பைடனுக்கு இன்னும் வாழ்த்து தெரிவிக்காத சீனா, ரஷ்யா, சௌதி அரேபியா
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் இன்னும் முழுமையாக அறிவிக்கப்படாத போதும் அதிபராவதற்கு தேவையான 270 தேர்தல் சபை வாக்குகளின் எண்ணிக்கையை கடந்து மேலும் பல வாக்குகள் பைடனுக்கு சாதகமாக கிடைத்துள்ளன.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
மீண்டும் பலத்தை நிரூபித்த இந்திய வம்சாவளி அரசியல்வாதிகள்
பட மூலாதாரம், Twitter/Getty
அமெரிக்கத் தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான்கு தலைவர்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் மீண்டும் நாடாளுமன்றத்துக்கு வெற்றி பெற்றுள்ளனர். டாக்டர் ஆமி பெரா, ரோ கன்னா, பிரமிளா ஜெய்பால் மற்றும் ராஜா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரே அந்த நால்வர்.
மும்பையில் பிறந்த 52 வயதான மருத்துவர் ஹெரல் திபிர்னெனி, குடியரசுக் கட்சி வேட்பாளர் டெபி செல்கோ ஆகியோர் இடையே அரிசோனாவில் கடுமையான போட்டி நிலவுகிறது. வாக்கு எண்ணிக்கை இங்கே இன்னும் தொடர்கிறது.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்
YouTube பதிவின் முடிவு
தி ஹிந்து குழுமத்தின் இயக்குநரும் மூத்த பத்திரிகையாளருமான என். ராம் அவர்களுடன் உரையாடல்
அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் குறித்து, தி ஹிந்து குழுமத்தின் இயக்குநரும் மூத்த பத்திரிகையாளருமான என். ராம் அவர்களுடன் உரையாடல். நேரலை.
அமெரிக்க தமிழ் எம்.பி ராஜா கிருஷ்ணமூர்த்தி பேட்டி
காணொளிக் குறிப்பு, அமெரிக்க தமிழ் எம்.பி ராஜா கிருஷ்ணமூர்த்தி பேட்டி
'ஜோ பைடன் அதிபரானால் இந்தியாவுக்கு எப்படி உதவுவார்?' - அமெரிக்க தமிழ் எம்.பி பேட்டி
பட மூலாதாரம், Reuters
நடந்து முடிந்த அமெரிக்கத் தேர்தலில் இல்லினோய் மாகாணத்தில் இருந்து நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்ட தமிழரான ராஜா கிருஷ்ணமூர்த்தி 71.45 சதவிகித வாக்குகள் பெற்று மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளார்.
காணொளிக் குறிப்பு, ஜோ பைடன் அதிபராவது இந்த உலகுக்கே ஏன் முக்கியம்?
சொந்த வாழ்வில் சோகங்களை சந்தித்த மனிதர் - யார் இந்த ஜோ பைடன்?
காணொளிக் குறிப்பு, சொந்த வாழ்வில் சோகங்களை சந்தித்த மனிதர் - யார் இந்த ஜோ பைடன்?
அமெரிக்கத் துணை அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி, கொண்டாட்டத்தில் பைங்கநாடு கிராமமக்கள்
பட மூலாதாரம், bbc
பட மூலாதாரம், bbc
பட மூலாதாரம், bbc
விவேகமற்று இருக்க விரும்பவில்லை: மெக்சிகோ அதிபர்
உலக தலைவர்கள் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோபைடனுக்குவாழ்த்து சொல்ல, ஒருவர் மட்டும் இதில் மிகவும் கவனமாக இருக்கிறார். மெக்சிகோ அதிபர்தான் அவர்.
மெக்சிகன் அதிபர் அம்லோ என அழைக்கப்படும் ஆண்ட்ரெஸ் மேனுவல், “இவ்வளவு விரைவாக வாழ்த்த வேண்டாம் என நினைக்கிறேன். அவர் சில சட்டபிரச்சனைகளைச் சந்தித்து வெல்ல வேண்டும்,”எனகூறி உள்ளார்.
அவர் சட்ட பிரச்சனை என கூறுவது, ட்ரம்ப் தரப்பு இந்த தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக பதிந்துள்ள வழக்குகளைத்தான். வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு என்கிறார் டிரம்ப். ஆனால், அது என்ன முறைகேடு என்பதை விளக்கவில்லை.
நாங்கள் விவேகமற்று செயல்பட விரும்பவில்லை எனஅம்லோ தெரிவித்துள்ளார்.
ஜோ பைடன்: மூன்றாவது ஓட்டத்தில் முதலிடம் பிடித்த "அதிபர்"
அமெரிக்க அதிபர் பதவிக்கான போட்டியில் மூன்றாவது முயற்சியாக முதலிடத்துக்கு தகுதி பெற்றிருக்கிறார் ஜோ பைடன். ஆனால், அதற்கு அவர் கொடுத்த விலைகள் ஒன்றிரண்டு தசாப்தங்கள் அல்ல. 1987ஆம் ஆண்டில் ஒரு முறையும், 2008ஆம் ஆண்டில் இரண்டாவது முறையும் அதிபராகும் போட்டியில் இருந்த அவரால், தனது 77ஆவது வயதில்தான் அப்பதவிக்கான போட்டியில் முதலிடத்துக்கு முன்னேற முடிந்திருக்கிறது.
ஐயோவா மாகாணத்தில் மறைமுக தேர்வு (காகசஸ்), நியூ ஹாம்ஷையரில் நேரடி தேர்வு (பிரைமரி) மூலம் அதிபர் வேட்பாளராக தேர்வாக முடியாத நிலை பைடனுக்கு சில தசாப்தங்களுக்கு முன்பே உண்டு. அந்த பின்னடைவு தந்த வலிகளும் அரசியலில் நீடிக்கும் அவரது பழுத்த அனுபவமும்தான் இம்முறை மூன்றாவது முயற்சியாக நில்லாமல் ஓடி மறைமுக தேர்வு, நேரடி தேர்வு என இரண்டிலும் ஒருமித்த ஆதரவை பெற்று ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரானார் ஜோ பைடன். இதற்கு அவருக்கு 14 மாகாணங்களில் இருந்து அவரது முன்மொழிவை ஜனநாயக கட்சியினர் ஆதரித்தனர்.
நீங்கள் ஜோ பைடன் அதிபராவது குறித்து அறிய வேண்டிய விஷயம் என்ன?, ஜோ பைடன் அதிபராவது அமெரிக்காவுக்கு மட்டுமல்ல இந்த உலகுக்கே ஏன் முக்கியமானது?
ஜோ பைடன் முழுமையான உரை
"இந்த தேசத்தின் மக்கள் தங்களது எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்கள் நமக்கு தெளிவான ஒரு வெற்றியை தந்துள்ளனர்," என்று ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.
"நீங்கள் என்மீது வைத்த நம்பிக்கைக்கும் உறுதிக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன். வேற்றுமையை கோராமல் ஒற்றுமையை கோரும் ஒரு அதிபராக நான் இருப்பேன்." என அவர் கூறி உள்ளார்.
வந்துகொண்டிருக்கும் செய்தி, கமலா ஹாரிஸின் முழுமையான உரை
அமெரிக்கத் துணை அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிஸ், அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடனுடன் சேர்ந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
இந்தியத் தமிழ் மற்றும் கருப்பினப் பூர்வீகம் கொண்டவரான கமலா ஹாரிஸ் தமது உரையைத் தொடங்கும்போது இப்படிக் குறிப்பிட்டார்:
"ஜனநாயகம் என்பது ஒரு நிலை அல்ல. அது ஒரு செயல்பாடு என்று நாடாளுமன்ற உறுப்பினரான ஜான் லூயிஸ் இறப்பதற்கு முன்பு எழுதினார். அமெரிக்காவின் ஜனநாயகம் என்பது உத்தரவாதம் செய்யப்பட்டது அல்ல. ஜனநாயகத்துக்காகப் போராடுவதற்கு நாம் எந்த அளவுக்கு விரும்புகிறோமோ அந்த அளவுக்கே அது வலுவாக இருக்கும் என்பதே அவர் சொன்னதன் பொருள்"
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் அரசில் துணை அதிபராக உள்ள கமலா ஹாரிஸ், இந்திய, தமிழ் பூர்வீகம் உள்ளவர்.
இவரது தாத்தா கோபாலன் இந்தியாவில் மத்திய அரசுப் பணியில் இருந்தவர். கோபாலனின் மகள் ஷியாமளா, தமது 19ம் வயதில் மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்று அங்கேயே குடியேறினார். அந்த நாட்டின் தலைசிறந்த மார்பகப் புற்றுநோய் மருத்துவச் சிகிச்சை நிபுணராக அவர் விளங்கினார்.
அங்கு ஜமைக்காவில் இருந்து அமெரிக்காவில் குடியேறிய டொனால்ட் ஹாரிஸை ஷியாமளா திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு கமலா ஹாரிஸ், மாயா ஹாரிஸ் ஆகிய இரு மகள்கள்.
கமலா ஹாரிஸ் வெற்றி - கொண்டாட்டத்தில் துளசேந்திரபுரம் கிராமமக்கள், பிபிசி தமிழ் நேரலை
அமெரிக்காவின் ஆன்மாவை மீட்டெடுக்க
பட மூலாதாரம், Getty images
"இந்த தேசத்தின் மக்கள் தங்களது எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்கள் நமக்கு தெளிவான ஒரு வெற்றியை தந்துள்ளனர்," என்று ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.
"நீங்கள் என்மீது வைத்த நம்பிக்கைக்கும் உறுதிக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன். வேற்றுமையை கோராமல் ஒற்றுமையை கோரும் ஒரு அதிபராக நான் இருப்பேன்." என அவர் கூறி உள்ளார்.
ஒற்றை அமெரிக்கா
"சிவப்பு நிற மாகாணங்கள் நீல நிற மாகாணங்கள் என்றில்லாமல், பல மாகாணங்கள் ஒன்றிணைந்த அமெரிக்காவாக நான் பார்ப்பேன். உங்கள் நம்பிக்கையைப் பெற முழு மனதாக பணியாற்றுவேன்,"என அவர் தெரிவித்துள்ளார்.
"அமெரிக்கா என்பது மக்களை குறித்தது. நான் இந்த பதவிக்கு வந்ததற்குக் காரணம், அமெரிக்காவின் ஆன்மாவை மீட்டெடுக்கவும், இந்த நாட்டின் முதுகெலும்பான நடுத்தர வர்க்க மக்களை மறுகட்டமைக்கவும், மீண்டும் அமெரிக்காவை அனைவரும் மதிக்கும்படியும், நாட்டில் ஒற்றுமையை உருவாக்கவும்தான். தனது இந்த நோக்கத்திற்காக பலர் வாக்களித்துள்ளது குறித்து தான் வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டுள்ளதாக," கூறிய அவர், தற்போது கடமையாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டதாக தெரிவித்தார்.
கசப்புகளை ஒதுக்கி வைப்போம்
தனது தேர்தல் பிரசாரத்திற்கு உதவிபுரிந்த பல்வேறு தரப்பினருக்கும் நன்றி தெரிவித்த பைடன், டிரம்பிற்கு ஆதரவளித்தவர்கள் குறித்தும் உரையாற்றினார். "ஒவ்வொருவருக்கும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். கசப்புகளை ஒதுக்கி வைத்து, ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வோம், நமது எதிர்தரப்பினரை எதிரிகளாக நடத்துவதை நிறுத்துவோம்," என்றார்.
"எனக்கு வாக்களிக்காதவர்களுக்கும் எனக்காக வாக்களித்தவர்களுக்காகப் பணி செய்வதுபோலவே நான் கடுமையாக பணி செய்வேன்," என்றார்.
"தனது முதல் பணி கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதுதான். நாம் இயல்பு நிலைக்குச் செல்ல அதுதான் ஒரே வழி," என்று கூறிய பைடன்.
"திங்களன்று, முன்னணி விஞ்ஞானிகள்,
நிபுணர்களுடன், பதவி மாற்ற வல்லுநர்களுடன் ஆலோசிப்பேன்," என்று கூறினார்.'
"எங்கள் கொரோனா கட்டுப்பாட்டுத் திட்டத்தை செயலாக மாற்ற அவர்கள் உதவி செய்வர், இந்த பணி ஜனவரி 20ஆம் தேதி 2021ஆம் ஆண்டு தொடங்கும்," என்றார்.
இந்த ஒன்றியத்தை 1860ஆம் ஆண்டு லிங்கன் காத்தார். 1932ஆம் ஆண்டு ரூஸ்வெல்ட் அப்போதைய பிரச்சனைகளை தீர்க்க உறுதி பூண்டார். 1960ஆம் ஆண்டு கென்னடி எல்லைகளுக்கான புதிய உறுதியை அளித்தார். ஒபாமா புதிய வரலாற்றை படைத்தார். நம்மால் முடியும் என்றார்.
தேவதைகளுக்கும், இருளுக்கும் நடந்த தொடர் சண்டையால் உருப்பெற்ற தேசம் இது. தேவதைகள் நீடிப்பதற்கான தருணம் இது.
மொத்த உலகமும் அமெரிக்காவை பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த உலகிற்கான வழிக்காட்டி அமெரிக்கா என தனது உரையில் பைடன் கூறி உள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
இந்திய பிரதமர் ஜோ பைடனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நான் உங்களுடன் பணியாற்ற ஆவலாக இருக்கிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வந்துகொண்டிருக்கும் செய்தி, நான் கடைசி பெண்ணல்ல
பட மூலாதாரம், Reuters
பைடனின் குடும்பத்தைப் பற்றி பேசிய அவர் பின்னர் தம் குடும்பம் குறித்தும் பேசினார். இந்த தருணம் பெண்களுக்கு எப்படியானதாக இருக்கும் என்றும் பேசினார்.
என் அம்மா அமெரிக்காவில் இப்படியான நிகழ்வு நிச்சயம் சாத்தியப்படும்எனதெரிவித்தார்.’
ஒரு பெண் துணை அதிபராக தேர்ந்து எடுக்கப்பட்டிப்பதை குறிப்பிட்டே கமலா இவ்வாறாக பேசினார்.’
தனி மனுஷியாக என் அம்மா என்னை வளர்த்தெடுத்தார் அவரை நான் இந்த தருணத்தில் நினைத்துப் பார்க்கிறேன். இந்த தருணத்தை சாத்தியப்படுத்திய கருப்பினமக்களை, ஆசியர்களை,வெள்ளை இனத்தவர்களை,லத்தீனியர்களை நான் இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்கிறேன் என அவர் தன் உரையில் குறிப்பிட்டார்.
இந்த மக்கள்தான் ஜனநாயகத்தின் முதுகெலும்பு. நூறு ஆண்டுகளுக்கு முன்பு 19வதுசட்டத்திருத்தத்திற்காகப் போராடியவர்கள் அவர்கள். 55 ஆண்டுகளுக்கு முன்பு வாக்குரிமைக்காகப் போராடியவர்கள் அவர்கள்.2020தில் புதிய தலைமுறை பெண்களாக தங்கள்வாக்குகளைப் பதிவு செய்துள்ளார்கள்.
இந்த போராட்டத்தின், இலக்கின் வெளிப்பாடாக இப்போது நான் இருக்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.
துணை அதிபராக ஒரு பெண்ணை தேர்ந்து எடுத்ததற்குபைடனைபாராட்டினார் கமலாஹாரிஸ்.
துணைஅதிபராக பதவி ஏற்கும் முதல் பெண்ணாக நான் இருக்கலாம். நான் கடைசி பெண் அல்ல என அவர் தெரிவித்தார்.
நீங்கள் நம்பிக்கையை தேர்வு செய்தீர்கள், பைடனை தேர்வு செய்தீர்கள்
நீங்கள் நம்பிக்கையை தேர்வு செய்தீர்கள். ஒற்றுமையை, கண்ணியத்தை, அறிவியலை, உண்மையை தேர்வு செய்தீர்கள் அதனால் நீங்கள் பைடனை தேர்வு செய்தீர்கள் என கமலா ஹாரீஸ் கூறி உள்ளார்.
மக்களின் ஆராவாரத்திற்கு இடையே உரையாற்றி வரும் இவர் இவ்வாறாக கூறி உள்ளார்.
பைடன் ஒரு ஹீலர் என கூறிய கமலா, கடந்த காலங்களில் தோல்வியை சந்தித்த நபருக்குதான் தேவை குறித்த ஒரு புரிதல் இருக்கும். அந்த புரிதல் ஒரு தேசமாக நம் நோக்கத்தை மீட்டெடுக்க உதவும் என கூறி உள்ளார்.
குடும்பத்தின் மீதான பைடனின் பாசம், அவரது நல் இயல்பு என பல விஷயங்களை பட்டியலிட்டார் கமலா ஹாரிஸ்.