விசா முறைகேடு விவகாரத்தில் கார்த்தி சிதம்பரம் மீது வழக்குப் பதிவு

தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம். அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

எம்.ஆர். ஷோபனா

  1. காணொளி: "புஷ்பா பட பாணியில் ஆட்சி நடக்கிறது" - உதயநிதி விமர்சனம்

  2. காணொளி: 'குதிரை பேரம்' - முதல்வர் விஜய் குறித்து பிரேமலதா பேசியது என்ன?

  3. காணொளி: "ஜோதிடம் போன்ற மூட நம்பிக்கைகளுக்கு அரசு இடம் தரக்கூடாது" - வன்னி அரசு

  4. "தவெக வெற்றிக்கான காரணம்" - தரவுகள் சொல்லும் செய்தி என்ன?

  5. முதலமைச்சரின் சிறப்பு பணி அலுவலர் ராதன் பண்டிட் நியமனம் ரத்து

    தவெக

    பட மூலாதாரம், UGC

    படக்குறிப்பு, ரிக்கி ராதன் பண்டிட் நியமனத்தை தமிழ்நாடு அரசு ரத்து செய்துள்ளது.

    சட்டப்பேரவை வரை எழுந்த எதிர்ப்புகளைத் தொடர்ந்து முதலமைச்சரின் சிறப்பு பணி அலுவலர் ரிக்கி ராதன் பண்டிட் நியமனத்தை (officer on Special Duty to Chief Minister of Tamil Nadu (Politics) ) தமிழக அரசு திரும்பப் பெற முடிந்துள்ளது.

    விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவை பதவியேற்றதைத் தொடர்ந்து அதிகாரிகள் மாற்றம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக தவெகவைச் சேர்ந்த ரிக்கி ராதன் பண்டிட் முதலமைச்சரின் சிறப்பு பணி அலுவலராக (அரசியல்) நியமிக்கப்பட்டிருந்தார்.

    ஜோதிட பின்னணி கொண்ட அவரின் நியமனத்திற்கு தவெகவிற்கு ஆதரவு தெரிவித்த கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் இடையே கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

    இன்று சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பிலும் அது எதிரொலித்தது. பிரேமலதா, விஜயகாந்த், வன்னி அரசு உள்பட பலரும் இது குறித்து பேசியிருந்தார்.

    அதற்குப் பதிலளித்த முதலமைச்சர் விஜய், அந்த முடிவுகளை மறுபரிசீலனை செய்வதாகத் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் அவரின் நியமனம் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

    காணொளிக் குறிப்பு, "ராஜகுருவுக்கு அரசு பதவியா" விஜயை விமர்சித்த பிரேமலதா
  6. நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றி - முதலமைச்சர் விஜய் அரசுக்கு 144 பேர் ஆதரவு

  7. தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி உயர்வு

    தங்கம், வெள்ளி

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளது.

    தங்கம், வெள்ளியின் அத்தியாவசியமற்ற இறக்குமதியைக் கட்டுப்படுத்த இறக்குமதி வரியை 15% வரை உயர்த்துவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    மத்திய கிழக்கில் நிலவி வரும் நெருக்கடியால் இறக்குமதி செலவுகள் அதிகரித்து வரும் சூழலில் பொக்கிஷமான உலோகங்களின் இறக்குமதியைக் கட்டுப்படுத்த இறக்குமதி வரி 6 சதவிகிதத்தில் இருந்து 15 சதவிகிதம் ஆக உயர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

    அந்திய செலாவணி சேமிப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக சமூக நலக் கட்டணம் மற்றும் வேளாண் கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி செஸ் நிதி இன்று (மே 13) முதல் அதிகரிக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  8. "இரான் போரை முடிக்க சீனா தேவையில்லை" - டிரம்ப்

    டிரம்ப், சீனா, அமெரிக்கா

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, மூன்று நாள் அரசுமுறை பயணமாக சீனா செல்கிறார் டிரம்ப் (கோப்புப் படம்)

    இரான் உடனான போரை முடிவுக்கு கொண்டு வர சீனாவின் உதவி தேவையில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    அரசுமுறை பயணமாக சீனா செல்வதற்கு முன்பாக டிரம்ப் இந்தக் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

    தனது சீன பயணத்தின்போது அந்நாட்டின் அதிபர் ஷி ஜின்பிங் உடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.

    "நாங்கள் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன. வெளிப்படையாகச் சொன்னால், எங்களின் நிகழ்ச்சி நிரலில் இரான் இல்லை, ஏனெனில் இரானை ஏற்கெனவே எங்களின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளோம்," என்று தெரிவித்தார் டிரம்ப்.

    இரான் தொடர்பாக பேசிய டிரம்ப், "ஒன்று நாங்கள் ஒப்பந்தத்தை அடைவோம் அல்லது இரான் அழிக்கப்படும்." என எச்சரித்தார்.

    மே 13 முதல் 15 வரை அரசு முறை பயணமாக டிரம்ப் சீனா வருவதை அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

    கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் கழித்து அமெரிக்க அதிபர் சீனாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். முதலில் மார்ச் மாதத்தில் திட்டமிடப்பட்டிருந்த இந்தப் பயணம் மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றங்கள் பின்னர் தள்ளிவைக்கப்பட்டது.

  9. டி20 பேட்டர்களை கட்டிப்போட்ட டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் - ஹைதராபாத்தை குஜராத் வென்றது எப்படி?

  10. காணொளி: "என் அம்மா சமையல் வேலைக்கு செல்கிறார்"- த.வெ.கவின் ஸ்ரீரங்கம் எம்எல்ஏ கூறியது என்ன?

  11. முதலமைச்சர் விஜய் அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு - இது எவ்வாறு நடத்தப்படும்?

  12. நீட் தேர்வு ரத்து: வினாத்தாள் கசிவு விவகாரத்தில் என்ன நடந்தது?

  13. காணொளி: காஸாவில் சர்வதேச பாலத்தீன மாரத்தான் போட்டி

  14. காணொளி: இலங்கையில் கட்டிலை தூக்கிக்கொண்டு ஓடும் பந்தயம்

  15. அதிமுகவில் ஒரு தரப்பை நேரில் சந்தித்த விஜய் - அடுத்து என்ன?

  16. அதிமுகவின் ஒரு பிரிவு எம்.எல்.ஏ.க்களை நேரில் சந்தித்த விஜய் - என்ன நடக்கிறது?

  17. காணொளி: அதிமுகவின் ஒரு பிரிவு எம்.எல்.ஏ.க்களை விஜய் சந்தித்தபோது நடந்தது என்ன?

  18. தவெகவின் 'இருமுனை கத்தி' சமூக ஊடக பிரசாரம் ஆட்சியை கைப்பற்ற உதவியதா?

  19. சவாலை சந்திக்க இந்தியர்கள் தயாராக வேண்டுமா? மோதி பேச்சால் எழும் விவாதம்

  20. தவெக அரசு கடனே வாங்காமல் ஆட்சி புரிய முடியுமா? கஜானா காலி என்ற விஜய் கூற்று பற்றிய ஒரு பகுப்பாய்வு