முன்னதாக ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் பெரும்பான்மையோடு வெற்றி
பெறலாம் என கணிக்கப்பட்டாலும், தற்போதைய நிலவரம் அது போன்று இல்லை.
மிக குறைந்த அளவிலான வித்தியாசத்தில் இருவருக்கும் கடுமையான போட்டி நிலவி வருகிறது.
இதில் முக்கியமானவை போர்க்கள மாகாணங்கள் யார் வசம் செல்கின்றன என்பதுதான்.
அரிசோனா, ஜோர்ஜா,
விஸ்கான்சின், மிசிகன் மற்றும் பென்னிசில்வேனியாவில் யார் வெற்றி பெறப்போகிறார்கள் என்பது மிகவும் முக்கியமான ஒன்று.
அரிசோனா: 1996ஆம் ஆண்டில் இருந்து
குடியரசு கட்சிக்கு ஆதரவாக இந்த மாகாணம் வெற்றி வாய்ப்பை வழங்கியதில்லை. அது ஜோ
பைடனுக்கு சாதகமாக வாய்ப்பாகியிருக்கிறது. இளம் முற்போக்கு லத்தீன்
அமெரிக்கர்கள் அங்கு அதிகம் வாழ்வதால் அவர்களின் ஆதரவு பைடனுக்கு சாதகமாக உள்ளது.
விஸ்கான்சின், பென்சில்வேனியா: இந்த
மாகாணங்களில் இன்னும் தபால் வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கப்படவில்லை. அதன் முடிவு
தெரிய சில நாட்களாகலாம்.
ஜோர்ஜா:
முன்னதாக இந்த மாகாணத்தில் டிரம்ப் எளிதாக வெற்றி பெறுவார் என்று கூறப்பட்டது. ஆனால்,
தற்போது அங்கு நிலைமை மாறியுள்ளது. டிரம்புக்கும் பைடனுக்கு இங்கு கடும் போட்டி நிலவுகிறது.
புளோரிடாவை பொருத்த
வரை அங்கு டொனால்ட் டிரம்பு முன்னிலை
வகிக்கிறார். கியூபா-அமெரிக்கர்கள் வாழும் மியாமி டேட் பகுதி வாக்காளர்களின் ஆதரவு
அவருக்கு இருப்பதாக அறிய முடிகிறது.
டெக்சாஸிலும் டொனால்ட் டிரம்புக்கு சாதகமாக வெற்றி வாய்ப்பு நிலவுகிறது. 38 தேர்தல் சபை வாக்குகளை கொண்ட டெக்சாஸ்
மாகாணம், கடந்த 10 தேர்தல்களில் குடியரசு கட்சிக்கு சாதகமான முடிவையே அளித்து வருகிறது.
இந்த தேர்தலில் அதிபர் பதவியை தக்க வைக்க தேவைப்படும் மேஜிக் எண் 270 வேண்டுமெனில், டொனால்ட் டிரம்புக்கு ஓஹையோ, வடக்கு கரோலைனா ஆகிய
மாணாங்களின் வாக்குகளும் சாதகமாக இருக்க வேண்டும். ஆனால், பாதிக்கும் அதிகமான வாக்காளர்கள் இந்த தேர்தலில்
பைடனுக்கு ஆதரவாக இருப்பதாகவே செய்திகள் வருகின்றன.
இதுவரை
இருக்கும் நிலவரப்படி ப்ளோரிடா, ஒஹையோ, டெக்சாஸ் மற்றும் ஐயோவாவில் டிரம்ப் முன்னிலை
வகிக்க, அரிசோனா, பெனிசில்வேனியா, நார்த் கேரோலினா மற்றும் ஜோர்ஜாவில் கடுமையான போட்டி
நிலவுகறது