You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

விசா முறைகேடு விவகாரத்தில் கார்த்தி சிதம்பரம் மீது வழக்குப் பதிவு

தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம். அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

எம்.ஆர். ஷோபனா

  1. காணொளி: எம்எல்ஏவாக எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற தருணம்

  2. எம்எல்ஏவாக எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற தருணம்

    எடப்பாடி தொகுதி எம்.எல்.ஏ.வாக கே.பழனிசாமி பதவியேற்ற காட்சி இது.

  3. காணொளி: உதயநிதி எம்எல்ஏவாக பதவியேற்ற தருணம்

  4. எம்எல்ஏவாக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலின்

  5. சட்டப்பேரவைக்கு வெற்றி சான்றிதழை எடுத்து வராத அமைச்சர் கீர்த்தனா

    தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், தற்காலிக சபாநாயகர் கருப்பையா முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்து வருகிறார்.

    முதலாவதாக முதலமைச்சர் விஜய் பதவியேற்றார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள் பதவியேற்றனர்.

    இந்நிலையில், சிவகாசி எம்எல்ஏவும் அமைச்சருமான கீர்த்தனா தான் எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான சான்றிதழை வீட்டிலேயே வைத்துவிட்டு வந்ததால் சட்டப்பேரவையில் இன்று உறுப்பினராக பதவி ஏற்கவில்லை.

  6. காணொளி: விஜய் எம்எல்ஏவாக பதவியேற்ற தருணம்

  7. காணொளி: கரூர் நெரிசலில் குழந்தையை இழந்த இவர், விஜய் முதல்வரானது பற்றி கூறுவது என்ன?

  8. தமிழ்நாடு சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ.வாக பதவியேற்ற விஜய்

  9. விஜய் அரசில் இடம்பெற்றுள்ள 9 அமைச்சர்கள் யார்? முழு பின்னணி

  10. விஜயின் முதல் 3 உத்தரவுகளையும் நிறைவேற்றுவதில் உள்ள சவால்கள்

  11. வேளாண் கடன் தள்ளுபடி, 6 சிலிண்டர் இலவசம்: தவெக தேர்தல் அறிக்கையில் உள்ள 13 முக்கிய வாக்குறுதிகள்

  12. தமிழ்த்தாய் வாழ்த்து: முதல் நாளே எழுந்த சர்ச்சையும் தவெக விளக்கமும்

  13. தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது

    தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. தற்காலிக சபாநாயகர் கருப்பையா தலைமையில் கூட்டம் தொடங்கியது. முதலமைச்சர் விஜய் கோட்-சூட் அணிந்து அமர்ந்துள்ளார்.

    விஜய் எம்எல்ஏவாக பதவியேற்றுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து, அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் எம்எல்ஏக்கள் பதவியேற்றனர். தற்போது மற்ற எம்எல்ஏக்களும் பதவியேற்று வருகின்றனர்.

    சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி இருவரும் எதிரெதிரே அமர்ந்துள்ளனர்.

    பதவியேற்கும்போது திமுக எம்எல்ஏவும் முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சர் விஜய்க்கு வணக்கம் தெரிவித்தார்.

  14. இந்தியா - பாகிஸ்தான் ராணுவ மோதலுக்குப் பிறகு ஓராண்டில் நடந்துள்ள மாற்றம் என்ன? 3 முக்கிய விஷயங்கள்

  15. இரான் முன்மொழிவு பற்றி டிரம்ப் என்ன கூறினார்?

    போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அனுப்பப்பட்ட இரானின் முன்மொழிவை, "முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விவரித்துள்ளார்.

    தன்னுடைய ட்ரூத் சோஷியல் சமூக ஊடக தளத்தில் டொனால்ட் டிரம்ப், "இரானின் 'பிரதிநிதிகள்' என்று சொல்லப்படுபவர்களின் பதிலை நான் இப்போதுதான் படித்தேன். அது எனக்குப் பிடிக்கவில்லை, முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று பதிவிட்டுள்ளார்.

    இரான் அரசுடன் தொடர்புடைய செய்தி நிறுவனமான தஸ்னிம், பாகிஸ்தான் வழியாக இரான் ஒரு முன்மொழிவை அனுப்பியதாகத் தெரிவித்துள்ளது.

    இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் ஒரு மத்தியஸ்தராகச் செயல்படுகிறது. அந்த முன்மொழிவில், அனைத்து முனைகளிலும் உடனடியாகப் போர் நிறுத்தம், அமெரிக்கக் கடற்படை முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவருதல், மற்றும் இரான் மீது மேலும் தாக்குதல்கள் நடத்தப்படாது என்பதற்கான உத்தரவாதங்கள் ஆகியவை அடங்கியிருந்தன.

    முன்னதாக, இரான் அனுப்பிய முன்மொழிவு உண்மையானது மற்றும் நேர்மறையானது என்று ஒரு அதிகாரப்பூர்வ இரானிய வட்டாரம் அல் ஜசீரா தொலைக்காட்சிக்குத் தெரிவித்திருந்தது.

    தற்போது இரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே போர் நிறுத்தம் அமலில் உள்ளது, ஆனால் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து இரு நாடுகளுக்கும் இடையே இன்னும் எந்த ஒப்பந்தமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  16. முதல்வராக விஜயின் உரையும் முதல் நாள் நடவடிக்கையும் தரும் அரசியல் சேதி

  17. 'தங்கம் வாங்க வேண்டாம்' என்று மக்களுக்கு பிரதமர் மோதி வேண்டுகோள் ஏன்?

  18. ஹாட்ரிக் வெற்றியுடன் சிஎஸ்கே ஓரிடம் முன்னேற்றம்: பிளேஆஃப் வாய்ப்பு என்ன?

  19. "தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் தமிழ்நாடு அரசு விளக்கமளிக்க வேண்டும்" - திருமாவளவன்

    தமிழ்நாட்டின் கடன் தொடர்பாக முதலமைச்சர் விஜய் பேசியது குறித்து பதிலளித்துள்ள விசிக தலைவர் திருமாவளவன், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக ஒலிக்கப்பட்டது தொடர்பாகவும் தமிழ்நாடு அரசு விளக்கமளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாட்டின் கடன் அளவு ரூ.10 லட்சம் கோடி என்று வெறுமனே குறிப்பிடுவது தவறான புரிதலை ஏற்படுத்தும் எனக் குறிப்பிடும் திருமாவளவன், "ஏனெனில், கடனை எப்போதும் ஒரு குறிப்பிட்ட அளவுகோலோடு ஒப்பிட்டே மதிப்பிட வேண்டும். கடனை மதிப்பிடுவதற்கான சரியான முறை, அதனை மாநிலத்தின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியோடு (GSDP) ஒப்பிட்டுப் பார்ப்பதே ஆகும்.தமிழ்நாட்டின் கடன் அளவு, 15-ஆவது நிதிக் குழுவால் நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளுக்குள்ளேயே உள்ளது. கடனின் முழுமையான அளவுகளை மட்டும் சுட்டிக்காட்டி அச்சமூட்டுவது, அரசியல் நோக்கங்களுக்கு மட்டுமே பயன்படும்." எனத் தெரிவித்தார்.

    தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை பற்றி குறிப்பிட்ட திருமாவளவன், "இன்றைய நிகழ்வில் 'தமிழ்த்தாய் வாழ்த்து'ப் பாடல் மூன்றாவதாக ஒலிக்கப்பட்டிருக்கிறது. இந்த அணுகுமுறை மிகவும் அதிர்ச்சயளிப்பதாக உள்ளது. இது அதிகாரிகளின் கவனக்குறைவால் நிகழ்ந்ததாகக் கருத இயலவில்லை. மாறாக, மாண்புமிகு ஆளுநரின் விருப்பப்படியோ அல்லது ஆளுநரை மகிழ்விக்கவோ செய்தப்பட்டதா என்கிற கேள்வி இயல்பாகவே எழுகிறது. இது குறித்து விளக்கமளிக்க வேண்டியது முதலமைச்சரின் கடமையாகும்." என்றும் தெரிவித்தார்.

    மேலும் அவர், "இனிவரும் காலங்களிலும் அரசு விழாக்களில் 'வந்தே மாதரம்' பாடல் ஒலிக்கப்படுமா? அதுவும் முதலில் இடம்பெறுமா? அல்லது அப்பாடல் இனி ஒலிக்கப்படாமல் தவிர்க்கப்படுமா? அடுத்து, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு வழக்கம்போல முதலிடம் தரப்படுமா? இது தொடர்பாகவும் அரசு விளக்கமளிக்க வேண்டும்." என்றார்.

  20. காணொளி: முதலமைச்சராக விஜயின் முதல்நாள் - நகர்வுகள், சர்ச்சைகள் மற்றும் எதிர்வினைகள் என்ன?