ரக்மாபாய் ரெளட்: 100 ஆண்டுகளுக்கு முன்பே கட்டாயத் திருமணத்தை எதிர்த்த பெண் போராளி
(இந்தியாவின் வரலாற்று பக்கங்களில் இடம்பெறாவிட்டாலும், நவீன கால இந்திய பெண்களின் வாழ்க்கைமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு வித்திட்ட பத்து இந்திய பெண்களின் பிரமிக்கத்தக்க கதைகளை பிபிசி உங்களிடம் கொண்டு வருகிறது. அதன் நான்காவது அத்தியாயம் இது.)
இந்தியாவின் ஆரம்பகால பெண்ணியவாதியாக இருந்த ரக்மாபாய் ரெளட், தன்னுடைய 22வது வயதில் தனக்கு விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடியவர்.
அந்த காலக்கட்டத்தில், தாங்கள் திருமணம் செய்துகொண்ட பெண்களைக் கைவிடுதல் அல்லது விவாகரத்து கோருதல் என்பது ஆண்களுக்கு வழக்கமான ஒன்றாக இருந்தது.
ஆனால் கணவரிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என்று கேட்ட முதலாவது பெண்மணியாக ரக்மாபாய்தான் இருந்திருப்பார்.
இந்த செய்தியின் கட்டுரை வடிவம்: கட்டாயத் திருமண உறவுக்குப் பதில் சிறை செல்லத் தயாரான ரக்மாபாய் ரெளட்
இந்தியாவில் 'மண ஒப்புதல் சட்டம் 1891' நிறைவேற்றப்பட்டதற்கு ரக்மாபாய் வழக்கு முக்கிய காரணமாக இருந்தது.
வரலாற்றில் பெண்கள் தொடரின் பிற காணொளிகள்
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: