விசா முறைகேடு விவகாரத்தில் கார்த்தி சிதம்பரம் மீது வழக்குப் பதிவு

தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம். அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

எம்.ஆர். ஷோபனா

  1. காணொளி: ஸ்டாலின், சீமான், அன்புமணி - நேரில் சென்று வாழ்த்து பெற்ற விஜய்.. நடந்தது என்ன?

  2. ஸ்டாலின் முதல் சீமான் வரை: தலைவர்கள் வீட்டிற்கே சென்று சந்தித்த விஜய் - புகைப்பட தொகுப்பு

  3. காணொளி: விஜய்க்கு பழக்கூடை வழங்கி வாழ்த்திய சீமான்

  4. காணொளி: வைகோ, அன்புமணியை சந்தித்த விஜய்

  5. காணொளி: தமிழக முதல்வர் விஜய் ஸ்டாலினை சந்தித்தார்

  6. காணொளி: பிரேமலதா வாழ்த்தியதும் விஜய் என்ன செய்தார்?

  7. எம்எல்ஏவாக பதவியேற்ற கீர்த்தனா

    காணொளிக் குறிப்பு, எம்எல்ஏவாக பதவியேற்ற கீர்த்தனா

    தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், தற்காலிக சபாநாயகர் கருப்பையா முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதலாவதாக முதலமைச்சர் விஜய் பதவியேற்றார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள் பதவியேற்றனர். இந்நிலையில், சிவகாசி எம்எல்ஏவும் அமைச்சருமான கீர்த்தனா தான் எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான சான்றிதழை வீட்டிலேயே வைத்துவிட்டு வந்ததால் முதலில் பதவியேற்கவில்லை. பின்னர் சான்றிதழை காண்பித்து பதவியேற்றுக்கொண்டார்.

  8. சபாநாயகர் பதவிக்கு தவெக சார்பில் ஜேசிடி பிரபாகர் போட்டி

    ஜேசிடி பிரபாகர்

    பட மூலாதாரம், TN DIPR

    தமிழக சட்டப்பேரவை சபாநாயகராக தவெக சார்பில் ஜேசிடி பிரபாகர் போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுவை சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் அவர் வழங்கினார். அப்போது முதலமைச்சர் விஜயும் உடனிருந்தார்.

    ஜேசிடி பிரபாகர் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் ஆவார்.

    சபாநாயகர் பதவிக்கு போட்டி இருந்தால் நாளை (மே 12) குரல் வாக்கெடுப்பு மூலம் தேர்தல் நடைபெறும். இந்த தேர்தலை தற்காலிக சபாநாயகர் கருப்பையா நடத்துவார்.

    ஜேசிடி பிரபாகர் முன்பு அதிமுக சார்பாக எம்எல்ஏவாக இருந்துள்ளார்.

  9. விஜய் - ராகுல் வீடியோ, படம் இன்ஸ்டாவில் முடக்கமா? கிரிஷ் புகார்

    விஜய்/ராகுல் காந்தி

    பட மூலாதாரம், rahulgandhi/Instagram

    தமிழக முதல்வர் விஜயுடன் ராகுல் காந்தி சேர்ந்திருந்த வீடியோ, புகைப்படம் இன்ஸ்டாகிராமில் முடக்கப்பட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் கிரிஷ் சோடங்கர் விமர்சித்துள்ளார்.

    காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தன் எக்ஸ் பக்கத்தில், “பதவியேற்பு வீடியோக்களை முடக்கும் (block) அளவுக்கு தவெக-காங்கிரஸ் கூட்டணி மீது மோதி மிகுந்த அச்சத்தில் உள்ளாரா?

    விஜய் பதவியேற்பு நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட ராகுல் காந்தியின் ரீல் மற்றும் அவர் விஜயுடன் இருந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பிளாக் செய்துள்ளது. இந்த பொது ஜனநாயக நிகழ்ச்சி குறித்த என்னுடைய பதிவும் நீக்கப்பட்டுள்ளது. " என தெரிவித்துள்ளார்.

    கிரிஷ் சோடங்கர்

    பட மூலாதாரம், Girish Chodankar/Instagram

    படக்குறிப்பு, கிரிஷ் சோடங்கர்

    "அந்த வீடியோ ஒரு மணிநேரத்தில் 12 மில்லியன் பார்வைகளை பெற்றிருந்தது. அப்புகைப்படம் கட்டுப்பாடு செயல்படுத்தப்படுவதற்கு முன்பாக 46 மில்லியன் பேரை சென்றடைந்திருந்தது.

