You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தெலங்கானா சிறுமி பாலியல் வழக்கு: சந்தேக நபர் தற்கொலையும் நீதித்துறை முன்னிற்கும் கேள்விகளும்
- எழுதியவர், மாடபூஷி ஸ்ரீதர்
- பதவி, டீன் - சட்டத்துறை, மஹிந்திரா பல்கலைக்கழகம், ஹைதராபாத்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
(இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். அவை, பிபிசியின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்)
செப்டம்பர் 9 ஆம் தேதி. ஹைதராபாதின் சைதாபாதில், கொடூரமான பாலியல் வன்புணர்வுக்குப் பிறகு ஆறு வயது சிறுமியை கொன்றது நிரூபிக்கப்பட்டால் மற்றும் நீதிமன்றம் அதை மிகஅபூர்வமான குற்றமாக கருதினால், குற்றவாளி சட்டப்படி தூக்கிலிடப்படலாம். ஏனெனில் இது இந்திய அரசியலமைப்பின் 21வது பிரிவின்படி வாழ்க்கை அல்லது சுதந்திரத்தை பறிக்கக்கூடிய சட்டத்தின் நிறுவப்பட்ட நடைமுறையின் கீழ் செய்யப்பட்டது. இந்த கட்டுரை, வாழ்க்கை மற்றும் சுதந்திரத்திற்கான உரிமையின் உத்தரவாதம் தவிர, குற்றவியல் நீதி பற்றிய அடிப்படைக் கொள்கையை நினைத்துப்பார்க்கிறது.
ஆனால், இந்த குற்றத்தில் சந்தேகப்படும் பல்லம்கொண்டா ராஜு, குற்றம் நடந்த 8 நாட்களுக்குள் இறந்துவிட்டார். அது ஒரு என்கவுன்ட்டர் அல்ல. அவர் 'தற்கொலை' மூலம் தண்டிக்கப்பட்டார். சிறுமி கொல்லப்பட்ட சம்பவத்தை எதிர்த்து ஒரு கும்பல் ஆர்பாட்டமும் நடத்தியது.
ஹைதராபாதில் உள்ள காவல் துறைக்கு இப்போது ராஜுவை விசாரிக்கவோ வழக்கு தொடரவோ எந்தப் பொறுப்பும் இல்லை. அவர்கள் தங்கள் நற்பெயருக்கு ஒரு குறுக்கு வழியையும், 'சட்டத்தின் நிறுவப்பட்ட செயல்முறை' மூலம் ராஜுவை தூக்கு மேடைக்கு கொண்டு செல்லும் சுமையிலிருந்து நிவாரணத்தையும் பெற்றனர்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பார்வையாளர்களுக்கும், கும்பலுக்கும், பல தசாப்தங்கள் எடுக்கக்கூடிய சலிப்பான நீதிமன்ற செயல்பாட்டில் ஆர்வம் இல்லை. இத்தகைய குற்றங்களை நியாயமான சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிரூபிக்க முடியுமா என்றும் போலீஸாருக்கு உறுதியாக தெரியவில்லை. ஏனெனில் செயல்திறன் போதுமான அளவிற்கு உள்ளதா என்ற சந்தேகமும் நிலவுகிறது.
நடுநிலை இல்லாத ஊடகங்கள், பொறுப்பற்ற சில சமூக ஊடக தளங்கள் மற்றும் காவல்துறை, விசாரணை ஏதும் நடத்தாமல், சரியான செயல்முறை இல்லாமல் ராஜுவை குற்றவாளியாக அறிவித்தன. கிரிமினல் நீதியின் அடிப்படை விதிகளின்படி சந்தேகம் வலுவாக இருந்தாலும்கூட, அது ஆதாரத்தின் இடத்தை எடுத்துக் கொள்ள முடியாது.
நாடாளுமன்ற உறுப்பினரும், மாநில காங்கிரஸ் கட்சித்தலைவருமான ரேவந்த் ரெட்டி, (அவர் தனது சொந்த கட்சியின் தலைவர் சசி தரூரை கழுதை என்று அழைத்து சமீபத்தில் மன்னிப்பு கேட்டு தனது அறிக்கையை திரும்பப்பெற்றார்).
ராஜுவை என்கவுன்ட்டரில் கொல்லுமாறு வெளிப்படையாகவே அரசிடம் கோரினார். ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி அரசின் அமைச்சர் மல்லாரெட்டி, இந்தக்கோரிக்கையை ஏற்று, ராஜு 'என்கவுன்டரில்' கொல்லப்படுவார் என்று அறிவித்தார். ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சியின் தலைவர் ஷர்மிளா ரெட்டி, ராஜுவை தேவுடு (கடவுள்) தண்டித்ததில் மகிழ்ச்சி என்றார். ராஜுவின் 'தற்கொலை'யால் காவல்துறை மற்றும் ஊடகங்கள் உட்பட அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர்.
இருப்பினும், ராஜுவின் மனைவியும் தாயும் சில தீவிரமான கேள்விகளை எழுப்பினார்கள்.
ராஜு பிடிபட்டதாகவும், ஆனால் அவரை 'என்கவுன்டர்' செய்ய உயர் அதிகாரி உத்தரவிட்டதால் அவர் கைது செய்யப்பட்டதாக காட்டவில்லை என்றும் காவல்துறையினர் கூறியதை கேட்டதாக, மனைவி மெளனிகா செய்தியாளர்களிடம். தெரிவித்தார்.
ராஜுவின் மனைவி, தாய் ஈரம்மா, சகோதரி அனிதா ஆகியோரை 10 ஆம் தேதி காவலில் எடுத்து, செப்டம்பர் 15 ஆம் தேதி வரை சைதாபாத் காவல் நிலையத்தில் போலீஸார் வைத்திருந்தனர். பயணத்திற்காக காவல்துறை 700 ரூபாய் கொடுத்ததாகவும் அவர்கள் செப்டம்பர் 16 ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் ராய்கிரியை அடைந்ததாகவும் மெளனிகா கூறினார். சில மணி நேரத்திற்குள், அதாவது செப்டம்பர் 16 அதிகாலையில் ராஜுவின் தற்கொலை செய்தி அவர்களை எட்டியது.
ராஜு பிடிபட்டார் என்றும் விசாரணையை விரைவுபடுத்துமாறு உள்துறை அமைச்சரிடம் கூறியுள்ளதாகவும், தெலங்கானா அமைச்சரும் முதலமைச்சரின் மகனுமான கேடி ராமாராவ் செப்டம்பர் 12 அன்று ட்வீட் செய்தார். இரண்டு நாட்களுக்குப் பிறகு அதாவது 14 ஆம் தேதி அவர், 'தவறான தகவலை' பகிர்ந்து கொண்டதற்காக மன்னிப்பு கேட்டார்.
தகவலின் எந்த பகுதி உண்மையானது என்பதை மக்கள் யூகிக்க வேண்டும். தெலுங்கானா காவல்துறையின் தொழில்முறை படையிடமிருந்து தப்பிக்கக்கூடிய தொழில்முறை குற்றவாளி அல்ல ராஜு. அவரது தலைக்கு 10 லட்சம் ரூபாய் சன்மானம் நிர்ணயிக்கப்பட்டது. ராஜுவின் புகைப்படங்கள் விளம்பரப்படுத்தப்பட்டு பரவலாக சுற்றில் விடப்பட்டது. இந்த முயற்சிகள் அனைத்தும் யாரிடமிருந்தும் எந்த தடயங்களையும் அளிக்காதது ஏன் என்பது தெரியவில்லை.
ராஜுவை முதலில் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் தற்கொலை செய்யும் அளவுக்கு அவர் பலவீனமானவர். அவர் நிஜ வாழ்க்கையின் வீரப்பன் மற்றும் சினிமா வாழ்க்கையின் ரஜினிகாந்தின் கலவையாக இருக்கக்கூடும் என்று மக்கள் நினைக்கலாம்.
ஏனெனில், ஆயிரக்கணக்கான காவல்துறையினர், அவர்களின் பல குழுக்கள் அவரைப் பிடிக்கத் தவறின. கூடவே அதிவேகமான கோனார்க் எக்ஸ்பிரஸ் மீது நேருக்கு நேர் மோதிய போதிலும், அப்படியே இருக்கும் அளவிற்கு அவரது உடல் அத்தனை வலிமையானது.
முகத்தில் சில காயங்கள், கையில் வெட்டு மற்றும் இன்னும் சில காயங்கள் தவிர, அவரது தலை உடையவில்லை, அவரது உடல் துண்டு துண்டாகவில்லை. அவர் இறப்பதற்காக ஓடும் ரயிலுக்கு முன்னே குதித்தார் என்று போலீசார் உறுதியாகக் கூறினர்.
மிகவும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், தற்கொலைக்கான காரணங்களை தங்களிடம் அவர் விரிவாக சொன்னது போல்,ஊடகங்கள் மற்றும் காவல்துறையினர் விளக்கம் அளித்தனர். அவரது தலைக்கு ரூ .10 லட்சம் சன்மானத் தொகை நிர்ணயிக்கப்பட்டதால் ஏற்பட்ட அவமானத்தை அவரால் தாங்க முடியவில்லை என்று போலீசார் விளக்கினார்கள்.
சம்மந்தப்பட்டவர்கள், ராஜுவின் தற்கொலைக் குறிப்பை தயார் செய்ய மறந்து விட்டதாகத் தெரிகிறது.
பாலியல் வன்கொடுமை தடுப்பு வழிமுறைகள்
குழந்தை பாலியல் வன்கொடுமையாளர்கள் மற்றும் கும்பல் பாலியல் வன்புணர்வாளர்கள் தங்கள் கொடூரமான குற்றங்களுக்காக என்கவுன்ட்டரில் கொல்லப்பட வேண்டும் என்பது இப்போது தெளிவாகியுள்ளது. ஆனால் என்கவுன்ட்டரை நியாயப்படுத்தும் சுய பாதுகாப்பு கதையானது, அரசியலமைப்பு நீதிமன்றங்கள் தலையிடும் அபாயத்தையும், மனித உரிமை ஆணையங்களின் விசாரணைகளையும் எதிர்கொண்டாக வேண்டும்.
எனவே குற்றவியலின் ஒரு புதிய கோட்பாடு உருவாகியுள்ளது, அதாவது, தற்கொலைக் கோட்பாடு. இது வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டால், எந்த போலீஸ் அதிகாரி மீதும் சந்தேகம் வராது. கையிருப்பில் உள்ள தோட்டாக்களின் எண்ணிக்கை கணக்கை போலீஸ் மாற்ற வேண்டியதில்லை. எல்லா மக்களும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். காவல்துறை மக்களின் நண்பனாக மாற போதுமான நேரம் அதனிடம் இருக்கும். ஆளும் கட்சி மற்றொரு தேர்தலை வெல்லலாம். பரபரப்பான குற்றவியல் வழக்கை மிக எளிதாக முடித்து உடனடி நீதி வழங்கலாம்.
சில வருடங்களுக்கு முன்பு கால்நடை மருத்துவர் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரது பெற்றோர் பலமுறை வேண்டுகோள் விடுத்தும் காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்யாததால் சில காவல்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த தாமதத்தின் காரணமாக கொடூரமான கற்பழிப்பு மற்றும் கொலை சம்பவத்தை தடுக்க முடியவில்லை. அதன்பிறகு, சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு சந்தேக நபர்கள் பிடிபட்டனர். இது ஒரு பெரிய வெற்றியாக அதிகாரபூர்வமாக கூறப்பட்டது. பின்னர், சந்தேக நபர்கள் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர். உச்சநீதிமன்றம், சட்டத்தின் ஆட்சி பற்றி கவலைப்பட்டது மற்றும் காவல்துறையின் தற்காப்பு கோட்பாடு குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டது.
சிவில் உரிமை அமைப்புகள் குற்றத்தை நிரூபிக்க தீவிரமாக முயன்றன. இதற்கிடையில், செப்டம்பர் 9 குற்றம் நடந்தது. திஷா சம்பவத்தில் போலீசாரின் பங்கு பற்றிய விசாரணை, அவர்களின் உத்திகளை மாற்றியமைத்தது.
சமூகம், மாநில அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி., ஊடகங்கள் மற்றும் குறிப்பாக சமூக ஊடகங்கள் தண்டனை என்ன என்பதை முடிவு செய்தன.ராஜு தீர்ப்பை ஏற்றுக்கொண்டார்.
உயர் நீதிமன்றங்களில் 455 காலியிடங்களுடன், 3.6 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், ராஜுவின் ஏழைத் தாயால் தனது மகன் விஷயத்தில் விரைவாக நீதி வழங்கப்பட்டதை புரிந்து கொள்ள முடியவில்லை. மத்தியிலும் மாநிலங்களிலும், நாடாளுமன்றம், சட்டமன்றங்கள் மற்றும் அமைச்சரவைகளில் நுழைந்துள்ள அரசியல் கிரிமினல்கள் மீதான விரைவான விசாரணை , உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடந்து வருகிறது.
ஒருவேளை இந்தக்குற்றமும் தண்டனையும், அதன் அதிவேக குற்றவாளி என முடிவு செய்தல் மற்றும் தண்டனை வழங்கலுக்காக, வரலாற்றில் பதிவாகலாம். கிரிமினல் நீதி, சட்டத்தின் ஆட்சி அல்லது அரசியலமைப்பு அறநெறி போன்றவற்றின் அடிப்படைக் கொள்கைகளைப் பற்றி விவாதிக்கவும் எழுதவும், சட்ட அறிஞர்கள் போதுமான வாய்ப்பைப் பெறுவார்கள்.
பிற செய்திகள்:
- இலங்கை ராஜதந்திரம் தோல்வி அடைகிறதா? சர்வதேச அரங்கில் இனி என்ன நடக்கும்?
- பதவி விலகிய பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங்: "மூன்று முறை அவமானப்படுத்தப்பட்டேன்"
- குத்தி கொலை செய்யப்பட்ட பாலின தொழிலாளியின் பெயரை பெல்ஜியம் ஒரு சாலைக்கு வைப்பது ஏன்?
- பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வருவதில் என்ன சிக்கல்?
- கொரோனா தடுப்பு மருந்துக்கு பிறகு மாதவிடாய் சுழற்சியில் மாற்றமா? – விரிவான ஆய்வுக்கு கோரிக்கை
- முக்கியமான ஆசியா - பசிபிக் வணிக ஒப்பந்தத்தில் சேர சீனா விண்ணப்பம்: ஆக்கஸ் எதிரொலியா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்