கொரோனா வைரஸ்: தமிழக அரசு அறிவித்துள்ள புதிய தளர்வுகள் என்னென்ன? - விரிவான தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தினத்தந்தி: "தமிழக அரசு அறிவித்துள்ள புதிய தளர்வுகள் என்னென்ன?"
தமிழகத்தில் எல்லா அரசு அலுவலகங்களும் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்குகிறது. அரசு ஊழியர்கள் சுழற்சி அடிப்படையில் வாரத்தில் 6 நாட்கள் பணிபுரிவார்கள்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது.
நாளுக்கு நாள் அதிகரித்து வந்த கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த மத்திய- மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட 3-வது கட்ட ஊரடங்கு நாளை முடிவுக்கு வரும் நிலையில், மாறுபட்ட தளர்வுகளுடன் அடுத்த கட்ட ஊரடங்கு நாளை மறுநாள் செயல்பாட்டுக்கு வர உள்ளது.
இந்த நிலையில் தமிழக அரசின் அனைத்து அலுவலகங்களும் நாளை மறுநாள்(திங்கட்கிழமை) முதல் பாதி எண்ணிக்கையிலான ஊழியர்களுடன் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் தலைமைச்செயலாளர் கே.சண்முகம் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஊரடங்கு உத்தரவு குறித்து 3-ந்தேதி பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணையில், அரசு அலுவலகங்களில் அதிகபட்சமாக 33 சதவீத ஊழியர்கள் பணியாற்றலாம் என்று கூறப்பட்டு இருந்தது.
இதன் தொடர்ச்சியாக, 18ஆம் தேதியில் (திங்கட்கிழமை) இருந்து அனைத்து அரசு அலுவலகங்களும் 50 சதவீத ஊழியர்களுடன் சமூக இடைவெளியை கடைப்பிடித்து இயங்க அனுமதிக்கப்படுகிறது.
ஏற்கனவே பணி நேரத்தை இழந்திருப்பதால் அந்த இழப்பை ஈடுகட்டும் வகையில், வாரத்தில் சனிக்கிழமை உள்பட 6 நாட்களையும் பணி நாட்களாக முறைப்படுத்தப்பட்டுள்ளது. 6 நாட்களும் தற்போதுள்ள வழக்கமான பணி நேரத்தை பின்பற்றி அலுவலகம் இயங்க வேண்டும்.
அரசு ஊழியர்கள் 2 பிரிவாக பிரிக்கப்பட வேண்டும். முதல் வாரத்தின் திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமையில் முதல் பிரிவினர் பணியாற்றுவார் கள். புதன்கிழமை, வியாழக்கிழமையில் இரண்டாம் பிரிவினரும்; வெள்ளிக்கிழமை, சனிக்கிழமையில் முதல் பிரிவினரும் பணியாற்ற வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images
அடுத்த வாரத்தின் திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமையில் இரண்டாம் பிரிவினரும், புதன்கிழமை, வியாழக்கிழமையில் முதலாம் பிரிவினரும், வெள்ளிக்கிழமை, சனிக்கிழமையில் இரண்டாம் பிரிவினரும் பணியாற்ற வேண்டும்.
இந்த மாற்று வேலைத் திட்டத்தின்படி ஊழியர் வீட்டில் இருந்தாலும், வேலைக்கு அழைத்தால் அலுவலகத்துக்கு வர வேண்டும். சம்பளப் பட்டியலின்படி குரூப் ஏ பிரிவில் வரும் அனைத்து அரசு ஊழியர்களும் அனைத்து வேலை நாட்களிலும் அலுவலகத்துக்கு வர வேண்டும்.
அதுபோல, சம்பளப் பட்டியலின்படி அல்லாமல், அலுவலகத்தின் தலைமைப் பணியில் இருக்கும் ஊழியர்களும் அனைத்து வேலை நாட்களிலும் அலுவலகத்துக்கு வர வேண்டும். அனைத்து அதிகாரிகள், ஊழியர்களும் பணிக்கு வர தயாராக இருப்பதோடு, மின்னணு முறை தகவல் பரிமாற்றத்தையும் ஏதுவாக வைத்திருக்க வேண்டும்.
தலைமைச் செயலகத்தில் இருந்து மாவட்டம் மற்றும் கள அளவிலான அரசு அலுவலகங் கள், ஆணையங்கள், வாரியங் கள், அரசு கழகங்கள், நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு நிறுவனங்களும் இந்த வகையில் இயங்கும்.
போலீஸ், மாவட்ட நிர்வாகம், அரசுக் கருவூலம், உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்கள் கடந்த மார்ச் 25-ந்தேதி பிறப்பிக்கப்பட்ட ஆணைப் படி செயல்படும். அலுவலகத்துக்கு வந்து செல்வதற்கான போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த அரசாணையைத் தொடர்ந்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கொரோனா நோய்க் கட்டுப்பாட்டு பகுதியில் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு இந்த அரசாணை பொருந்தாது" என்று கூறப்பட்டுள்ளது.


- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

தினமணி: டாஸ்மாக் பெயரில் போலி இணையதளம் - ஏமாற்றப்பட்ட மதுப்பிரியா்கள்
மது விற்பதாக டாஸ்மாக் பெயரில் போலி இணையதளம் உருவாக்கியவா்கள் மீது சென்னை சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும் அந்த இணையதளத்தையும் போலீஸாா் முடக்கினா்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
பொது முடக்கத்தால் மூடப்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடைகள் கடந்த வாரம் திறக்கப்பட்டன. இந்நிலையில் சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவின் விளைவாக இரு நாள்களில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் மீண்டும் மூடப்பட்டன.

பட மூலாதாரம், Getty Images
மேலும், இணையதளம் மூலம் டாஸ்மாக் நிறுவனம் மது விற்கலாம் என நீதிமன்றத்தால் அறிவுறுத்தப்பட்டது. இதை பயன்படுத்தி ஒரு மோசடி கும்பல், டாஸ்மாக் நிறுவனத்தின் இணையதளம் போலவே போலியாக இணையதளத்தை உருவாக்கி மது விற்பதாக விளம்பரம் செய்துள்ளது.
இதைப் பாா்த்த சில மது பிரியா்கள்,அந்த போலி இணையதளத்தில் பணத்தை செலுத்தி மதுப்பாட்டில்களை ஆா்டா் செய்திருக்கின்றனா். ஆா்டா் செய்து சில நாள்களுக்கு பின்னரே, அது போலியான இணையதளம் என்பது மது பிரியா்களுக்கு தெரியவந்துள்ளது. மேலும் இந்த மோசடி கும்பல், அந்த போலி இணையதளத்தை சமூக ஊடகங்கள் மூலம் விளம்பரம் செய்துள்ளது. இதை நம்பி பலா், மது வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இணையதளத்தில் பணத்தை செலுத்தி ஏமாந்துள்ளனா்.
இது தொடா்பாக, டாஸ்மாக் நிறுவனத்துக்கு ஏராளமான புகாா்கள் வந்தன.இதையடுத்து டாஸ்மாக் அதிகாரிகள், இந்த மோசடி குறித்து சென்னை பெருநகர காவல்துறையின் சைபா் குற்றப்பிரிவில் வெள்ளிக்கிழமை புகாா் செய்தனா். அந்த புகாரின் அடிப்படையில் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா், வழக்குப் பதிவு செய்தனா். மேலும் அந்த போலி இணையதளத்தையும் உடனடியாக முடக்கினா்.
இது தொடா்பாக போலீஸாா் நடத்திய விசாரணையில், இந்த மோசடி கும்பல் நூற்றுக்கணக்கான நபா்களை மோசடி செய்திருப்பதும், மது ஆா்டா்கள் செய்தவா்களின் வங்கி கணக்கு தகவல்கள், ரகசிய எண்கள், பணபரிமாற்றங்கள் உள்ளிட்ட விவரங்களையும் தங்களது போலி இணையதளம் மூலம் திருடியிருப்பதும் தெரியவந்துள்ளது.

இந்து தமிழ் திசை: "வங்கக் கடலில் 'உம்பன்' புயல் இன்று உருவாகிறது"

பட மூலாதாரம், Getty Images
வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று 'உம்பன்' புயலாக மாறுகிறது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ந.புவியரசன் நேற்று கூறியது:
தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. நாளை (இன்று) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், பின்னர் புயலாகவும் வலுப்பெற உள்ளது. இந்த புயலுக்கு தாய்லாந்து நாட்டு மொழியில் 'உம்பன் (Amphan)' என பெயரிடப்பட்டுள் ளது. இது 17-ம் தேதி வரை வடமேற்கு திசையில் நகர்ந்து, 18-ம் தேதி வடகிழக்கு திசையை நோக்கி நகரக்கூடும்.
இதன் காரணமாக ஆந்திரா, ஒடிசா, மேற்குவங்க கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும். எனவே 19-ம் தேதி வரை மீனவர்கள் யாரும் வங்கக் கடல் பகுதியில் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












