அதிமுக அலுவலகம் யாருக்கு? ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பு ஜூலை 25இல் ஆஜராக நோட்டீஸ்
கட்சி அலுவலகம் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை தீர்மானிக்க இந்த விசாரணைக்கு வருமாறு இருவரும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில், அதிமுக தலைமை அலுவலக வளாகத்தில் வன்முறை தீவிரமாகாமல் தடுக்கவே அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
பிரசாந்த் முத்துராமன்
"துரோகியாக அண்ணன் ஓபிஎஸ்" - எடப்பாடி பழனிசாமி
சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய இந்த அரசு, பாதுகாப்பு தர தவறிவிட்டது. காவல்துறையில் புகாரளித்தும் பலனில்லை. தலைமைக்கழகத்தை காப்பாற்ற முயற்சித்த எங்கள் நிர்வாகிகள் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கு காரணம் தமிழக அரசும், இன்று துரோகியாக இருக்கின்ற அண்ணன் ஓபிஎஸ் அவர்களும்தான்.
சரியான நடவடிக்கை எடுக்காத காவல்துறையை சட்டரீதியாக சந்திப்போம் என்றும் தெரிவித்தார்.
அவர் பேசியதன் முழு காணொளியை இந்த இணைப்பில் காணலாம்.
"இவர்களை தாக்க எப்படி மனம் வந்தது" - எடப்பாடி பழனிசாமி
அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற மோதலில் காயமடைந்த அதிமுக நிர்வாகிகளை நேரில் சென்று சந்தித்த எடப்பாடி பழனிசாமி, அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், " உங்களுக்கு இந்த அதிகாரத்தையும் பதவியையும் தந்ததே இந்த நிர்வாகிகள்தான். ஆனால், அவர்களை இப்படி தாக்குவதற்கு எப்படி மனம் வந்தது? பாதுகாப்பு தரவேண்டிய காவல்துறை எங்கள் கழக நிர்வாகிகளைத்தான் தாக்கியது" என்றும் தெரிவித்தார்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்களை ஒரு வாகனத்தில் அள்ளிச்சென்றிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். அதற்கு காவல்துறையும் உடந்தையாக இருந்துள்ளது என்று பழனிசாமி கூறினார்.

பட மூலாதாரம், ANI
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதி ரவிச்சந்திரன் உச்ச நீதிமன்றத்தில் மனு
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் சிறை தண்டனை அனுபவித்து வருவோரில் ஒருவரான ரவிச்சந்திரன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த வழக்கில் சிறையில் இருந்த பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தன்னையும் அதே முன்மாதிரியைக் கொண்டு விடுதலை செய்ய உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனு கடந்த மாதம் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ரவிச்சந்திரன் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஜூலை 17இல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அழைப்பு
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 17ஆம் தேதி திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.
இதற்கான அறிவிப்பை அரசு தலைமை கொறடா கோவி. செழியன் வெளியிட்டுள்ளார்.
ஜூலை 18ஆம் தேதி இந்திய குடியரசு தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் எம்.பி, எம்எல்ஏக்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
இதில் தமிழ்நாட்டில் ஆளும் திமுக மத்தியில் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் இணைந்து முன்னிறுத்தியுள்ள பொது வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹாவை ஆதரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி திமுக எம்எல்ஏக்கள் குடியரசு தலைவர் தேர்தலில் யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவாக வாக்களிக்க திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முறைப்படி கேட்டுக் கொள்ளப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வந்துகொண்டிருக்கும் செய்தி, ஜெயலலிதா, எம்ஜிஆர் நினைவிடங்களில் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி
அதிமுக பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்பட தீர்மானிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி, இன்று பிற்பகலில் சென்னை மெரீனா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதா, எம்ஜிஆர், அண்ணா ஆகியோரின் சமாதிகளுக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.
அவருடன் கட்சியின் புதிய நிர்வாகிகளாகத் தேர்வானவர்களும் சென்று மறைந்த தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதற்கிடையே, கட்சியின் அலுவல்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் எடப்பாடி பழனிசாமியின் புதிய ப்ரொஃபைல் படம் பதிவேற்றப்பட்டுள்ளது.
X பதிவை கடந்து செல்லX பதிவை அனுமதிக்கலாமா?எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காதுஇந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
கோவை: அதிமுக அலுவலகத்தில் ஓ.பி.எஸ் படம் அகற்றம்

சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து கோவை அதிமுக அலுவலகத்தில் இருந்த ஓ.பி.எஸ் படத்தை வெளியே எடுத்து வந்த ஈ.பி.எஸ் ஆதரவாளர்கள் அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதோடு அவரின் படத்தை செருப்பால் அடித்தும் கிழித்து அகற்றினர்.
மேலும், ஈ.பி.எஸ் தற்காலிக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற 78 பேர் கைது

பட மூலாதாரம், SRI LANKA NAVY
மட்டக்களப்பு மற்றும் களுவங்கேனி பகுதிகளிலிருந்து சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்த 78 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவிக்கின்றது.
மட்டக்களப்பு அருகே உள்ள கடற்பரப்பில் பயணித்துக்கொண்டிருந்த சந்தேகத்திற்கிடமான படகு ஒன்றை கடற்படையினர் அவதானித்துள்ளனர். இதையடுத்து, குறித்த படகை கடற்படையினர் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
இந்த படகிலிருந்து 43 ஆண்களும், 07 பெண்களும் 11 சிறுவர்களுமாக 61 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்களில், ஆட்கடத்தலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 6 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.மேலும், மட்டக்களப்பு, களுவங்கேனி பகுதியை அண்மித்த கடற்கரை பகுதிகளிலும் நடத்தப்பட்ட சுற்றி வளைப்பில் 16 ஆண்களும், ஒரு பெண்ணும் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, குருநாகல் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து, நாடு ஸ்திரமற்ற நிலைமையில் காணப்படுகின்ற பின்னணியில், நாட்டை விட்டு பெருமளவிலானோர் வெளியேற முயற்சித்து வருகின்றனர். இந்த நிலையில், பலர் சட்டவிரோதமாக ஆஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணிக்க முயற்சிக்கின்றனர்.இவர்களில் சிலர் வெளிநாடுகளுக்கு அகதிகளாக சென்றுள்ளதுடன், வெளிநாடுகளுக்கு செல்ல முயற்சித்த பலரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.சட்டவிரோதமான முறையில் படகுகளில் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டாம் என கடற்படை கோரிக்கை விடுத்துள்ளது.

பட மூலாதாரம், SRI LANKA NAVY
அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி தேர்வு, ஓபிஎஸ் நீக்கம், கட்சி அலுவலகத்துக்கு சீல்
இந்த பொதுக்குழு செல்லாது - சசிகலா பேட்டி

அதிமுகவில் நிலவி வரும் பரபரப்பான சூழலுக்கு மத்தியில், ஜெயலலிதாவின் தோழியும், அதிமுக முன்னாள் பொதுச் செயலாளருமான சசிகலா புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிமுகவின் இன்றைய நிலையை பார்க்கும்போது, தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டிய நேரம் வந்துவிட்டது. சுயநலவாதிகளை புறந்தள்ளும் நேரமும் வந்துவிட்டது" என்று கூறியுள்ளார்.
மேலும், "தொண்டர்களின் எண்ணத்திற்கு மாறாக பணபலம், படைபலத்தை கொண்டு அடித்து பதவியை பிடிக்கலாம் என்றால் அந்தப் பதவி நிலைக்காது. இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு நிச்சயமாக செல்லாது. தனிப்பட்ட சுயநலத்தால் கூட்டப்பட்ட பொதுக்குழு. சட்டத்திற்கு புறம்பான தலைமையை தொண்டர்கள் நிராகரிக்கும் காலம் வந்துவிட்டது. இருபெரும் தலைவர்களின் ஆசியால் இந்த இயக்கம் மீண்டும் அதே பொலிவோடு மீண்டெழும்.
நிழலுக்காக சண்டையிட்டு நிஜத்தை தொலைத்தவர்களின் பின்னால் குதிரைகள் கூட செல்லாது. காட்சிகள் மாறினாலும் கொள்கைகளை மட்டும் மனதில் வைத்து செயல்படுங்கள். இயக்கத்தை அழிக்க நினைத்தவர்கள் நன்றாக வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை” நான் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருக்கும் போது தற்போது அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டியதே தவறு.
ஈ.பி.எஸ். பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதே செல்லாது என்னும்போது, அவர் ஓ.பி.எஸ்ஸை நீக்கியது எவ்வாறு செல்லுபடியாகும்" என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுக - புதிய பொருளாளர் நியமனம்
அதிமுகவின் புதிய பொருளாளராக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் C.சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை ஜனாதிபதி பதவி விலக தயார்: பிரதமர் அலுவலகம்; சபாநாயகர் மூலமே அறிவிப்போம்: ஜனாதிபதி செயலகம்
'தீர்வு கிடைக்கும் வரை ஜனாதிபதி மாளிகையை விட்டு வெளியேற மாட்டோம்' - போராட்டக்காரர்கள்
ஓபிஎஸ்: கட்சியை விட்டே நீக்கம் – அதிமுக தீர்மானத்தின் 5 முக்கிய தகவல்கள்
அதிமுக அலுவலகத்துக்கு சீல்; தடை உத்தரவு
அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற வன்முறைக்குப்பிறகு வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் அதிகாரிகள் வந்து சீல் வைத்தனர். மேலும், கூட்டம் கூடுவதற்கும் அப்பகுதியில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

"ஓ.பி.எஸ். திமுகவின் கைக்கூலி"
ரவுடிகளோடு தலைமை அலுவலகம் சென்றார் அண்ணன் ஓ.பி.எஸ். அண்ணன் எப்போதும் சுயநலம்தான். தனக்கு கிடைக்காத பதவி யாருக்கும் கிடைக்கக்கூடாது என்பதில் குறியாக இருக்கக்கூடையவர் அவர். திமுகவின் ஊழல்களை நாம் அம்பலப்படுத்திக்கொண்டிருக்கும் வேளையில், ஓபிஎஸ்ஸின் மகன் திமுக தலைவரை சந்தித்து உறவு கொண்டாடுகிறார்.
இப்படி ஒரு தீர்மானத்தை கொண்டுவரும் எண்ணமே இல்லை. இன்றைய தினம் அவருக்கும் அழைப்பு முறையாக விடுக்கப்பட்டது. ஆனால், அவர் இங்கே வருவதற்கு பதில் ரவுடிகளுடன் தலைமைக்கழகம் செல்கிறார். அம்மாவின் அறையை கடப்பாரையால் உடைத்து, ஆவணங்களை எடுத்துச்சென்றுள்ளார்.
இவரா கட்சியின் விசுவாசி? சொல்லுங்கள் இவரா கட்சியின் விசுவாசி? (மேடையின் கீழிருந்து இல்லை இல்லை என்று குரல் எழுகிறது). திமுகவின் கைக்கூலியாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் அவர்.
ஸ்டாலின் அவர்களே! எத்தனை ஓபிஎஸ் களை பிடித்தாலும் அதிமுகவின் தொண்டனையோ நிர்வாகியையோ ஒன்றும் செய்ய முடியாது. என்றைக்கு எங்கள் கட்சிக்குள் மோதவிட்டீர்களோ அப்போதே உங்கள் அழிவு காலம் நெருங்கிவிட்டது." என்று பேசினார்.

"பழைய பழனிசாமி" என்று நினைத்தீர்களா?
தலைமைக்கழகத்தில் சமூகவிரோதிகள் அத்துமீறி நுழைவது குறித்து காவல்துறையில் புகாரளித்தோம். ஆனால், காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலினும் ஓபிஎஸ்ஸும் இணைந்து அதிமுகவை அழிக்க முயற்சி செய்கின்றனர். என்ன ஆட்சி மாற்றம் வராதா? என்னை இன்னும் பழைய பழனிசாமி என்று நினைத்தீர்களா?
எங்களை அழித்துவிடலாம் என்று நினைத்துவிடாதீர்கள். நாங்கள் வெட்ட வெட்ட வளரும் வாழை போல. எம்ஜிஆர் இந்த இயக்கத்தை தொடங்கியபோதும் அம்மா தலைமையேற்றபோதும் ஏராளமான பிரச்னைகளை சந்தித்துதான் வென்றுள்ளனர்.
ஸ்டாலின் அவர்களே! உங்களை நாட்டு மக்களுக்கு நல்லது செய்வதற்காக தேர்ந்தெடுத்துள்ளனர். பாதை மாறி செல்கிறீர்கள். கீழிருக்கும் சக்கரம் மேலே வரும். மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும்.

`அண்ணன் ஓபிஎஸ் அவர்கள்` - எடப்பாடி பழனிசாமி உரை
யார் வேண்டுமானாலும் பொறுப்புக்கு வரலாம். ஆனால், ஒற்றைத்தலைமை வேண்டும். அதற்கு இசைவு தாருங்கள் என்றோம். ஆனால், தரவில்லை. இரட்டைத்தலைமையால் எவ்வளவு சிரம்மப்பட்டோம் என்பதை நானும், இந்த மேடையில் அமர்ந்திருக்கும் தலைவர்களும் நன்கறிவோம்.
எதற்கெடுத்தாலும், தான் விட்டுக்கொடுத்ததாக சொல்கிறார் அவர். ஆனால், எங்கே நீங்கள் விட்டுக்கொடுத்தீர்கள்? அம்மாவுக்கு விசுவாசியாக இருந்ததாக சொல்கிறார். அம்மா போட்டியிட்ட போது, வெண்ணிற ஆடை நிர்மலாவுக்கு ஏஜெண்டாக இருந்தவர் நீங்கள். எப்போது அம்மாவுக்கு விசுவாசமாக இருந்தீர்கள்?
என்றைக்காவது நான் முதலமைச்சராக நடந்துகொண்டேனா? இப்போதும் அதேபோல, உங்களில் ஒருவனாகவே இருப்பேன். எனக்கு கட்சிதான் உயிர்.
அண்ணன் ஓபிஎஸ் அவர்கள், திமுகவுடன் உறவு வைத்திருக்கிறார். ஒரு தலைவரே இப்படி இருந்தால் எப்படி அந்தக் கட்சியை ஆட்சிக்கு கொண்டு வருவது?
அதிமுக பொதுக்குழு: எடப்பாடி பழனிசாமி உரை
"நீங்கள் விரும்பிய தீர்மானம் பொதுக்குழுவால் நிறைவேற்றப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டு பேசத் தொடங்கிய அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இந்தியாவிலேயே ஜனநாயக முறைப்படி இயங்கும் ஒரே கட்சி அதிமுகதான் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "கடுமையாக உழைத்து தொண்டர்களின் எண்ணத்தை நிறைவேற்றுவேன். அன்று நான் முதலமைச்சராக பொறுப்பேற்றபோது, எங்கள் அரசு ஒருமாதம் கூட தாங்காது என்று, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் பேசினார். ஆனால், அவரே ஆச்சரியபடும்படி சிறப்பாக ஆட்சி நடத்தினோம்" என்று பேசினார். மேலும், போதைப்பொருள், சட்டம் ஒழுங்கு, ஆன்லைன் ரம்மி ஆகியவற்றை அரசு கையாளும் விதம் குறித்தும் அவர் பேசினார்.
முன்னதாக, "எட்டப்பர்களால் இந்த கட்சிக்கு களங்கம் ஏற்படுகிறது" என்று பேசினார்.

பட மூலாதாரம், ஙனஙனு
எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் இருந்து நீக்கம் - ஓபிஎஸ் பேட்டி
அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், ஈபிஎஸ், கே.பி.முனுசாமியை தான் கட்சியிலிருந்து நீக்குவதாக தெரிவித்துள்ளார்.
அவர் பேசியதாவது, "கழக ஒருங்கிணைப்பாளரான என்னை நீக்குவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கோ, கே.பி.முனுசாமிக்கோ அதிகாரமில்லை. என்னை நீக்குவதாக தன்னிச்சையாக அறிவித்ததை கண்டிக்கிறேன். இப்போது நான் அறிவிக்கிறேன். எடப்பாடி பழனிசாமி மற்றும் கே.பி.முனுசாமி ஆகிய இருவரையும் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்குகிறேன் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்" மேலும்,கழக விதிப்படி, தொண்டர்களுடன் இணைந்து சட்டப்போராட்டம் நடத்துவோம். என்றும் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் அடுத்தகட்டமாக, தாம் மேல்முறையீட்டுக்கு செல்வதாக வைத்திலிங்கம் தெரிவித்தார்.

