விசா முறைகேடு விவகாரத்தில் கார்த்தி சிதம்பரம் மீது வழக்குப் பதிவு
தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம். அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
எம்.ஆர். ஷோபனா
சீனாவை விமர்சிக்கும் டிரம்ப் ஆதரவாளர்கள், அதிபரின் சீன பயணம் குறித்து கருதுவது என்ன?
இளைஞர்களை கரப்பான் பூச்சி என விமர்சித்தேனா? - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி விளக்கம்
காணொளி: “பாகிஸ்தானுக்காக போர்நிறுத்தம் செய்தோம்” - டொனால்ட் டிரம்ப்
"தலைவரான என் மேலேயே குறை சொன்னாலும் பரவாயில்லை" - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

பட மூலாதாரம், X/MK Stalin
படக்குறிப்பு, திமுக தேர்தல் தோல்வியை ஆராய 36 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஆளும் கட்சி அந்தஸ்தை இழந்தது. இந்த நிலையில், தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து ஆராயப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, திமுக சார்பில் 36 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இவர்கள் 234 தொகுதிகளுக்கும் சென்று கள ஆய்வு மேற்கொள்வார்கள் என திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆலோசனை கூட்டம் இன்று மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இது தொடர்பாக பதிவிட்டுள்ள ஸ்டாலின் இந்த ஆய்வை எப்படி மேற்கொள்வது என, சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தன் எக்ஸ் பக்கத்தில், "தனிப்பட்ட விருப்பு வெறுப்பின்றி, கட்சிக்காரர்கள் சொல்லும் உண்மையை அப்படியே வந்து என்னிடம் சொல்வது மட்டுமே உங்கள் வேலை. நீங்கள் யாரையும் காப்பாற்றவும் முயற்சி செய்ய வேண்டாம். யாரையும் பழிவாங்கவும் எண்ணக் கூடாது," என தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
மேலும் தனது பதிவில், "தலைவரான என் மேலேயே குறை சொன்னாலும் பரவாயில்லை. அதைக் குறித்து வைத்து உங்களது அறிக்கையில் வழங்குங்கள்." என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஜூன் 5-க்குள் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, இதன் மீதான நடவடிக்கைகளை ஜூன் மாத இறுதிக்குள் முடித்திட வேண்டும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் அதிமுக அலுவலகத்தில் தள்ளுமுள்ளு

படக்குறிப்பு, விழுப்புரம் அதிமுக அலுவலகம் வெளியே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் காவல்துறையினர் தலையிட்டு அப்புறப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அதிமுகவின் சிவி சண்முகம் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, சிவி சண்முகத்தை விழுப்புரம் மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டார். அதனை தொடர்ந்து, விழுப்புரம் அதிமுக புதிய மாவட்ட செயலாளராக பசுபதி என்பரை நியமித்தார். ஆனால் அந்த அறிவிப்பு செல்லாது என சிவி சண்முகம் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பசுபதி தரப்பினர் அதிமுக அலுவலகத்துக்குள் செல்ல பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அதிமுக அலுவலக சாவியை பெற்றுத் தர வேண்டும் எனவும் விழுப்புரம் எஸ்.பி அலுவலகத்தில் மனு அளித்திருந்தனர்.
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்படும் நிலை இருந்ததால் அதிமுக அலுவலகம் முன்பு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் அதிமுக அலுவலகத்தில் பசுபதி தரப்பினர் உள்ளே செல்ல முயன்றனர். அதற்கு சிவி சண்முகம் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
சிவி சண்முகம் தரப்பினர் காவல்துறையினரிடம் வாக்குவாதம் செய்ததால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனையடுத்து, சிவி சண்முகம் தரப்பினரை போலீசார் அப்புறப்படுத்தினர். இச்சம்பவத்தால் அதிமுக அலுவலகம் முன்பு பரபரப்பான சூழல் நிலவியது.
பேச்சுவார்த்தைக்கு ஆதரவாக ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் கருத்து - பாகிஸ்தான் எதிர்வினை என்ன?
ரூ.2,500 உதவித்தொகை திட்டம் எப்போது அமல் ? அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் பதில்

பட மூலாதாரம், CTR NIRMAL KUMAR
படக்குறிப்பு, கோப்புப் படம் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தவெக தேர்தல் வாக்குறுதியான ரூ.2,500 உதவித்தொகை திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்துப் பேசினார்.
"பெரிய அளவிலான நிதி ஒதுக்கீடுகளை பட்ஜெட்டுக்குப் பிறகு தான் செய்ய முடியும். நிதி ஆதாரங்களை சரிசெய்து பட்ஜெட்டுக்குப் பிறகு தான் கொண்டு வர முடியும். இதனை அரசாணை மூலம் செயல்படுத்த முடியாது," என அவர் தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்து பேசிய அமைச்சர் நிர்மல் குமார், "போதைப் பொருள் பயன்பாடு, மதுபான கூடங்களில் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் விதிமீறல்கள் மற்றும் சட்ட விரோதமாக இயங்கி வரும் குவாரிகளை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அனைத்து துறைகளையும் ஆய்வு செய்து வெள்ளை அறிக்கை தயார் செய்ய வேண்டிய வேலைகளில் இருந்து வருகிறோம்." என்றார்.
இந்தியாவில் பருவமழை எப்போது தொடங்கும்? வானிலை ஆய்வு மையம் தகவல்

பட மூலாதாரம், TNP/Panumas Sanguanwong/Thai News Pix/LightRocket via Getty Images
படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை மே 26-ஆம் தேதி கேரளாவை தொடங்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த முன்னறிவிப்பில் நான்கு நாட்கள் வரை கால இடைவெளி இருக்கக்கூடும்; அதாவது, பருவமழை மே 22 முதல் மே 30 வரையிலான காலகட்டத்தில் எப்போது வேண்டுமானாலும் வந்தடையலாம்.
வழக்கமாக, கேரளாவில் பருவமழை ஜூன் 1-ஆம் தேதி வாக்கில் தொடங்கும்; ஆனால் இம்முறை, அது வழக்கத்தை விட சுமார் ஆறு நாட்களுக்கு முன்னதாகவே தொடங்க வாய்ப்புள்ளது.
பசிபிக் பெருங்கடலில் எல் நினோ (El Nino) சூழல் உருவாகி வருவதன் காரணமாக, பருவமழையின் வேகம் குறையக்கூடும் என்றும், அதன் விளைவாக நாட்டில் குறைவான மழைப்பொழிவே எதிர்பார்க்கப்படுவதாகவும் வானிலை ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ஸ்கைமெட் வெதர் நிறுவனத்தின் கணிப்பின்படி, இந்த ஆண்டின் பருவமழை அளவு வழக்கமான அளவை விட 6 சதவிகிதம் குறைவாக இருக்கக்கூடும். ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான நான்கு பருவமழை மாதங்களில், நாட்டின் இயல்பான மழைப்பொழிவு அளவு 868.6 மி.மீ ஆகும். இந்தத் தனியார் வானிலை ஆய்வு நிறுவனம், இம்முறை எதிர்பார்க்கப்படும் மழைப்பொழிவு அளவு 94 சதவிகிதமாக இருக்கும் என்று கணித்துள்ளது.
எல் நினோ என்றால் என்ன?
பசிபிக் பெருங்கடலின் கிழக்குப்பகுதியில், அதாவது தென் அமெரிக்கக் கடற்கரைப் பகுதிகளில், கடல் மேற்பரப்பு நீரின் வெப்பநிலை அதிகரிப்பதன் காரணமாக ஏற்படும் ஒரு வானிலை நிகழ்வே எல் நினோ ஆகும்.
இது இயல்பான வானிலை சுழற்சியைப் பாதித்து, வெள்ளம் மற்றும் வறட்சி போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்பட வழிவகுக்கிறது. இந்த ஆண்டு, எல் நினோ நிகழ்வின் காரணமாக இந்தியாவில் பருவமழை வலுவிழக்கக்கூடும்.
அமெரிக்க மோசடி குற்றச்சாட்டு வழக்கில் 18 மில்லியன் டாலர் அபராதம் செலுத்த அதானி முடிவு

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கோப்புப் படம் அமெரிக்காவில் நடைபெற்று வரும் சிவில் மோசடி வழக்கை முடிவுக்கு கொண்டு வர 18 மில்லியன் டாலர் அபராதம் செலுத்த கௌதம் அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் அதானி ஒப்புக்கொண்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
இந்த வழக்கை அமெரிக்க பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையம் தொடர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
2024-இல் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில், முக்கியமான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்களுக்காக இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கியதாகவும் அமெரிக்க முதலீட்டாளர்களைத் தவறாக வழிநடத்தியதாகவும் அதானி மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ளவோ அல்லது மறுக்கவோ செய்யாத இந்த ஒப்பந்தம், எதிர்காலத்தில் அமெரிக்க மோசடி எதிர்ப்பு சட்டங்களை அதானி மீறுவதையும் தடை செய்கிறது.
லஞ்ச எதிர்ப்பு சட்டங்களுக்கு அதானி க்ரீன் எனர்ஜி நிறுவனம் உடன்படுவதாக முதலீட்டாளர்களை தவறாக வழிநடத்தியதாக இந்தக் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அதானி அமெரிக்க முதலீட்டாளர்களிடம் பெற்ற 175 மில்லியன் டாலர் உள்பட 750 மில்லியன் டாலர் நிதி திரட்டியதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகள் 'ஆதாரமற்றவை' என அதானி குழுமம் தெரிவித்திருந்தது.
கௌதம் அதானி மீதான மோசடி குற்றச்சாட்டுகளை கைவிட அமெரிக்க அரசு முடிவெடுத்திருப்பதாக நியூ யார்க் டைம்ஸ், ராய்டர்ஸ் மற்றும் ப்ளும்பெர்க் செய்தி வெளியிட்டிருந்தன.
ராபர்ட் கியுஃப்ரா தலைமையிலான புதிய வழக்கறிஞர் குழுவை அதானி பணியமர்த்திய பிறகு இந்த நகர்வு வந்திருப்பதாக நியூ யார்க் டைம்ஸ் தெரிவிக்கிறது. அமெரிக்காவின் முதன்மையான சட்ட நிறுவனத்தின் தலைவரான கியுஃப்ரா, அதிபர் டிரம்பின் தனிப்பட்ட சட்ட ஆலோசகர்களில் ஒருவராகவும் உள்ளார்.
இவர் டிரம்புக்காகவும் நீதிமன்றத்தில் வாதாடியுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக சட்ட அமலாக்கத் துறை அதிகாரிகளை அவர் கடந்த வாரம் சந்தித்ததாக நியூ யார்க் டைம்ஸ் செய்தி தெரிவிக்கிறது.
மேலும் அதானி மீதான குற்றச்சாட்டுகளை அதிகாரிகள் கைவிட்டால் அவர் அமெரிக்காவில் 10 பில்லியன் டாலர் முதலீடு செய்வார் என்றும் 15,000 வேலைவாய்ப்புகளை உருவாக்குவார் என்றும் கியுஃப்ரா தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே போர்நிறுத்தம் நீட்டிப்பு

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இஸ்ரேல் - லெபனான் இடையே போர்நிறுத்தம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் - லெபனான் இடையே ஏற்கெனவே போர்நிறுத்தம் அமலில் உள்ள நிலையில் அது மேலும் 45 நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டனில் நடைபெற்ற இரண்டு நாள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு போர்நிறுத்தத்தை நீட்டிக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
"பாதுகாப்பு பேச்சுவார்த்தைகள் பென்டகனில் மே 29-ஆம் தேதி தொடங்கும். இதில் இரு நாடுகளின் ராணுவ குழுக்களும் கலந்துகொள்வார்கள்," என அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளர் டாமி பிகாட் தெரிவித்தார்.
முன்னதாக ஏப்ரல் 16-ஆம் தேதி அன்று போர்நிறுத்தம் ஒன்றை டிரம்ப் அறிவித்திருந்தபோதும் இஸ்ரேல் மற்றும் ஹெஸ்பொல்லா இடையே சண்டை தொடர்ந்து நடைபெற்று வந்தது.
புதன்கிழமை மட்டும் லெபனானின் தெற்குப் பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்களில் 8 குழந்தைகள் உள்பட 22 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
லக்னௌ அணியிடம் தோற்ற சிஎஸ்கே - இனி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற உள்ள வாய்ப்புகள் என்ன?
காணொளி: பழைய படங்களில் வரும் இடங்களின் இப்போதைய நிலையை பதிவு செய்யும் இளைஞர்
'மார்ஷ் 38 பந்துகளில் 90 ரன்கள்'- லக்னௌ சென்னையை வீழ்த்தியது எப்படி?
'கருப்பு' விமர்சனம்: சூர்யா - ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவான படம் எப்படி உள்ளது?
தமிழ்நாட்டில் 100க்கும் மேற்பட்ட புதிய எம்.எல்.ஏ.க்கள் - மாத சம்பளம், சலுகைகள் என்ன?
காணொளி: நடுக்கடலில் மூழ்கிக் கொண்டிருந்த படகிலிருந்து மீனவர்கள் மீட்பு
காணொளி: நெடுஞ்சாலை பள்ளத்தில் விழுந்த கார், பைக் - மூவர் பலி
காணொளி: 'இரான் விவகாரத்தில் ராணுவ ரீதியில் தீர்வு காண முடியாது' - இரான் வெளியுறவு அமைச்சர்
காணொளி: புல்டோசரால் தகர்க்கப்பட்ட 200-க்கும் மேற்பட்ட வாகனங்கள்
