சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகள் முதல் மற்றும் இரண்டாம் சுற்று வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில் எடப்பாடி தொகுதியின் அதிமுக வேட்பாளர் முதலமைச்சர் பழனிசாமி 11331 வாக்குகளும், திமுக வேட்பாளர் சம்பத் குமார் 4594 வாக்குகளும் பெற்றுள்ளார்.
இரண்டாவது சுற்று நிலவரப்படி 6737 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார் எடப்பாடி கே. பழனிசாமி.
ஒமலூர் தொகுதியில் அதிமுக முன்னிலை பெற்றுள்ளது. அதிமுக சார்பில் போட்டியிட்டுள்ள மணி - 4600 வாக்குகளும், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ரங்கராஜன் கோகன் குமாரமங்கலம் 2681 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
சேலம் மேற்கு தொகுதியில் திமுக வேட்பாளர் சேலத்தாம்பட்டி ராஜேந்திரன் 4174 வாக்குகளும், பாமக வேட்பாளர் அருள் 4741 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
இரண்டாவது சுற்றில் பாமக வேட்பாளர் அருள் முன்னிலை பெற்றுள்ளார்.
சேலம் தெற்கு தொகுதியில் இரண்டாவது சுற்றில் அதிமுக முன்னிலை பெற்றுள்ளது. இத்தொகுதியில் திமுக வேட்பாளர் சரவணம் 2493 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் பாலசுப்ரமணியன் 3516 வாக்குகளும் பெற்றுள்ளனர். அதிமுக 2397 வாக்குகள் முன்னிலையில் உள்ளது.
மேட்டூர் தொகுதியில் முதல் சுற்று முடிவில் பாமக (அதிமுக கூட்டணி) முன்னிலை பெற்றுள்ளது.
திமுக வேட்பாளர் சீனிவாச பெருமாள் 1815 வாக்குகளும், பாமக வேட்பாளர் சதாசிவம் 4586 வாக்குகளும் பெற்றுள்ளார். சேலம் மேட்டூர் தொகுதியில் 2700 வாக்குகள் வித்தியாசத்தில் பாமக வேட்பாளர் முன்னிலை பெற்றுள்ளது.
ஆத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜெய சங்கரன் 1108 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். சேலம் சங்ககிரி தொகுதி முதல் சுற்றில் திமுக வேட்பாளர் ராஜேஷ் முன்னிலையில் உள்ளார்.
சங்ககிரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் சுந்தர்ராஜன் 3702 வாக்குகளும், திமுக வேட்பாளர் ராஜேஷ் 4374 வாக்குகளும் பெற்றுள்ளார். 672 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக முன்னிலையில் உள்ளது.
சேலம் வடக்கு தொகுதியில் முதல் சுற்று முடிவில் திமுக வேட்பாளர் ராஜேந்திரன் 3268 வாக்குகளையும், அதிமுக வேட்பாளர் வெங்கடாசலம் 2205 வாக்குகளையும் பெற்றுள்ளார்.
ஏற்காடு சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சித்ரா 4079 வாக்குகளையும், திமுக வேட்பாலர் தமிழ் செல்வன் 2942 வாக்குகளையும் பெற்றுள்ளனர். இதன் அடிப்படையில் ஏற்காடு சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் 1087 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.