    அரசியலமைப்பு ரீதியான பதவியேற்பு நிகழ்ச்சியின் காட்சிகளில் அப்படி என்னதான் ஆபத்து உள்ளது?

    இது, இணையவெளியில் எதிர்க்கட்சிகளின் குரல்கள் மீது மேற்கொள்ளப்படும் பாரபட்சமான தணிக்கை மற்றும் ஒடுக்குமுறை குறித்து கடுமையான கவலைகளை எழுப்புகிறது.” என பதிவிட்டுள்ளார்.

    இதுகுறித்து பாஜக எந்த எதிர்வினையையும் ஆற்றவில்லை.

  10. புகைப்படங்களை ஏஐ மூலம் ஆபாசமாக மாற்றிய கும்பல் - இந்த வைரல் நடிகை மீண்டது எப்படி?

  11. "வாழ்த்துகள்பா" - விஜய்க்கு பிரேமலதா வாழ்த்து

    காணொளிக் குறிப்பு, "வாழ்த்துகள்பா" - விஜய்க்கு பிரேமலதா வாழ்த்து
  12. காணொளி: திமுக கூட்டணியில் இருந்து சொல்லாமல் விலகினோமா? - செல்வப்பெருந்தகை பதில்

  13. திமுக கூட்டணியில் இருந்து சொல்லாமல் விலகினோமா? - செல்வப்பெருந்தகை பதில்

    காணொளிக் குறிப்பு, திமுக கூட்டணியில் இருந்து சொல்லாமல் விலகினோமா? - செல்வப்பெருந்தகை பதில்

    திமுக கூட்டணியில் இருந்து சொல்லாமல் காங்கிரஸ் விலகியதா என்பதற்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பதில் அளித்துள்ளார்.

  14. ஒரு வாக்கில் வென்ற தவெக எம்எல்ஏ - வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

    தவெக எம்எல்ஏ சீனிவாச சேதுபதி

    பட மூலாதாரம், TN Assembly

    படக்குறிப்பு, தவெக எம்எல்ஏ சீனிவாச சேதுபதி

    திருப்பத்தூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் பெரியகருப்பனை ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்த தவெக எம்எல்ஏ சீனிவாச சேதுபதி சட்டப்பேரவையில் எம்எல்ஏவாக பதவியேற்றுக்கொண்டார்.

    நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் சீனிவாச சேதுபதி முன்னாள் அமைச்சர் பெரியகருப்பனை ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்நிலையில், சீனிவாச சேதுபதி எம்எல்ஏவாக பதவியேற்க தடை விதிக்கக் கோரி திமுக வேட்பாளர் பெரியகருப்பன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

    நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பெரியகருப்பன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, சிவகங்கை மாவட்டத்தின் திருப்பத்தூர் தொகுதிக்கு உரிய வாக்குகள், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் தொகுதிக்குத் தவறுதலாக அனுப்பப்பட்டிருப்பது ஒரு அசாதாரணமான சூழ்நிலை என்று வாதிட்டதாக ‘லைவ் லா’ செய்தி தெரிவிக்கிறது.

    பெரியகருப்பன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் இளங்கோ, மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல் திரும்பி வந்துவிட்டதாகவும், ஆனால் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல் சென்று சேர்ந்துவிட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்ததாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக, பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு தேர்தல் ஆணையத்திடம் நீதிமன்றம் கூறியிருந்தது.

    இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சென்னை உயர் நீதிமன்ற விடுமுறைக்கால அமர்வு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்ததாக ‘பார் அண்ட் பெஞ்ச்’ செய்தி தெரிவிக்கிறது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு தங்களின் பங்கு முடிந்துவிட்டதாக, தேர்தல் ஆணையம் தெரிவித்ததாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  15. இந்தியாவின் பிரமோஸுடன் ஒப்பிடப்படும் பாகிஸ்தான் ஏவுகணை - வலிமை என்ன?

  16. ஆர்சிபி முதலிடம்: கடைசிப் பந்தில் த்ரில் வெற்றி பெற்று மும்பையை வெளியேற்றியது எப்படி?

  17. காணொளி: எம்எல்ஏவாக எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற தருணம்

  18. எம்எல்ஏவாக எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற தருணம்

    காணொளிக் குறிப்பு, எம்எல்ஏவாக எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற தருணம்

    எடப்பாடி தொகுதி எம்.எல்.ஏ.வாக கே.பழனிசாமி பதவியேற்ற காட்சி இது.

  19. காணொளி: உதயநிதி எம்எல்ஏவாக பதவியேற்ற தருணம்

  20. எம்எல்ஏவாக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலின்

    காணொளிக் குறிப்பு, எம்எல்ஏவாக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலின்