You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உலக பெருங்கடல் தினம்: அதிசயமூட்டும் ஆழ்கடல் காட்சிகள் - ஐ.நா புகைப்படப்போட்டியில் வென்ற பெருங்கடல் புகைப்படங்கள்
ஆண்டுதோறும் உலக பெருங்கடல் தினத்தை முன்னிட்டு ஐ.நா.,வால் நடத்தப்படும் புகைப்படப் போட்டியானது இந்த ஆண்டும் நடத்தப்பட்டது.
உலக பெருங்கடல்கள் தினத்தை முன்னிட்டு 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் நடத்தப்பட்ட இந்தப் புகைப்படப் போட்டியில், உலகெங்கும் இருந்து புகைப்படக் கலைஞர்கள் கலந்துகொண்டனர்.
கடலின் அழகை, எழிலை, உண்மையை, வாழ்க்கையை விளக்கும் விதமான படங்களை எடுக்கப் பணிக்கும் விதமாக தலைப்பும் தரப்பட்டிருந்தது. இந்த தலைப்பைக் கருவாகக் கொண்டு காட்சிகளை கேமரா வழி சிறைபிடித்து ஒளி ஓவியமாக உருவாக்கித் தந்துள்ளனர் புகைப்படக்கலைஞர்கள்.
ஆழ்கடல் காட்சிகள், கடல்பரப்புக்கு மேல், கடலோர சமூகங்கள், இயற்கை தீர்வுகள், கடல் உயிரிகள், புத்துருவாக்கம் ஆகிய பிரிவுகளின் (தலைப்புகளின்) கீழ் புகைப்படங்கள் அனுப்பப்பட்டிருந்தன.
இவற்றிலிருந்து தேர்வான படங்களில் குறிப்பிட்ட சில படங்களை இந்தப் பக்கத்தில் காணலாம். வெற்றி பெற்ற அனைத்துப் படங்களையும் காண விரும்பினால் இந்த இணைப்பில் பார்க்கலாம்.
இதுபோல மற்ற பிரிவுகளில் இறுதிக்கட்ட பரிசீலனைக்கு தகுதியான படங்கள், மற்ற பிரிவுகளில் வென்ற படங்கள் ஆகியவற்றை பார்க்க இந்த இணைப்பைச் சொடுக்கவும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்