அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினுக்கு வரவேற்பு
தமிழ்நாட்டின் புதிய முதல்வராகவிருக்கும் மு.க. ஸ்டாலின் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகத்துக்கு இன்று காலை சென்றுள்ளார். இதையொட்டி தேர்தல் வெற்றிக்காக கோபாலபுரத்தில் உள்ள தாயாரின் வீட்டுக்குச் சென்று அவரிடம் ஸ்டாலின் ஆசி பெற்றார். பிறகு அங்கிருந்து அண்ணா அறிவாலயம் சென்ற ஸ்டாலினுக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
இதையடுத்து திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தும் ஸ்டாலின், திமுக சட்டப்பேரவை குழுவை கூட்டி அதன் தலைவரை தேர்வு செய்யும் நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை நடத்தவிருக்கிறார். இந்த வார இறுதிக்கு முன்பாக திமுக பதவியேற்பு விழாவை நடத்துவது குறித்தும் ஸ்டாலின் ஆலோசனை நடத்தக்கூடும் என்று திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
- நாளை 6 மணிக்கு சென்னையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்