You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டெல்லி அருகே நிலநடுக்கம்: நள்ளிரவில் லேசாக நடுங்கிய தலைநகரம்
டெல்லியில் நேற்று வியாழக்கிழமை (டிசம்பர் 17) நள்ளிரவில் லேசான நில நடுக்கம் உணரப்பட்டது.
இரவு 11.46 மணி அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ஹரியாணா மாநிலம் ரேவாரியில் மையம் கொண்டிருந்தது. இந்த 4.2 அளவில் இருந்ததாகவும், 25 கி.மீ. ஆழத்தில் இது ஏற்பட்டதாகவும் தேசிய நிலநடுக்கவியல் மையம் தனது வலைத்தளத்தில் தெரிவிக்கிறது.
இந்த ரேவாரி டெல்லியை அடுத்துள்ள குருகாவ்ன் என்ற இடத்தில் இருந்து சுமார் 56 கி.மீ. தொலைவில் உள்ளது.
இதனால், டெல்லி தலைநகர மண்டலத்தின் பல பகுதிகளில் இந்த நிலநடுக்கம் லேசாக பல நொடிகளுக்கு உணரப்பட்டது.
சேதாரம் ஏதும் ஏற்பட்டதாக உடனடியாகத் தகவல் ஏதும் இல்லை.
மணிப்பூர் மாநிலம் சுவார்சந்த்பூர் என்ற இடத்தில் நேற்றிரவு (டிசம்பர் 17) 10.03 மணிக்கு 3.2 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், ராஜஸ்தான் மாநிலம் சிகாரில் நேற்று காலை 11.26 மணியளவில் 3 அளவில் ஒரு மெல்லிய நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், ஆப்கானிஸ்தான் இந்துகுஷ் மலைப் பகுதியில் நேற்று அதிகாலை 2.32 மணியளவில் 4.2 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் இந்திய நிலநடுக்கவியல் மையம் தெரிவிக்கிறது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்