பைடனுக்கு இன்னும் வாழ்த்து தெரிவிக்காத சீனா, ரஷ்யா, சௌதி அரேபியா

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் இன்னும் முழுமையாக அறிவிக்கப்படாத போதும் அதிபராவதற்கு தேவையான 270 தேர்தல் சபை வாக்குகளின் எண்ணிக்கையை கடந்து மேலும் பல வாக்குகள் பைடனுக்கு சாதகமாக கிடைத்துள்ளன.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. யார் டிரம்பின் புதிய சட்டப் போராட்ட தளபதி?

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தேர்தல் முடிவுகளை எதிர்த்து சட்டப் போராட்டங்களை முன்னெடுக்க இருப்பதாகச் சொல்லி இருந்தார்.

    இந்த சட்டப் போராட்டத்தை முன் எடுத்துச் செல்வதற்கான நபரை கண்டு பிடித்தவிட்டார்கள் என செய்திகள் சொல்கின்றன.

    டேவிட் பாசி 2016-ம் ஆண்டில், அதிபர் டிரம்பின் துணை பிரசார மேலாளராக இருந்தவர்.

    கடந்த 2000ஆம் ஆண்டு முதல், சிட்டிசன் யுனைடெட் என்கிற குழுவின் தலைவராக இருந்து வருகிறார். டேவிட் பாசியின் காலத்தில்தான், தனி நபர்களுக்கு கருத்து சுதந்திரம் இருப்பது போல, நிறுவனங்களுக்கும் கருத்துசுதந்திரம் இருக்கிறது.

    இந்த உரிமையை, அரசியல் நன்கொடைகள் வழியாக செயல்படுத்தலாம் என்கிற, வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை, அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் இருந்து பெற்றது இந்த குழு.

    David Bossie is a former Trump aide and a veteran lobbyist

    பட மூலாதாரம், Getty Images

  2. அமெரிக்க தமிழ் எம்.பி ராஜா கிருஷ்ணமூர்த்தி பேட்டி

    நடந்து முடிந்த அமெரிக்கத் தேர்தலில் இல்லியான்ஸ் தொகுதியில் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்ட தமிழரான ராஜா கிருஷ்ணமூர்த்தி 71.45 சதவிகித வாக்குகள் பெற்று மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளார்.

    இதன் மூலம், மூன்றாவது முறையாக, அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபைக்குள் நுழைய இருக்கிறார்.

    அமெரிக்க தமிழ் எம்.பி ராஜா கிருஷ்ணமூர்த் பேட்டி

    பட மூலாதாரம், FACEBOOK/CONGRESSMANRAJA

  3. பைடன் நிர்வாகத்தின் அதிகாரிகள், அமைச்சரவை பற்றி ஆலோசனை

    வெற்றியை நெருங்கி வரும் சூழலில் டிரம்ப் நிர்வாகத்திடம் இருந்து ஆட்சி அதிகாரத்தை தங்கள் வசம் மாற்றுவதற்கான திட்டத்தை ஜோ பைடனின் குழுவினர் முடுக்கி விட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    ஜனநாயகக் கட்சியின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரிகளின் பெயர்களின் முதல் தொகுப்பு அடுத்த வாரம் வெளியிடப்படலாம் என்று நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

    வாஷிங்டன் மற்றும் பைடன் தற்போது உள்ள டெலவேர் மாகாணம் வில்மிங்டன் ஆகிய இடங்களில் இது தொடர்பாக ஆலோசனைகள் நடந்து வருகின்றன.

    அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் பன்மைத்துவம் வாய்ந்த அமைச்சரவையை பைடன் உருவாக்கலாம் என்றும் நியூயார்க் டைம்ஸ் கூறுகிறது.

    "ஆண்கள், பெண்கள், ஒருபாலுறவினர், எதிர்ப்பாலின ஈர்ப்புள்ளவர்கள், மையவாதிகள், கறுப்பினர்த்தவர்கள், வெள்ளை இனத்தவர்கள், ஆசியர்கள், " என அனைவரும் தாம் அமைக்க வாய்ப்புள்ள அமைச்சரவையில் இடம்பெறுவார்கள் என்று பைடன் இதற்கு முன் கூறியிருந்தார்.

  4. பெர்னி சாண்டர்ஸ் காணொளி

    ஜனநாயக கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் இருந்த பெர்னி சாண்டர்ஸ், ஜோ பைடன் முன்னிலை வகிப்பது குறித்து காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    வெளிப்படையாகத் தெரியக் கூடிய ஜோ பைடனின் வெற்றியை நாம் கொண்டாடும் நேரத்தில், நமது போராட்டம் இன்னும் முடியவில்லை என்ற புரிதலுடனும் உள்ளோம் என்று பெர்னி சாண்டர்ஸ் அந்தக் காணொளியில் குறிப்பிட்டுள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  5. துப்பாக்கிகளுடன் கைதுசெய்யப்பட்ட இருவர் மீது வழக்கு

    பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிலெடெல்ஃபியா நகரில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையம் ஒன்றின் அருகே துப்பாக்கிகளுடன் கைதுசெய்யப்பட்ட இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    வர்ஜினியாவில் இருந்து பென்சில்வேனியாவுக்கு ஆயுதங்களுடன் ஒரு குழு செல்வதாக புலனாய்வு முகமையான எஃப்.பி.ஐ-க்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர்கள் வியாழனன்று கைது செய்யப்பட்டனர்.

    'QAnon' எனும் சதித்திட்ட கோட்பாட்டு முத்திரைகளைக் கொண்ட ஸ்டிக்கர் அவர்கள் வந்த வாகனத்தில் ஒட்டப்பட்டிருந்தது என்று ஏபிசி நியூஸ் தெரிவிக்கிறது.

    வாக்கு எண்ணிக்கை நடக்கும் பென்சில்வேனியா கன்வென்சன் சென்டர் அருகே குண்டு வைக்கப்பட்டுள்ளதாக செய்தி கிடைத்து அருகே இருந்த பகுதியில் இருந்தவர்கள் வெள்ளியன்று வெளியேற்றப்பட்டனர். அங்கு நடத்தப்பட்ட சோதனையில் அங்கு வெடிகுண்டுகள் எதுவும் இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டது.

  6. டிரம்பின் இறங்குமுகம் வலதுசாரி அரசியலின் முடிவா?

    அமெரிக்க தேர்தலைப் பொறுத்தவரை, கடந்த பல தேர்தல்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய அன்றைய தினமே முடிவுகள் வெளியாகிவிடும். இப்போது நடந்திருப்பது கடந்த பல வருடங்களில் நாம் காணாத ஒரு விஷயம்.

    இந்தத் தேர்தலை consequential தேர்தல் என்று அழைக்கிறார்கள். அதாவது பலவிதமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய தேர்தல் என்கிறார்கள்.

  7. வெள்ளை மாளிகையில் கொரோனா

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று மீண்டு வந்துள்ள நிலையில், வெள்ளை மாளிகை தலைமை நிர்வாக அதிகாரி மார்க் மிடோஸ் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருப்பது உறுதியாகியுள்ளது என்று அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    இதுவரை அமெரிக்காவில் சுமார் 97 லட்சம் பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    நடந்து முடிந்துள்ள அதிபர் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் கொரோனா பரவல் முக்கியப் பிரச்சனைகளில் ஒன்றாக இருந்தது.

  8. டிரம்ப் உரையில் சொல்லப்பட்டவை உண்மையா?

    அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை பற்றி வெள்ளிக்கிழமை பேசிய அதிபரும், குடியரசுக் கட்சி வேட்பாளருமான டிரம்ப் எந்த ஆதாரமும் தராமல் பல குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.

    அவரது கூற்றுகள் சிலவற்றை பிபிசி உண்மை பரிசோதனைக் குழு ஆய்வு செய்தது.

    அமெரிக்க தேர்தல்

    பட மூலாதாரம், Getty Images

  9. பைடன் பேசியது என்ன?

    பைடன் தனது உரையின்போது அதிபர் டிரம்ப் பற்றி எதையும் குறிப்பிடவில்லை.

    • 74 மில்லியன் வாக்குகளுக்கும் மேல் நாம் பெற்றுள்ளோம். அமெரிக்க வரலாற்றில், அதிபர் தேர்தலில் போட்டியிட்ட வேறு யாரையும்விட இது அதிகமான வாக்குகள்.
    • இந்த முடிவுகள் நான் அதிபராவதற்கு மக்கள் கொடுத்துள்ள தெளிவான ஆணை. உங்கள் ஒவ்வொருவரின் வாக்கும் எண்ணப்படும். அதைத் தடுக்க யார் எவ்வளவு முயன்றாலும், அது நடக்க நான் விடமாட்டேன்.
    • கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தாம் பதவிக்கு வந்த முதல் நாளில் இருந்தே நடவடிக்கை எடுக்கப்படும் என்று பைடன் உறுதியளித்தார்.
    • கொரோனா வைரஸ், பொருளாதார நெருக்கடி, தேர்தல் பிரசாரத்தில் சிக்கல் ஆகியவற்றால் நாட்டில் ஆழமான பிளவு உண்டாகியுள்ளது.
    • நமக்கு தீவிரமான பிரச்சனைகள் உள்ளன. பாடுபடுத்தும் மோதல்களில் வீணாக்க நம்மிடம் நேரம் இல்லை.
    • நாம் 21ஆம் நூற்றாண்டை உரிமை கொண்டாட முடியாது என்பதற்கு காரணங்கள் இல்லை. நாம் யார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
    Biden promises immediate action on virus

    பட மூலாதாரம், Getty Images

  10. வந்துகொண்டிருக்கும் செய்தி, அமெரிக்க மக்களுக்கு ஜோ பைடன் உரை

    அதிபர் டிரம்பை விட கூடுதல் தேர்தல் சபை இடங்களைக் கைப்பற்றி முன்னிலையில் உள்ள ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன், டெலவேர் மாகாணத்தில் உள்ள வில்மிங்டனில் தனது ஆதரவாளர்கள் மத்தியில், நாட்டு மக்களுக்கு சற்று முன்பு உரையாற்றியுள்ளார்.

    "நாம் போட்டியாளர்கள்தான்; எதிரிகள் அல்ல; நாம் அனைவரும் அமெரிக்கர்கள்," என்று அவர் பேசினார்.

    இந்த நாடே நம்முடன் இருக்கும் சூழலில், தெளிவான பெரும்பான்மையுடன், நாம் இந்தப் போட்டியில் வெல்லப்போகிறோம் என்று தனது ஆதரவாளர்களிடம் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

  11. நெருக்கமான போட்டி: அமெரிக்க வாழ் தமிழர்கள் கூறுவதென்ன?

    ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் குடியரசு கட்சியின் வேட்பாளர் அதிபர் டிரம்பை விட பெரும் அளவிலான வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவார் என்று தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் கூறின.

    ஆனால், போட்டி மிகவும் நெருக்கமாக உள்ளது ஏன் என்று அமெரிக்க வாழ் தமிழர்கள் சிலர் பிபிசியிடம் கூறினார்கள்.

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  12. 'கோபத்தில் டிரம்ப்'

    தொலைக்காட்சிகளிலும், தெருக்களிலும் தமக்கு ஆதவாக சிலர் மட்டுமே வந்துள்ளதால், தமது கூட்டாளிகள் மீது டிரம்ப் கோபமாகவும், ஏமாற்றம் அடைந்தும் இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் சிபிஎஸ் நியூஸ் ஊடகத்திடம் தெரிவித்துள்ளன.

    வெள்ளியன்று டிரம்ப் அதிக நேரம் தொலைக்காட்சி பார்த்ததாகவும், நிறையத் தொலைபேசி அழைப்புகள் விடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் அதிபரின் 'ஓவல் ஆஃபீஸ்' அலுவலகம் மற்றும் வீடு ஆகியவற்றில் தமது நேரத்தை செலவிட்டுள்ளார்.

    வாக்கு எண்ணிக்கையை எதிர்த்து டிரம்ப் குழுவினர் சட்ட நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், அது குறித்த தெளிவான உத்திகளை தெரிவிக்கவிலல்லை.

    சில மாதங்களுக்கு முன்னரே இந்த உத்திகளைத் திட்டமிட்டிருக்க வேண்டும் என்று கருதும் அவரது குழுவினர் சிலர், இதுகுறித்து அதிபரிடம் வெளிப்படையாகப் பேச விரும்பவில்லை.

    பென்சில்வேனியாவில் பைடன் வென்று, டிரம்ப் மற்றும் பைடன் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையில் வேறுபாடு மிகவும் குறைவாக இருந்தால், டிரம்ப் உச்ச நீதிமன்றத்தை அணுகுவது அவருக்கு பலன் தரக்கூடும்.

    பைடன் பெரிய அளவில் வென்றால் இது பலனளிக்காது. அதிபரின் சட்டக் குழு இந்த விவகாரத்தில் இப்போது கவனம் செலுத்தி வருகிறது.

    டிரம்ப்

    பட மூலாதாரம், Reuters

    படக்குறிப்பு, வெள்ளை மாளிகையில் வியாழனன்று செய்தியாளர்களைச் சந்தித்ததுதான் டிரம்ப் கடைசியாக பொது வெளியில் தோன்றிய நிகழ்வு.
  13. தாமதமாக வந்த வாக்குகள் - உச்ச நீதிமன்றம் சொல்வதென்ன?, பென்சில்வேனியாவில் பைடன் முன்னிலை

    பென்சில்வேனியாவில் உள்ளூர் நேரப்படி இரவு 8 மணிக்கு மேல் பெறப்படும் தபால் வாக்குகளைத் தனியாக வைத்திருக்குமாறும், அவை தனியாகவே எண்ணப்படவேண்டும் என்றும் அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி சாமுவேல் அலிட்டோ ஆணையிட்டுள்ளார்.

    தாமதமாகப் பெறப்படும் வாக்குகளை எண்ணக்கூடாது என்று டிரம்பின் குடியரசு கட்சியினர் வழக்கு தொடுத்திருந்தனர். எனினும், அது நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

    நவம்பர் 3 என்று தேதியிடப்பட்ட, ஆனால் தாமதமாக வந்து சேர்ந்த வாக்குகளைப் பிரித்து வைத்திருக்கும் நடைமுறை ஏற்கனேவே அங்கு உள்ளது.

    அந்த நடைமுறையை பின்பற்றுமாறு மட்டுமே உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

    இங்கு சுமார் 22,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் பைடன் முன்னிலை பெற்றுள்ளார்.

    இங்கு 20 தேர்தல் சபை உறுப்பினர்கள் உள்ளதால், இந்த மாநிலத்தைக் கைப்பற்றினால் பைடன் 270 எனும் வெற்றிக்குத் தேவையான எண்ணிக்கையைக் கடக்க முடியும்.

  14. அமெரிக்க தேர்தல் முடிவும், இந்திய அமெரிக்க உறவும்

    இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கும் டொனால்ட் டிரம்பிற்கும் இடையிலான இணக்கமான உறவைப் பார்க்கும்போது, பைடன் அமெரிக்காவின் அதிபரானால், உறவுகள் அப்படியே இருக்குமா என்ற கேள்விகள் எழலாம்.

    ஆனால் வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரிகளுக்கும், வெளியுறவுக் கொள்கை நிபுணர்களுக்கும், அமெரிக்காவின் அடுத்த அதிபரைப் பற்றி அதிக உற்சாகமோ கவலையோ இல்லை.

  15. வாக்குகள் எண்ணப்படும் மாகாணங்களில் இப்போதைய நிலவரம் என்ன?

    நெவாடா - இதுவரை 91% வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நெவாடாவில், அதிபர் டிரம்பை விட பைடன் 22,657 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகிக்கிறார். இந்த மாகாணம் ஆறுதேர்தல் சபை உறுப்பினர்களைப் பெற்றுள்ளது.

    பென்சில்வேனியா - 20 தேர்தல் சபை உறுப்பினர்களைப் பெற்றுள்ள பென்சில்வேனியாவின் டிரம்பை விட பைடன் சுமார் 20,000 வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளார். இன்னும் இங்கு சுமார் ஒரு லட்சம் தபால் வாக்குகள் எண்ணப்படவில்லை. அதிகாரிகளால் சரிபார்க்கப்படாத கணிசமான எண்ணிக்கையிலான வாக்குகளும் இங்கு இன்னும் எண்ணப்படவில்லை.

    ஜோர்ஜா - இங்கு 16 தேர்தல் சபை வாக்குகள் உள்ளன. இங்கும் டிரம்பை விட பைடன் 4,200 வாக்குகளுக்கும் மேலாகப் பெற்று முன்னிலை வகிக்கிறார். வெள்ளிக்கிழமைக்குள் தேர்தல் அதிகாரிகள் கைகளுக்கு வந்தால், பல்லாயிரம் ராணுவத்தினரின் தபால் வாக்குகளும் எண்ணிக்கையில் சேர்த்துக்கொள்ளப்படும். எனினும், போட்டி நெருக்கமாக உள்ளதால் மறு எண்ணிக்கை நடக்கும் என்று இந்த மாகாண அரசு கூறியுள்ளது.

    அரிசோனா - 11 தேர்தல் சபை வாக்குகள் உள்ள இந்த மாகாணத்தில் பைடன் சுமார் 39,000 வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளார். எனினும், டிரம்ப் பெற்றுள்ள வாக்குகள் இந்த இடைவெளியைக் குறைத்து வருகின்றன.

    வட கரோலினா - 15 தேர்தல் சபை உறுப்பினர்களைக் கொண்டுள்ள இந்த மாகாணத்தில் டிரம்ப் சுமார் 8,000 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். இங்கு பதிவான வாக்குகளில் சுமார் 98% வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன.

    அலாஸ்கா - 3 தேர்தல் சபை உறுப்பினர்களைக் கொண்டுள்ள இந்த மாகாணம், தேர்தல் முடிவுகள் மீது பெரும் தாக்கம் செலுத்தாது. இங்கு இதுவரை எண்ணப்பட்டுள்ள வாக்குகளில் 62.9% வாக்குகளைப் பெற்று டிரம்ப் முன்னிலை பெற்றுள்ளார்.

    US election 2020: Who is ahead in the states still counting?
  16. 'நாட்டு மக்களுக்கு பைடன் உரையாற்றுவார்'

    தனது சொந்த மாகாணமான டெலவேரில் இருந்து, அமெரிக்க மக்களுக்கு உரையாற்ற ஜோ பைடன் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அவருக்கு 270 தேர்தல் சபை வாக்குகளுக்கும் அதிகமாகக் கிடைத்துள்ளதாக ஊடங்கங்கள் உறுதிப்படுத்தினால், அவர் தாம் வெற்றி பெற்றதாக அறிவிப்பார் என்றும் பைடனின் குழுவில் உள்ள ஒருவர் தெரிவித்துள்ளார்.

    எனினும், எதிர்பார்த்த வேகத்தைவிட வாக்கு எண்ணிக்கை மெதுவாகவே நடந்து வருவதால், அவர் 270 எனும் எண்ணிக்கையைக் கடந்தாலும், இல்லாவிட்டாலும் அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என்று அவரது குழுவில் உள்ள ஒருவர் தெரிவித்துள்ளதாக சிபிஎஸ் நியூஸ் செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.

  17. டிரம்ப் ட்விட்டர் பதிவு

    தாம் வெற்றிபெற்றதாக, தவறான வகையில் பைடன் அறிவித்துக்கொள்ளக் கூடாது என்று அதிபர் டொனால்டு டிரம்ப் ட்விட்டரில் எச்சரித்துள்ளார். என்னாலும், அவ்வாறு அறிவித்துக்கொள்ள முடியும் என்று அப்பதிவில் குறிப்பிட்டுள்ள டிரம்ப், சட்ட நடவடிக்கைகள் வெறும் தொடக்கம் மட்டுமே என்று கூறியுள்ளார்.

    இன்னும், முழுமையான முடிவுகள் வெளியாகவில்லை என்றாலும், தாம் தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டதாக டிரம்ப் ஏற்கனேவே இரண்டு முறை கூறியுள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  18. நேற்று நடந்தவை - 10 முக்கிய தகவல்கள்

    • கடந்த வியாழக்கிழமை நடந்த வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, டொனால்ட் டிரம்ப் அல்லது ஜோ பைடன் ஆகிய இருவரும் அதிபராகத் தேவைப்படும் 270 தேர்தல் சபை உறுப்பினர்களைப் பெறவில்லை.
    • ஆனாலும், ஒப்பீட்டு அளவில் வாக்குகள் அடிப்படையில் பைடன் முன்னிலை வகிக்கிறார். இதுவரை 44 மாகாணங்களில் முடிவுகள் வெளியாகியுள்ளன.
    • இப்போதைக்கு போர்க்கள மாகாணங்களான ஜோர்ஜா, நெவாடா, பென்சில்வேனியா, அரிசோனா ஆகியவற்றில்தான் கவனம் செலுத்தப்படுகிறது. ஜோர்ஜாவில் மறு வாக்கு எண்ணிக்கை நடக்கும் என்று அந்த மாகாண அரசு தெரிதவித்துள்ளது.
    • இன்னும் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படாத பென்சில்வேனியா, நெவாடா, அரிசோனா உள்ளிட்ட மாநிலங்களின் பைடன் முன்னிலை பெற்றுள்ளார். வட கரோலினா, அலாஸ்கா ஆகிய மாகாணங்களிலும் இன்னும் முடிவுகள் வெளியாகவில்லை.
    • பல இடங்களில் தேர்தல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. பென்சில்வேனியாவில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த டிரம்பின் பிரசார குழு முன்வைத்த கோரிக்கையை ஏற்க அங்குள்ள நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
    • ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன், தொடர்ச்சியாக பதிவிட்ட ட்வீட்டுகளில், "பல மாகாணங்களில் சட்ட நடவடிக்கை மூலம் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த டொனால்ட் டிரம்ப் மேற்கொள்ளும் முயற்சிகளை நாம் தடுத்தாக வேண்டும்" என்று கூறியுள்ளார்.
    • ஜனநாயக கட்சி அதிபர் பதவி வேட்பாளர் ஜோ பைடனின் பாதுகாப்பை அதிகரிக்க ரகசிய சேவை அதிகாரிகள் ஆயத்தமாகி வருவதாக வாஷிங்டன் போஸ்ட் என்ற அமெரிக்க நாளிதழ் தெரிவித்துள்ளது.
    • டிரம்புக்கு ஆதரவாக அவரது சொந்த கட்சிக்காரர்கள் கூட வாய் திறக்க மறுத்து வருவதாக அவரது மகன் எரிக் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாகச் சாடியுள்ளார்.
    • அமெரிக்க தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக கூறும் டிரம்ப்பை பொருத்தவரை, நியாயமாக பதிவான வாக்குகள் எண்ணப்பட்டால், தான்தான் உத்தேச வெற்றியாளர் என்று கருதுகிறார். ஆனால், தேர்தல் நடைமுறை மோசடி தொடர்பாக அவர் சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் வழங்கவில்லை.
    • காரணம், தனது தேர்தல் பரப்புரையில் ஆதரவாளர்களிடமும் பொதுமக்களிடமும் கொரோனா பெருந்தொற்று காரணமாக மக்கள் அஞ்சல் வழியில் வாக்குகளைப் பதிவு செய்யுமாறு அவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
    US Election 2020 Results
  19. வணக்கம் நேயர்களே!

    அமெரிக்க அதிபர் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்த பிபிசி தமிழின் சிறப்பு நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம்.

    டெல்லியில் இருந்து அ.விக்னேஷ் மற்றும் அ.தா. பாலசுப்ரமணியன் ஆகியோர் இந்த நேரலைப் பக்கத்தை உங்களுக்குத் தொகுத்து வழங்குகிறோம்.

    நேற்று நடந்த முக்கிய நிகழ்வுகளை நீங்கள் இங்கே படித்துத் தெரிந்து கொள்ளலாம்.