கவனிக்க வேண்டிய முக்கிய மாகாணங்கள், ஆன்டனி ஸர்ச்சர், வட அமெரிக்கா பிபிசி செய்தியாளர்
அமெரிக்காவில் நள்ளிரவைக் கடந்த நிலையில் நடக்கும் வாக்குப்பதிவில், பல மாகாணங்களில் தனக்கு முன்னிலை வாய்ப்புகள் இருப்பதாக ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் தெரிவிப்பதாக பிபிசி செய்தியாளர் ஆன்டனி ஸர்ச்சர் கூறுகிறார்.
இந்த தேர்தலில் அதிபர் பதவியை தக்க வைக்க தேவைப்படும் மேஜிக் எண் 270 வேண்டுமெனில், டொனால்ட் டிரம்புக்கு ஓஹையோ, வடக்கு கரோலைனா ஆகிய மாணாங்களின் வாக்குகள் சாதகமாக இருக்க வேண்டும். ஆனால், பாதிக்கும் அதிகமான வாக்காளர்கள் இந்த தேர்தலில் பைடனுக்கு ஆதரவாக இருப்பதாக செய்திகள் வருகின்றன.
இதற்கிடையே, விர்ஜீனியாவில் டிரம்ப் முன்னிலை வகித்து வருகிறார். ஆனால், இங்கு எப்போதுமே குடியரசு கட்சிக்கு சாதகமாகவே ஆரம்பநிலை முன்னிலை நிலவரம் இருப்பது வழக்கம். இங்குள்ள வாஷிங்டன் டி.சி ஜனநாயக கட்சிக்கு சாதகமானவர்களை அதிகம் கொண்டுள்ளதால் அதன் முடிவையும் பொறுத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது.