வேட்பாளர்களுக்கும் அவர்களது ஆதரவாளர்களுக்கும் இந்த வாக்குப்பதிவு நாளானது ஒரு காத்திருப்பு நாள் போலதான் அமையும்.
என்ன செய்து கொண்டிருப்பார் டிரம்ப்?
அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் நேர்காணல் கொடுத்துக் கொண்டிருப்பார். அல்லது தொலைக்காட்சியில் வாக்குப்பதிவு குறித்த நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டிருப்பார்.
கடந்த மூன்று தினங்களாக 14 தேர்தல் பேரணிகளில் கலந்து கொண்ட டிரம்புக்கு இது ஓய்வளிக்கும் ஒரு தினமாக இருந்தாலும், செவ்வாய் இரவு மீண்டும் நிகழ்ச்சிகள் தொடங்கும்.
வெள்ளை மாளிகையில் அவர் தேர்தல் நிகழ்ச்சியை நடத்துவார்.
அங்கே டிரம்ப், துணை அதிபர் மைக் பென்ஸ், அவரின் குடும்பத்தார் மற்றும் பிரசாரக் குழுவினர் இருப்பர்.
என்ன செய்து கொண்டிருப்பார் ஜோ பைடன்?
ஜோ பைடன் பெரும்பாலான தேர்தல் நாளில் ஒரு முக்கிய தொங்கு மாகாணமான பென்னில்சில்வேனியாவில் வாக்குகளைச் சேகரித்து கொண்டிருப்பார். மேலும் தனது சொந்த ஊரான பிலடெல்ஃபியாவின் ஸ்க்ராண்டனில் வாக்காளர்களை திரட்டும் பணியில் ஈடுபட்டு கொண்டிருப்பார்.
அதன்பிறகு தற்போது அவர் வசிக்கும் டெலவேர் மாகாணத்திற்கு வந்து தேர்தல் முடிவிற்காக காத்திருப்பார்.
செவ்வாயன்று, பைடன் டெலவேரில் உரையாற்றுவார்.
அவருடன் மனைவி ஜில் பைடன், துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் மற்றும் அவரின் கணவர் உடனிருப்பர்.
வாக்குகள் சமநிலை எவ்வாறு செல்கிறதோ அதை பொறுத்துதான் பைடனின் பேச்சு அமையும்.