Covaxin: இந்தியாவில் எப்போது தடுப்பூசி கிடைக்கும்? - பாரத் பயோடெக் தலைமை செயல் அதிகாரி நேர்காணல்

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்

கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்தை உள்நாட்டிலேயே உருவாக்கும் பணியில் ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பாரத் பயோடெக் என்னும் நிறுவனத்துடன் சேர்ந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகமும் ஈடுபட்டுள்ளது

தற்போது உருவாக்கப்பட்டுள்ள தடுப்பு மருந்தை மருத்துவ சோதனைக்கு உட்படுத்தி அதில் வெற்றிகண்டால் அதை இந்திய சுதந்திர தினமான வரும் ஆகஸ்டு 15ஆம் தேதியன்று பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் கூறுகிறது.

இந்த நிலையில், பாரத் பயோடெக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான சுசித்ரா எல்லாவிடம் பிபிசி செய்தியாளர் தீப்தி பேசினார்.

"மனிதர்களைக் கொண்டு மேற்கொள்ளப்படும் மருத்துவ பரிசோதனையின் முதல் கட்டத்தில் சுமார் ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்படுவார்கள். இதில் அனைத்து சர்வதேச வழிகாட்டுதலும் பின்பற்றப்படும். மேலும், தன்னார்வலர்களின் தேர்வு உன்னிப்பாகக் கண்காணிக்கப்படும். முதல் கட்டமாக கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் பாதிக்கப்படாதவர்களைக் கொண்டு பரிசோதனை மேற்கொள்ளப்படும். இதன் முடிவுகள் குறித்து தெரியவர குறைந்தது 30 நாட்கள் ஆகும்" என்று அவர் கூறினார்.

அவரது விரிவான நேர்காணல்:

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: