்த அந்த எச்சரிக்கை செய்தியில், "இந்தியா உள்நாட்டுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 'செல் பிராட்காஸ்ட்' சேவையைத் தொடங்கியுள்ளது.

    இதன் மூலம் குடிமக்களுக்குப் பேரிடர் குறித்த தகவல்கள் உடனடியாகக் கிடைக்கும். விழிப்புணர்வுள்ள குடிமக்கள், பாதுகாப்பான தேசம்," என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    மேலும், "இந்தச் செய்தியைப் பெறுபவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை. இது ஒரு சோதனைச் செய்தி மட்டுமே," என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இது குறித்துத் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தனது எக்ஸ் தளத்தில், "எதிர்காலத்தில் இந்த அமைப்பின் மூலம், ஏதேனும் பேரிடர் அல்லது அவசர நிலையின்போது இருப்பிடம் மற்றும் உள்ளூர் மொழிகளுக்கு ஏற்ப உடனடியாக எச்சரிக்கைகளை அனுப்ப முடியும். குடிமக்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தவும், பேரிடர் காலங்களில் தகவல்களை விரைவாகக் கொண்டு சேர்க்கவும் எடுக்கப்பட்ட ஒரு முக்கியமான நடவடிக்கை இது," என்று பதிவிட்டுள்ளார்.

  4. இறுதிச்சடங்குகளை ஒழுங்குபடுத்த தனிச் சட்டமா? தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற உத்தரவு விவரம்

  5. காணொளி: பாகிஸ்தானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் புகழாரம்

  6. சென்னை - மும்பை மீண்டும் மோதல்: இரு அணிகளிலும் என்னென்ன மாற்றங்கள் இருக்கலாம்?

  7. ஜெர்மனியில் இருந்து 5,000 படை வீரர்கள் வாபஸ் - அமெரிக்கா முடிவு

    ஜெர்மனியிலிருந்து 5,000 படை வீரர்களை திரும்பப் பெற இருப்பதாக அமெரிக்க பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது. இரான் போர் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜெர்மன் சான்சலர் ஃப்ரெட்ரிச் மெர்ட்ஸ் இடையே ஏற்பட்டுள்ள கருத்து மோதலுக்கு நடுவே இந்த முடிவு வந்துள்ளது.

    "மெர்ட்ஸ் மோசமாக வேலை செய்து வருகிறார். அவருக்கு குடிவரவு மற்றும் எரிவாயு உட்பட அனைத்து விதமான பிரச்னைகளும் உள்ளன," என்று டிரம்ப் தனது ட்ரூத் சோசியல் பதிவில் தெரிவித்திருந்தார்.

    இத்தாலி மற்றும் ஸ்பெயினிலிருந்து அமெரிக்கப் படைகளை திரும்பப் பெறப் போவதாகவும் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தின்படி 36,000-க்கும் அதிகமான அமெரிக்க வீரர்கள் ஜெர்மனியில் உள்ளனர்.

    இது தொடர்பாக பென்டகன் செய்தி தொடர்பாளர் சான் பார்னெல், "ஐரோப்பாவில் உள்ள ராணுவ நிலையைப் பற்றி ஆழமான மறுஆய்விற்குப் பிறகு அங்குள்ள சூழ்நிலைகள் மற்றும் தேவைகளைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வீரர்கள் அமெரிக்காவிற்குத் திரும்புவது அடுத்த 6-இல் இருந்து 12 மாதங்களுக்குள் நடக்கும்." என்றார்.

  8. பாக்கெட்டில் வெங்காயம் இருந்தால் சுட்டெரிக்கும் வெயில் உங்களை ஒன்றும் செய்யாதா? அமைச்சர் யோசனையும் அறிவியல் உண்மையும்

  9. "போர் முடிந்துவிட்டது. ஆனால்..." - இரான் பற்றி டிரம்ப் கூறியது என்ன?

    இரான் அணு ஆயுதங்கள் பெற அனுமதிக்கப்படக்கூடாது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.

    1973-ஆம் ஆண்டின் அமெரிக்க போர் அதிகாரச் சட்டத்தின்படி, நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் அதிபரால் 60 நாட்கள் வரை ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள முடியும்.

    அதன்பிறகு அந்த நடவடிக்கையை நிறுத்த வேண்டும் அல்லது நாடாளுமன்ற ஒப்புதல் பெற வேண்டும். மேலும் அந்தச் சூழ்நிலைக்கு அவசர ராணுவ பாதுகாப்பு தேவைப்பட்டால் கூடுதல் 30 நாட்கள் கோரலாம்.

    ஆனால் இந்தப் போரை தொடர்வதற்கு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் அனுமதி தேவையில்லை என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    "பிப்ரவரி 28-ஆம் தேதி தொடங்கிய போர் தற்போது முடிவடைந்துவிட்டது. ஆனால் இரான் உடனான மோதலை அமெரிக்கா விரைவில் முடித்துவிடாது. ஏனெனில் அப்படிச் செய்தால் சில ஆண்டுகள் கழித்து இதே பிரச்னையை மீண்டும் சந்திக்க நேரிடலாம்," என்றார்.

    உலகிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் அனைத்து ஆயுதங்கள், முதன்மையாக அணு ஆயுதங்களை ஒழிக்க அமெரிக்கா முயற்சிக்கும் என்று டிரம்ப் கூறினார்.

    இரானின் அணுசக்தி திட்டத்தை இலக்கு வைப்பது ஒரு "முக்கியமான நகர்வு" எனக் குறிப்பிட்ட அவர் அது மேற்கொள்ளப்படவில்லை என்றால் "இரான் இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கின் இதர பகுதிகளையும் அழிக்கும்." எனத் தெரிவித்தார்.

    அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரான் இடையே போர்நிறுத்தம் இருந்து வரும் நிலையில் பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

  10. காணொளி: விலங்குகளின் கொம்புகளில் கலை வடிவம் காணும் சம்பல் கலைஞர்கள்

  11. சீனாவுக்கான பதிலடியாக கருதப்படும் கிரேட் நிகோபார் திட்டம் பற்றி ராகுல் விமர்சனம் - பாஜக கூறுவது என்ன?

  12. கோஹினூர் வைரம் 'தென்னிந்திய கோவிலில்' இருந்து முகலாயர் வசமாகி, பிரிட்டன் சென்றது எப்படி?

  13. 'எந்த பெரிய ஹீரோ இப்படி செய்வார்?' - அஜித் உடனான அனுபவங்களை பகிரும் திரை பிரபலங்கள்

  14. இரான் போரால் உலகம் முழுவதும் சாமானியர் சந்திக்கும் 5 பிரச்னைகள்

  15. ராஜஸ்தானுக்கு எதிரான டெல்லி வெற்றி சிஎஸ்கே உள்ளிட்ட 6 அணிகளுக்கு ஒரு வகையில் சாதகம் - எப்படி?

  16. ராகுல், ஸ்டார்க் அபாரம் - 225 இலக்கை சேஸ் செய்து டெல்லி வெற்றி பாதைக்கு திரும்பியது எப்படி?

  17. காணொளி: நாசிக் டிசிஎஸ் வழக்கின் தற்போதைய நிலை என்ன?

  18. காணொளி: பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்யும் சீனா

  19. காணொளி: மயக்கமடைந்த பள்ளி பேருந்து ஓட்டுநர், துரிதமாக செயல்பட்ட மாணவர்கள்

  20. காணொளி: 'இந்தியா- பாகிஸ்தான் போரில் 11 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன' – டிரம்ப்