விசா முறைகேடு விவகாரத்தில் கார்த்தி சிதம்பரம் மீது வழக்குப் பதிவு

தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம். அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

எம்.ஆர். ஷோபனா

  1. காணொளி: ஆரவாரத்துடன் டிரம்பை வரவேற்ற குழந்தைகள்

  2. டிரம்ப் - ஷி ஜின்பிங் சந்திப்பு: இருநாட்டு தலைவர்களும் பேசியது என்ன?

  3. நீட் தேர்வு வினாத்தாள் எங்கிருந்து கசிந்தது? - அடுத்து என்ன நடக்கும்?

  4. காணொளி: சீனா சென்ற அதிபர் டிரம்புக்கு வழங்கப்பட்ட வரவேற்பு

  5. டிரம்பின் சீன பயணம் இரு நாடுகளின் உறவுகளை எவ்வாறு மாற்றக்கூடும்?

  6. கொல்கத்தாவின் வெற்றிப் பயணத்தைத் தடுக்குமா ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு?

  7. காணொளி: நேற்று அரசுப் பதவி; இன்று நீக்கம்- யார் இந்த ஜோதிடர்?

  8. காணொளி: ராதன் பண்டிட் வெற்றிவேல் - இவரது நியமனத்தை தமிழ்நாடு அரசு ரத்து செய்தது ஏன்?

  9. காணொளி: டாஸ்மாக் கடைகள் மூடல் - முதலமைச்சரை பாராட்டிய கமல்ஹாசன்

  10. காணொளி: 'திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி'- சி.வி சண்முகம் கூறியது என்ன?

  11. வங்கதேசத்திடம் தோல்வியடைந்த பாகிஸ்தான் மீது சீற்றம் – முன்னாள் வீரர்கள் கூறுவது என்ன?

  12. கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு மாதம் கழித்து இறந்த சிறுமி – என்ன நடந்தது?

  13. இந்தியா, பாகிஸ்தான் ராணுவ வியூகங்களை டிரோன்கள் எவ்வாறு மாற்றியமைக்கின்றன?

  14. அதிமுக 54 ஆண்டுகளில் சந்தித்த பிளவுகளின் வரலாறு என்ன?

  15. தங்கம் இறக்குமதி வரி உயர்வு சாமானியர்களை எப்படி பாதிக்கும்?

  16. ‘திமுக-வுக்கு யதார்த்தம் புரியவே போவதில்லை’- முதலமைச்சர் விஜய்

    முதலமைச்சர் விஜய்

    பட மூலாதாரம், TNDIPR

    தமிழக சட்டப்பேரவையில் இன்று (மே 13) நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் விஜய் அரசுக்கு ஆதரவாக 144 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர்.

    இந்நிலையில் இந்த வாக்கெடுப்பு குறித்தும், தீர்மானத்தின் மீதான விவாதத்தில் எதிர்கட்சிகள் முன்வைத்த விமர்சனங்கள் குறித்தும் எக்ஸ் தள அறிக்கை ஒன்றின் மூலம் முதலமைச்சர் விஜய் பதிலளித்துள்ளார்.

    “நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசின் மீது நம்பிக்கை வைத்து, வாக்களித்த அனைத்து இயக்கங்களைச் சார்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று முதலமைச்சர் விஜய் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    “பெரும்பான்மையான தமிழக மக்களின் ஆதரவை நாம் பெறவில்லை என்ற அரதப் பழைய, புளித்துப்போன வாதத்தை மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் வழக்கம் போலான அவரது பாணியில் எடுத்து வைத்தார். எல்லாம் தெரிந்த ஏகாம்பரமான தி.மு.க.வுக்கு எப்போதும் யதார்த்தம் புரியவே போவதில்லை” என்றும் விஜய் விமர்சித்துள்ளார்.

    நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில், “கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிட்ட த.வெ.க. பெற்ற வாக்கு சதவிகிதத்தைவிட தி.மு.க பெற்றுள்ள வாக்கு சதவிகிதம் மிகவும் குறைவு” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

    “சதவிகிதக் கணக்குப்படி பார்த்தாலும் த.வெ.க. 35 சதவிகிதம் எனில், தி.மு.க. 24 சதவிகிதம். அதன்படி பார்த்தாலும்கூட, தமிழ்நாட்டின் 76 சதவிகித மக்கள் தி.மு.க.வே தங்களுக்குத் தேவை இல்லை என்று தீர்க்கமாக முடிவெடுத்து, ஒட்டுமொத்தமாக அக்கட்சியை நிராகரித்துள்ளனர்.” என்று முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார்.

    “மதச்சார்பற்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருப்பதால் தான் அரசைக் காங்கிரஸ், வி.சி.க., சி.பி.ஐ., சி.பி.ஐ. (எம்) மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் ஆதரித்தன. அதை அக்கட்சிகளின் தலைவர்கள் ஊடகங்களிலும் வெளிப்படுத்தினர். இதையும் தி.மு.க. ஏளனமாகப் பேசி உள்ளது எந்தக் கணக்கில் என்று புரியவில்லை. அதையும் மக்கள் பார்வைக்கும் முடிவுக்குமே விட்டுவிடுகிறோம்.”

    “மக்கள் மனத்தில் ஆழமாக வேரூன்றிப் புகழ்பெறப் போகும் மக்கள் அரசைப் ‘புஷ்பா அரசு’ என்று தி.மு.க. ஏளனம் பேசி இருக்கிறது. மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கையில்தான் நாமும் நமது அரசும் உறுதியாக இருக்கப் போகிறோம். அதைப் பார்த்துத் தி.மு.க. ஆற்றாமையில் அலறப் போவது உறுதி” என்று குறிப்பிட்டுள்ளார் முதலமைச்சர் விஜய்.

  17. யார் இந்த 'ஜோதிடர்' ராதன் பண்டிட்? விஜயின் சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்ட ஒரே நாளில் நீக்கம் ஏன்?

  18. ‘திருமாவளவன் முதலமைச்சர், அதிமுகவினர் அமைச்சர்கள்’- சி.வி. சண்முகம் கூறியது என்ன?

    சி.வி சண்முகம்

    பட மூலாதாரம், @CVShanmugamofl/X

    படக்குறிப்பு, சி.வி சண்முகம்

    தமிழக சட்டப்பேரவையில் இன்று (மே 13) நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு பிறகு, சி.வி. சண்முகம் உள்ளிட்ட அதிமுகவின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

    அப்போது பேசிய சி.வி. சண்முகம், “25 பெரும்பான்மை சட்டப்பேரவை உறுப்பினர்கள் கொண்ட அதிமுகவினர் விஜய் தலைமையிலான அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம். அதிமுகவில் சிறுபான்மை சட்டமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கை தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்துள்ளனர்” என்று கூறினார்.

    “புதுச்சேரியில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக ஆதரவுடன் ஆட்சியமைக்கப்போவதாக தெரிவித்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கையெழுத்து பெற்றார்” என்றும் சி.வி. சண்முகம் தெரிவித்தார்.

    “திமுகவை எதிர்த்து அரசியல் செய்த எங்களை திமுக ஆதரவோடு ஆட்சியமைக்க வேண்டும் என்று சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

    “திருமாவளவனை முதலமைச்சராகவும், அதிமுகவினரை அமைச்சர்களாகவும் ஆக்க திமுக முன் மொழிந்தது. ஆனால் அதனை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொள்ளவில்லை. திமுகவுடன் போக முடிவு செய்த நிலையில் ஏன் தவெக-வை ஆதரிக்கக் கூடாது என்று கேட்டோம், ஆனால் அதையும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை” என்று சி.வி சண்முகம் தெரிவித்தார்.

  19. காணொளி: "குதிரை பேரம் நடைபெற்றதாக தகவல் வருகிறது" - இபிஎஸ்

  20. காணொளி: "இது சிறுபான்மை அரசு தான்" - முதலமைச்சர் விஜய் பேச்சு