You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சென்னை - யாழ்ப்பாணம் இடையிலான வர்த்தக விமான சேவை இன்று தொடக்கம்
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான வர்த்தக விமான சேவைகள் இன்று முதல் அதிகாரபூர்வமாக தொடங்கப்பட்டுள்ளன.
ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்தின் துணை நிறுவனமான ஏர் எலயன்ஸ் விமான நிறுவனத்தினால் இந்த சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
வாரம் ஒன்றுக்கு மூன்று முறை இந்த விமான சேவைகள் இடம்பெறவுள்ளன.
ஏர் எலயன்ஸ் நிறுவனத்தின் விமானமொன்று சென்னையிலிருந்து இன்று காலை 10.35 மணியளவில் புறப்பட்டு, பிற்பகல் 12 மணிக்கு யாழ் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
குறித்த விமானத்தில் 15 பயணிகள் சென்னையிலிருந்து யாழ்ப்பாணம் வருகை தந்திருந்தனர்.
பின்னர் அவ்விமானம் யாழ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பிற்பகல் 12.45 மணிக்கு புறப்பட்டு 2.10 மணிக்கு சென்னை விமான நிலையத்தைச் சென்றடைந்தது.
சென்னைக்கான விமான பயணத்தில் யாழ்ப்பாண வணிகர் குழு, மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் உள்ளிட்டோர் சென்னை நோக்கி பயணித்தனர்.
இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமான யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம், கடந்த அக்டோபர் 17ஆம் தேதி ஜானதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டது.
உள்நாட்டு யுத்தம் காரணமாக உள்ளக விமானச் சேவைகளுக்காக மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த பலாலி விமான நிலையம் இந்தியாவின் நிதியுதவியின் கீழ் புனரமைக்கப்பட்டு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமாக மீண்டும் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்