ஜெயக்குமாரின் பிணை மனு தள்ளுபடி: சென்னை நீதிமன்றம்
தேர்தல் விதிகளை மீறியதாகவும் வன்முறையை தூண்டியதாகவும் தொடரப்பட்ட வழக்கில், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமாரை பிணையில் விடுவிக்க சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் மறுத்து விட்டது.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
நந்தினி வெள்ளைச்சாமி
"தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக பாஜக வந்துள்ளது"- அண்ணாமலை ட்வீட்
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
"தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவில் பாஜக வரலாறு காணாத வெற்றியை அடைந்துள்ளது என்றும், இது தமிழ் மக்கள் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மீது வைத்துள்ள ஆதரவை வெளிப்படுத்தி உள்ளது," என்றும் பாஜக மாநில செயலாளர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் .
தற்போது பாஜக வெற்றி பெற்று உள்ள இடங்களில், இதற்கு முன்னதாக பாஜகவுக்கு மக்கள் பிரதிநிதிகள் இல்லை என்றும், அதிகாரபூர்வமாக தமிழ்நாட்டில் மூன்றாவது பெரிய கட்சியாக பாஜக வந்துள்ளது என்றும் அதில் தெரிவித்துள்ளார்.
யுக்ரேன் Vs ரஷ்யா: படை பலம், ஆயுத வலிமை யாருக்கு அதிகம்?
பட மூலாதாரம், EPA
படக்குறிப்பு, யுக்ரேனின் இன்னோர் அண்டை நாடான பெலாரூஸில் ரஷ்ய படைகள் கூட்டு ராணுவப் பயிற்சி செய்யும் காட்சி.
யுக்ரேன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இடையிலான பதற்றம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
யுக்ரேன் அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிழக்கு யுக்ரேன் பகுதிகளான டோனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் ஆகிய பகுதிகளுக்குத் தனது படைகளை அனுப்பியுள்ள ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், அந்த இரண்டு பகுதிகளையும் சுதந்திர தனி நாடுகளாகவும் அங்கீகரித்துள்ளார்.
சர்வதேச சமூகத்தால் யுக்ரேனின் ஓர் அங்கமாகவே பார்க்கப்படும் இந்தப் பிரிவினைவாதப் பகுதிகளுக்குள் ரஷ்யா தனது படைகளை அனுப்பியுள்ளதே ஒரு படையெடுப்புதான் என்று மேற்குலக நாடுகள் கருதுகின்றன.
தங்கள் நாட்டுப் படையினர் டோனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் ஆகிய பிராந்தியங்களில் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபடும் என்று ரஷ்ய அரசு கூறினாலும், அதை ''அறிவற்ற'' (நான்-சென்ஸ்) செயல் என அமெரிக்கா கூறுகிறது.
யுக்ரேன் அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த இரண்டு பகுதிகளுக்கும் எதிராக பல பொருளாதார மற்றும் பயணத் தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. அங்கு அமெரிக்க குடிமக்கள் முதலீடு செய்யவும், அங்கு இருப்பவர்களுடன் வர்த்தகம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விரிவாக அறிய
கள்ளக்குறிச்சி 3 நகராட்சிகள் மற்றும் 60க்கும் மேற்பட்ட பேரூராட்சி வார்டுகளில் திமுக வெற்றி
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சித்தரிப்பு படம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட 3 நகராட்சிகளை திமுக கைப்பற்றியுள்ளது.
மேலும் 5 பேரூராட்சிகளில் உள்ள 81 வார்டுகளில் நடைபெற்ற தேர்தலில், திமுக 61 வார்டுகளிலும், அதிமுக 10 வார்டுகளிலும் , காங்கிரஸ் 2 வார்டுகளிலும், பாமக 2 வார்டுகளிலும், விசிக அமமுக மற்றும் தேமுதிக தலா ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளது.
கள்ளக்குறிச்சி நகராட்சியில் கட்சி வாரியாக பெறப்பட்ட இடங்கள்
திருக்கோவிலூர் நகராட்சி
திருக்கோவிலூர் நகராட்சியில் மொத்தமுள்ள 27 வார்டுகளில், திமுக 19 வார்டுகளிலும் அதிமுக 7 வார்டுகளிலும் மற்றும் சுயேச்சை 1 வார்டில் வெற்றி பெற்றுள்ளது.
உளுந்தூர்பேட்டை நகராட்சி
உளுந்தூர்பேட்டை நகராட்சியில் மொத்தமுள்ள 24 வார்டுகளில் திமுக கூட்டணி 19 வார்டுகளிலும் திமுக 18 வார்டுகளிலும் அதிமுக 4 வார்டுகளிலும் விசிக மற்றும் அமமுக தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
கள்ளக்குறிச்சி நகராட்சி
கள்ளக்குறிச்சி நகராட்சியில் மொத்தம் உள்ள 21 வார்டுகளில் திமுக 14 வார்டுகளிலும் அதிமுக 5 வார்டுகளிலும் காங்கிரஸ் மற்றும் அமமுக 1 தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
31 வாக்குகளில் தோல்வி அடைந்த அதிமுக வேட்பாளர்
கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 38வது வார்டில் 31 வாக்கு வித்தியாசத்தில் திமுக சார்பில் போட்டியிட்ட கவிதா ரகுராமன் என்பவர் வெற்றி பெற்றுள்ளார்.
இதனால் தோல்வி அதிர்ச்சியில் அதிமுக வேட்பாளர் நிஷா கந்தன் எனபரின் கணவர் உடல்நல குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதிமுக வேட்பாளர் தோல்வியை அடுத்து முதுநகர் மோகன் சிங் வீதியில் உள்ள மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மறு பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கும் வகையில் 100க்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் தற்போதைய நிலைமை
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்
தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள 1,247 மாநகராட்சி வார்டுகளில் 964 வார்டுகளை திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளும், அதிமுக 156 வார்டுகளிலும், பாஜக 21 வார்டுகளிலும் மற்றவை 110 வார்டுகளிலும் வெற்றி பெற்றிருக்கின்றன
இதே போல் நகராட்சி வார்டுகளில் அறிவிக்கப்பட்ட 3,814 வார்டுகளில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 2,563 வார்டுகளிலும், அதிமுக 636 வார்டுகளிலும் வென்றிருக்கிறது. தேமுதிக 12 வார்டுகளையும், பாஜக 56 வார்டுகளையும், பிஎஸ்பி 3 வார்டுகளையும், மற்றவை 562 வார்டுகளையும் பெற்றிருக்கின்றன.
முடிவுகள் அறிவிக்கப்பட்ட 7,407 பேரூராட்சி வார்டுகளில் திமுக 4388 வார்டுகளையும் அதன் கூட்டணி கட்சிகள் 495 இடங்களையும் கைப்பற்றியிருக்கின்றன. அதிமுக 1,206 வார்டுகளிலும் பாஜக 230 இடங்களையும், பிஎஸ்பி 1 வார்டிலும், தேமுதிக 23 இடங்களையும் மற்றவை 1,259 இடங்களையும் கைப்பற்றியிருக்கின்றன.
ஈரோடு மாநகராட்சியில் குலுக்கல் மூலம் தேர்வான அதிமுக வேட்பாளர்
பட மூலாதாரம், ㅤ
படக்குறிப்பு, அதிமுக வேட்பாளர்
ஈரோடு மாநகராட்சி உட்பட்ட 54-வது வார்டில் குலுக்கல் முறையில் நடந்த தேர்வில் அதிமுக வேட்பாளர் சி. பாரதி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
இதில் அதிமுக வேட்பாளர் சி. பாரதி மற்றும் சுயேச்சை வேட்பாளர் செ.பானுலட்சுமி ஆகிய இருவருமே தலா 1,037 வாக்குகள் பெற்று சமநிலையில் இருந்தனர்.
இதையடுத்து வெற்றி வேட்பாளரை அறிவிக்க குலுக்கல் முறை கடைப்பிடிக்கப்பட்டது. அதன்படி நடந்த குலுக்களில் அதிமுக வேட்பாளர் சி. பாரதி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல மதுரை மாநகராட்சி 63வது வார்டில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் சிபிஎம் வேட்பாளர் கணேசன் தலா 1394 வாக்குகள் பெற்று சமநிலையில் இருந்தனர்.
இந்நிலையில் நடந்த குலுக்களில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: 36 வருடங்களுக்குப் பிறகு அதிமுகவின் கோட்டையான மண்டபம் பேரூராட்சியை கைப்பற்றிய திமுக
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சித்தரிப்பு படம்
மண்டபம் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 18 வார்டுகளில், திமுக 12 வார்டுகளிலும், அதிமுக 1 வார்டிலும் சுயேச்சைகள் 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பேரூராட்சிக்கு இதுவரையிலும் நடைபெற்ற தேர்தலில் 1986, 1996, 2001, 2006, 2011 ஆகிய 5 முறையும் வெற்றி பெற்று மண்டபம் பேரூராட்சி தலைவர் பதவியை அதிமுகவின் தங்க மரைக்காயர் பதவி வகித்தார்.
இவரது மறைவுக்கு பின்னர் தற்போது நடைபெற்ற பேரூராட்சி தேர்தலில் தலைவர் பதவியை கைப்பற்றுவதில் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது.
முதுகுளத்தூர் பேரூராட்சி 6வது வார்டில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி ஒரு வாக்கு கூட பெறவில்லை
எல்ஜிபிடி சொற்களஞ்சியம்: "இது எங்களுக்கான அடையாளம்" - பால்புதுமையினர் விளக்கம்
பட மூலாதாரம், GETTY IMAGES
உங்கள் பெயரை ஒருவர் தவறாக அழைத்தால், நீங்கள் என்ன செய்வீர்கள்? அதுவே பலமுறை தொடர்ந்தால், நீங்கள் எப்படி உணர்வீர்கள்?
இத்தகைய போக்கை நாம் ஒரு சமூகத்திடம் காலங்காலமாக திணித்து வருகிறோம். ஆம்! மூன்றாம் பாலினத்தவர் அல்லது பால்புதுமை (Queer) சமூகத்தினர், நாம் பொதுவாக அழைக்கும் பதங்களோ அல்லது நாம் அவர்களை அழைக்கும் பதங்கள் என்று கருதப்படுபவையோ, உண்மையில் அவர்களை மதிப்புடனும் கண்ணியத்துடனும் அழைக்கப்படும் சொற்களாக கருதுகின்றனர் என்று நம்மால் உறுதியாக கூற முடியாது.
இந்த சமூக பிரச்னையை கருத்தில் கொண்டு, சென்னையைச் சேர்ந்த குயர் சென்னை க்ரோனிக்கிள்ஸ், ஓரினம் என்ற அமைப்புகளும், 'தி நியூஸ் மினிட்' என்ற ஆங்கில செய்தி ஊடகமும் இணைந்து பால்சார் சொற்களஞ்சியத்தை சமீபத்தில் வெளியிட்டுள்ளன.
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: டெல்டா பிராந்தியத்தில் யாருக்கு அறுவடை? 9 மாவட்ட வெற்றி நிலவரம்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் டெல்டா மாவட்டங்களில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். மண்டலத்தில் உள்ள 4 மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது. ஓரிரு இடங்களைத் தவிர அனைத்து நகராட்சி, பேரூராட்சிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள் 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த வாக்குகள் பிப்ரவரி 22ஆம் தேதி எண்ணப்பட்டன. இதில், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கரூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய 9 மாவட்டங்களில் எந்த கட்சிக்கு அதிக வெற்றி கிடைத்துள்ளது என்பதை பார்க்கலாம்.
யுக்ரேனில் உள்ள இந்தியர்கள் நாடு திரும்ப ஏர் இந்தியா விமானம் ஏற்பாடு
பட மூலாதாரம், GETTY IMAGES
படக்குறிப்பு, ஏர் இந்தியா விமானம்
ரஷ்யா - யுக்ரேன் இடையே தீவிரமாகி வரும் நெருக்கடிக்கு மத்தியில் யுக்ரேனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க செவ்வாய்கிழமை காலையில் அந்நாட்டின் தலைநகர் கீவுக்கு சிறப்பு விமானம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இந்தியாவிற்கும் யுக்ரேனின் போரிஸ்பில் சர்வதேச விமான நிலையத்திற்கும் இடையே மூன்று விமான சேவைகளை இயக்குவதாக ஏர் இந்தியா நிறுவனம் பிப்ரவரி 18ஆம் தேதி அறிவித்தது. அதில் முதலாவது விமானம் செவ்வாய்க்கிழமை இரவு டெல்லிக்கு வரவுள்ளது.
கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கான பெரும்பான்மையை கைப்பற்றிய திமுக
கோவை மாநகராட்சியில் மேயர் பதவியை பெறுவதற்கான தனிப் பெரும்பான்மையை திமுக கைப்பற்றியுள்ளது.
100 கவுன்சிலர்கள் பதவிகளை கொண்ட கோவை மாநகராட்சியில் தற்போது வரை முடிவுகள் அறிவிக்கப்பட்ட 66 இடங்களில் திமுக 51 இடங்களிலும் காங்கிரஸ் 5 இடங்களிலும் சிபிஎம் 3 இடங்களிலும் மதிமுக 2 இடங்களிலும் மற்றும் சிபிஐ 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
எஞ்சியுள்ள 3 இடங்களில் அதிமுக மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சி ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ஒரே ஒரு தோசையை சாப்பிட்டு Rs.71,000 வெல்லாம்! நம்ப முடிவில்லையா?
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்
YouTube பதிவின் முடிவு
வந்துகொண்டிருக்கும் செய்தி, மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை திமுக காப்பாற்றும் - மு.க. ஸ்டாலின்
படக்குறிப்பு, கோப்புபடம்
திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் கொடுத்துள்ள அங்கீகாரமாக நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் உள்ளன என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெரும்பாலான மாநகராட்சிகளிலும் பேரூராட்சிகள், நகராட்சிகளிலும் மாநிலத்தில் ஆளும் திமுக முன்னிலை பெற்றுள்ளது. இறுதி முடிவுகளை மாநிலம் தேர்தல் ஆணையம் இன்னும் வெளியிடவில்லை. இருப்பினும், இதுவரை வந்த முடிவுகளின்படி ஆளும் திமுக கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு இடங்களில் திமுகவின் வெற்றி உறுதியாகியிருக்கிறது.
இந்த விலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க. ஸ்டாலின், பெண்களுக்கு அதிக அதிகாரம் கொடுப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த தேர்தலை திமுக எதிர்கொண்டது. இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ள திமுகவினர் எவ்வித புகாருக்கும் ஆளாகாமல் மக்கள் பணியாற்ர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
கடந்த ஒன்பது மாத கால ஆட்சிக்கு மக்கள் கொடுத்துள்ள அங்கீகாரம் இந்த வெற்றி . திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றி கொண்டிருக்கிறோம். எத்தனையோ நல்ல திட்டங்களை வரலாற்று சாதனையாக பதிவாக வகையில் ஆட்சி செய்கிறோம்.
100 விழுக்காடு மக்களுக்கான சேவையை அளிக்க வேண்டுமென்றால் உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டோம். அதை நம்பி மக்கள் எங்களுக்கு வெற்றியை தந்துள்ளனர். இந்த வெற்றியைக் கண்டு நான் கர்வம் கொள்ளவில்லை. மேலும் பொறுப்பு அதிகரித்துள்ளது.
மக்களை சந்தித்துப் பேச நான் என்றுமே தயங்கியதில்லை. கொடுத்த வாக்குறுதியை திமுக நிறைவேற்றும் என்ற நம்பிக்கையில் மக்கள் வாக்களித்துள்ளனர். அதை நிச்சயமாக காப்பாற்றுவோம் என்றார் மு.க. ஸ்டாலின்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: பவானிசாகர் பேரூராட்சியில் ஒரே ஒரு ஓட்டு மட்டுமே வாங்கிய பாஜக வேட்பாளர்
படக்குறிப்பு, பாஜக வேட்பாளர் நரேந்திரன்
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பேரூராட்சி 11வது வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நரேந்திரன், ஒரே ஒரு ஓட்டு மட்டுமே வாங்கி உள்ளார்.
குடும்பத்தார் உறவினர்கள் நண்பர்கள் என அனைவரும் இருந்தும் யாரும் கை கொடுக்காத நிலையில், அவர் தனக்காக போட்ட ஒரு ஓட்டு மட்டுமே தேர்தலில் பதிவாகியுள்ளது.
பட மூலாதாரம், ㅤ
படக்குறிப்பு, ㅤ
சிவகங்கை நகராட்சி 1வது வார்டில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிட்ட செங்கோல் என்பவர் ஒரு வாக்கு கூட பெறவில்லை.
இதையடுத்து சிவகங்கை நகராட்சி 1ஆவது வார்டில் மநீம டெபாசிட் இழந்தது.
தேர்தலில் டெபாசிட் இழந்தது பற்றி செங்கோலிடம் பிபிசி தமிழ் பேசியபோது, “எனக்கு அந்த வார்டில் ஓட்டு இல்லை. என் குடும்ப உறுப்பினர்கள் இருவருக்கு உள்ளது. மேலும் சில நண்பர்களும் அங்கு இருக்கிறார்கள். ஆனால், ஏன் இப்படி நடந்தது என்று தெரியவில்லை” என்று கூறினார்.
ட்ரூத் சோஷியல்: டிரம்பின் புதிய சமூக ஊடக தளம் அறிமுகம்
பட மூலாதாரம், ㅤ
படக்குறிப்பு, டொனால்ட் டிரம்ப், அமெரிக்க முன்னாள் அதிபர்
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் புதிய சமூக ஊடக தளம், ட்ரூத் சோஷியல் என்ற பெயரில் அறிமுகமாகியிருக்கிறது.
அமெரிக்க அதிபராக இருந்தபோதும், அந்த பதவியில் இருந்து இறங்க மறுத்தபோதும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை தொடர்ச்சியாக வெளியிட்டு வந்ததாகக் கூறி டொனால்ட் டிரம்புக்கு கடந்த ஆண்டு ஃபேஸ்புக், யூட்யூப், ட்விட்டர் ஆகிய பிரதான சமூக ஊடக தளங்கள் தடை விதித்தன.
இந்த நிலையில், தமது கருத்துகளை சுதந்திரமாக வெளிப்படுத்த ட்விட்டரை விட மேம்பட்ட சமூக ஊடக பக்கத்தை தாமே தொடங்கப்போவதாக டிரம்ப் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், ட்ரூத் சோஷியல் என்ற பெயரில் டிரம்ப் தொடங்கியிருக்கும் சமூக ஊடக தளம், அமெரிக்க நிறுவனமான ஆப்பிள் ஆப்ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் அறிமுகமாகியிருக்கிறது.
இந்த சமூக ஊடக பக்கத்தில் பதிவு செய்வதில் சில ஆரம்ப கால பயனர்கள் சிரமங்களை எதிர்கொண்டனர்.
இந்த சமூக ஊடக தளத்தின் தலைமை திட்ட நிர்வாகியும் முன்னாள் எம்.பியுமான டேவின் நியூன்ஸ், இந்த தளம் மார்ச் மாத இறுதிக்குள்ளாக முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிவித்தார்.
ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவு செய்ய விரும்பும் பயனர்கள் பலரிடம், "மிகப்பெரிய அளவில் தளத்தில் பதிவு செய்ய வேண்டுகோள்கள் வருவதால் உங்களை காத்திருப்பு பட்டியலில் வைத்துள்ளோம்," என்ற செய்தியை அந்த சமூக ஊடக நிறுவனம் அளித்திருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை கூறியுள்ளது.
ட்ரூத் சோஷியல் தளத்தை டிரம்ப் மீடியா அண்ட் டெக்னாலஜி குழுமம் (டிஎம்டிஜி) என்ற டிரம்பின் ஊடக நிறுவனம் நிர்வகிக்கிறது. இந்த நிறுவனம் தொடங்கி ஓராண்டாகிறது.
இதற்கு முன்பு இந்த தளத்தில் சேர்ந்து இடுகைகளை பதவிட சுமார் 500 பீட்டா சோதனை ஓட்ட பயனர்களுக்கு ட்ரூத் சோஷியல் நிறுவனம் வாய்ப்பு வழங்கியிருந்தது.
கடந்த வாரம் டிரம்பின் மகனான ஜூனியர் டொனால்ட் ட்ரூத் சோஷியல் தளத்தின் பக்கத்தை சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்து, "தயாராக இருங்கள். உங்களுடைய விருப்பமான தலைவர் விரைவில் உங்களை இதில் சந்திப்பார்," என்று கூறியிருந்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
யுக்ரேனின் பிரிவினைவாதிகள் வசமிருக்கும் இரு பகுதிகளை தனி நாடுகளாக ரஷ்யா அங்கீகரித்திருக்கிறது. அங்கு அமைதி காக்கும் பணிகள் ரஷ்யப் படைகள் மேற்கொள்ளும் என விளாடிமிர் புதின் அறிவித்துள்ளார்.
இதனிடையே யுக்ரேன் மீதான ரஷ்யப் படையெடுப்பு ஏற்கெனவே தொடங்கிவிட்டது என்று பிரிட்டன் கூறியுள்ளது.
படையெடுப்பை குறிக்கும் வகையிலேயே ரஷ்யா ஏற்கனவே பீரங்கிகள் மற்றும் படைகளை யுக்ரேனுக்கு அனுப்பியுள்ளது என்றும் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை பிரிட்டன் விதிக்கும் என்றும் அந்நாட்டு சுகாதாரத் துறை செயலர் சஜித் ஜாவித் கூறியுள்ளார்.
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்: பத்திரிகையாளர் என். ராமுடன் நேரலை
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் என். ராம் உடன் பிபிசி தமிழ் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதன் நடத்தும் நேரலை காட்சியை இங்கே பார்க்கலாம்.
21 மாநகராட்சிகளில் முந்தும் திமுக - பிற்பகல் 3 மணி நிலவரம் என்ன?
பட மூலாதாரம், ㅤ
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி மாநிலத்தில் ஆளும் திமுக 21 மாநகராட்சிகளில் முன்னிலை பெற்று வருகிறது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, வெற்றிக் கொண்டாட்டத்தில் திமுக தொண்டர்கள்