You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

விசா முறைகேடு விவகாரத்தில் கார்த்தி சிதம்பரம் மீது வழக்குப் பதிவு

தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம். அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

எம்.ஆர். ஷோபனா

  1. மேடையில் விஜயுடன் ராகுல் காந்தி

  2. முதலமைச்சராக பதவியேற்கும் விஜய் - முக்கியத்துவம் என்ன? நேரலை

    முதலமைச்சராக விஜய் பதவியேற்பதை நேரலையில் காண...

  3. ஆளுநரை வரவேற்ற விஜய்

    பொறுப்பு ஆளுநர் அர்லேகர் தற்போது நேரு உள்விளையாட்டு அரங்கத்துக்கு வருகை தந்துள்ளார். அவருக்கு விஜய் பொன்னாடை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

  4. விஜய் பதவியேற்பு விழாவில் திரிஷா

  5. 9 பேர் அமைச்சர்கள் பட்டியல் வெளியீடு

    விஜயுடன் இன்று 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்கின்றனர்.

    தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன், பிரபு, கீர்த்தனா ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்பதாக, ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  6. விஜய்க்கு பிரேமலதா வாழ்த்து

    தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கவிருக்கும் விஜய்க்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கவிருக்கும் எங்க வீட்டு பையன் விஜய் அவர்களுக்கு மனபூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், தமிழக மக்களின் நலனுக்கும் சிறந்த நிர்வாகத் திறமையுடன் செயல்பட்டு, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் என, அன்புத் தம்பி விஜய் அவர்களுக்கு கேப்டன் (விஜயகாந்த்) அவர்களின் சார்பாகவும், தேமுதிகவின் சார்பாகவும் எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

  7. நேரு உள்விளையாட்டு அரங்கத்திலிருந்து சில புகைப்படங்கள்

    தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்கவுள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்திலிருந்து சில புகைப்படங்கள்:

  8. முதலமைச்சராக பதவியேற்கும் விஜய் - விரிவான தகவல்களை அறிய

    தமிழ்நாடு முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று காலை 10 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பதவியேற்கிறார். விஜய் மற்றும் அமைச்சர்களுக்கு தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறார்.

    மே 13-ம் தேதி அன்றோ அல்லது அதற்கு முன்னரோ சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பைக் கோருமாறு விஜயை ஆளுநர் அறிவுறுத்தியதாக ஆளுநர் மாளிகை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விஜய் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக, மக்களவை எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி சென்னைக்கு விமானம் மூலம் வருகை தருகிறார்.

    முன்னாள் முதலமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆட்சியமைக்கும் புதிய கட்சிக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

  9. ஒரு வாக்கில் வெற்றி: தவெக வேட்பாளருக்கு எதிரான மனு இன்று விசாரணை

    திருப்பத்தூர் தொகுதியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி எம்எல்ஏவாக பதவியேற்க தடை விதிக்க கோரிய வழக்கு இன்று காலை 10.30 மணிக்கு அவசர வழக்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

    திமுக வேட்பாளர் பெரியகருப்பன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது.

    நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதியில், தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி, திமுக வேட்பாளர் பெரியகருப்பனை விட ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டிருந்தார்.

  10. விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்க புறப்பட்டார் ராகுல்

    காலை 10 மணியளவில் விஜய் முதலமைச்சராக பதவியேற்கும் நிலையில் மக்களவை தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி சென்னைக்கு விமானம் மூலம் வருகை தருகிறார். இதற்காக, டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அவர் புறப்படுகிறார்.

    தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக ஆட்சியமைப்பதற்கு முதல் கட்சியாக காங்கிரஸ் ஆதரவளித்தது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் 5 இடங்களை வென்றிருந்தது.

  11. விஜய் தமிழக முதல்வராகிறார் - இதுவரை நடந்தது என்ன?

    தமிழ்நாடு முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று பதவியேற்கிறார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் காலை 10 மணிக்கு பதவியேற்பு விழா தொடங்குகிறது.

    தேர்தல் முடிவுகள் வெளியானதிலிருந்து தற்போது வரை என்ன நடந்தது என்பதை இங்கே சுருக்கமாக பார்க்கலாம்:

    • தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியாயின. இதில், எந்த கட்சிக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்கவில்லை. தவெக 108 இடங்களை பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
    • திமுக கூட்டணி 73 இடங்களிலும் அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன.
    • திமுக கூட்டணியில் 5 இடங்களை பிடித்துள்ள காங்கிரஸ் முதல் கட்சியாக தவெகவுக்கு ஆதரவளித்தது.
    • திமுக கூட்டணியில் தலா 2 இடங்களை பிடித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தன.
    • அமமுக சார்பில் சட்டப்பேரவைக்கு தேர்வாகியுள்ள ஒரே உறுப்பினரான காமராஜ், தவெக ஆட்சியமைக்க அதரவு தருவதாக ஆளுநரிடம் போலி கடிதம் கொடுக்கப்பட்டதாக அமமுக பொதுச் செயலாளர் தினகரன் குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக ஆளுநரை இருமுறை நேரடியாக சந்தித்த தினகரன், காவல் நிலையத்தில் புகார் அளிக்கப் போவதாகவும் தெரிவித்தார்.
    • நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின் 2 எம்எல்ஏக்கள் வைத்துள்ள திமுக கூட்டணி கட்சியான விசிக தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவளித்தது. 2 எம்எல்ஏக்கள் உள்ள ஐயூஎம்எல் கட்சியும் நிபந்தனையற்ற ஆதரவளித்தது.
    • தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அர்லேகரை ஆளுநர் மாளிகையில் நேற்று இரவு சந்தித்த விஜய், ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
    • த.வெ.க. தலைவர் விஜயை தமிழ்நாட்டின் முதலமைச்சராக நியமிப்பதற்கான உத்தரவை பொறுப்பு ஆளுநர் அர்லேகர் வழங்கினார்.
    • மே 13ம் தேதி அன்றோ அல்லது அதற்கு முன்னரோ சட்டமன்றத்தின் நம்பிக்கை வாக்கெடுப்பைக் கோருமாறு விஜயை ஆளுநர் அறிவுறுத்தியதாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  12. ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது குஜராத் டைட்டன்ஸ்

  13. காணொளி: ஆளுநரை விஜய் சந்தித்த போது நடந்தது என்ன?

  14. "தர்பூசணியில் எலி நச்சு" - மகாராஷ்டிராவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மரணத்திற்கு காரணம் என்ன?

  15. தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் - நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் அறிவுறுத்தல்

  16. தவெக ஆட்சியை தக்கவைப்பதில் விஜய்க்கு காத்திருக்கும் சவால்கள் என்ன?

  17. "குடியரசுத் தலைவர் ஆட்சி வராமல் தடுக்கவே ஆதரவு" - திருமாவளவன்

  18. மேற்கு வங்கத்தில் முதன் முறையாக பாஜக ஆட்சி - முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்பு

  19. காணொளி: கல்லறைகளுக்கு நடுவே சாப்பாடு மேஜை - பிரபலமாகும் லக்கி உணவகம்