பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு: 5 பேருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

பிரசுரிக்கப்பட்டது

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் இளம் பெண்களை ஏமாற்றி வல்லுறவு செய்து, அதனை வீடியோ எடுத்து பணம் பறித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த சபரிராஜன், சதீஸ், வசந்தகுமார், திருநாவுக்கரசு, மணிவண்ணன் ஆகியோருக்கு விதிக்கப்பட்டுள்ள நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு கடந்த ஆண்டு மார்ச் 12ம் தேதி குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறைக்கு (சிபிசிஐடி) மாற்றப்பட்டது. இருந்தபோதும் வழக்கை மத்தியப் புலனாய்வுத் துறைக்கு (சிபிஐ) மாற்ற வேண்டுமென கோரிக்கைகள் எழுப்பப்பட்டன.

அதையடுத்து இந்த வழக்கினை சிபிஐக்கு மாற்றியது தமிழக அரசு.

அவர்கள் ஐவரும் குண்டர் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரும் கோவையில் இருந்து சேலம் சிறைக்கு மாற்றப்பட்டனர்.

இவர்களின் நீதிமன்ற காவல் நேற்றுடன் நிறைவடைந்ததது. இதையடுத்து, சேலம் மத்திய சிறையில் இருந்து வீடியோ கான்பிரன்ஸ் மூலம் தலைமைக் குற்றவியல் நடுவர் ரவி முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

விசாரணையை இன்று ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த சூழ்நிலையில் இன்று வழக்கை விசாரித்த நீதிபதி நீதிமன்ற காவலை பிப்ரவரி 11ம் தேதி வரை நீட்டித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: