ருகியா சகாவத் ஹுசைன் குறித்து உங்களுக்கு தெரியுமா?

காணொளிக் குறிப்பு, ருகியா சகாவத் ஹுசைன் குறித்து உங்களுக்கு தெரியுமா?
பிரசுரிக்கப்பட்டது

இந்தியாவின் வரலாற்று பக்கங்களில் இடம்பெறாவிட்டாலும், நவீன கால இந்திய பெண்களின் வாழ்க்கைமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு வித்திட்ட பத்து இந்திய பெண்களின் பிரம்மிக்கத்தக்க கதைகளை பிபிசி உங்களிடம் கொண்டு வருகிறது.

அதன் இரண்டாவது அத்தியாயம் இது.

பழமையின் வேர்கள் ஆழ வேறூன்றி இருந்த 1900களில் பெரும் புரட்சியையே நிகழ்த்திகாட்டி இருக்கிறார் ருகியா சகாவத் ஹூசைன்.

ருகியா சகாவத் ஹுசைன், பெண்ணிய சிந்தனையாளர், கதாசிரியர், நாவலாசிரியர், கவிஞர், வங்காளத்தில் முஸ்லிம் சிறுமிகளின் கல்விக்காக ஒரு இயக்கத்தை நடத்தியவர், முஸ்லிம் பெண்களுக்கான ஒரு அமைப்பை உருவாக்கியவர்.

இந்த செய்தியின் கட்டுரை வடிவம்:

முஸ்லிம் சிறுமிகளுக்காக ஒரு பள்ளியை அவர் நிறுவினார். அந்தபள்ளி நூற்றுக்கணக்கான சிறுமிகளின் வாழ்க்கையை மாற்றியது. இருப்பினும், முஸ்லிம் பெண்களை பற்றிமட்டுமே அவர் சிந்திக்கவில்லை, ஒட்டுமொத்த மகளிர் சமுதாயத்தின் மரியாதை மற்றும் உரிமைகளுக்காக அவர் பணியாற்றி வந்தார்.

எழுத்து: நசிருதின்

வரைபடம்: கோபால் ஷுன்ய

கலை: நிகிதா தேஷ்பாண்டே

படத்தொகுப்பு: தேவாஷிஷ் குமார் / சிவகுமார்

இந்தக் காணொளியை பிபிசி தமிழின் ஃபேஸ்புக் மற்றும் யூ டியூப் பக்கங்களிலும் காணலாம்.

இந்த தொடரின் பிற காணொளிகள்:

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: