"எல்லோருக்குமான அதிபராக இருப்பேன்" - ஜோ பைடன்
அமெரிக்க அதிபராக தன்னை தேர்வு செய்த நாட்டு மக்களுக்கு ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், நமக்கு முன்னால் உள்ள பணிகள் கடினமாக இருக்கும். ஆனால் இதை நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்: நீங்கள் எனக்கு வாக்களித்தாலும் வாக்களித்திருக்காவிட்டாலும் நான் எல்லா அமெரிக்கர்களுக்குமான ஒரு அதிபராக இருப்பேன் . நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு பாத்திரமாக நான் இருப்பேன் என்று கூறியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு











