ஜஸ்டின் ட்ரூடோ: “கனடா பிரதமர் சட்டத்தை மீறினார்” - விசாரணை அமைப்பு குற்றச்சாட்டு

"கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சட்டத்தை மீறினார்" - விசாரணை அமைப்பு குற்றச்சாட்டு

பட மூலாதாரம், Getty Images

பிரசுரிக்கப்பட்டது

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒரு ஊழல் வழக்கு விசாரணையில் கனடா சட்டத்தை மீறி உள்ளார் என்று நெறிமுறைகள் கண்காணிப்பு அமைப்பு ஒன்று கண்டுபிடித்துள்ளது.

எஸ்.என்.சி லவாலின் விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஒருவர் மீது செல்வாக்கு செலுத்த ஜஸ்டின் முயன்றதாக அந்த அமைப்பின் ஆணையர் கூறி உள்ளார். ஆணையரின் அறிக்கையை தாம் ஏற்றுக் கொள்வதாகவும், ஆனால் அதே சமயம் அவரது அறிக்கையின் இறுதி முடிவில் சில கருத்து வேறுபாடுகள் இருப்பதாகவும் ஜஸ்டின் தெரிவித்துள்ளார். கனடா நாட்டில் அக்டோபரில் நடக்க இருக்கும் பொதுத் தேர்தலில் இந்த விசாரணை முடிவானது ஒரு பிரச்சனையாக ஜஸ்டினுக்கு உருவெடுக்கலாம்.

அது என்ன எஸ்.என்.சி லவாலின் விவகாரம்?

எஸ்.என்.சி லவாலின் என்பது கனடா நாட்டைச் சேர்ந்த உலகின் மிகப்பெரிய கட்டுமான நிறுவனம். இந்த நிறுவனத்தில் 9,000க்கும் அதிகமான கனடா மக்கள் பணிபுரிகிறார்கள். லிபியாவில் கடாஃபி ஆட்சி காலத்தில் ஒரு கட்டுமான ஒப்பந்தத்தைப் பெற இந்த நிறுவனம் லிபிய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தது என்பதுதான் குற்றச்சாட்டு. இந்த விவகாரமானது விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்துக்கு சாதகமாக ஜஸ்டின் செயல்படுகிறார் என்று குற்றம்சாட்டப்படுகிரது.

Presentational grey line

"காஷ்மீரில் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் அம்மக்களுக்கு நல்ல பலன்களை அளிக்கும் என நம்புகிறேன்"

ராம்நாத்

பட மூலாதாரம், TWITTER / PRESIDENT OF INDIA

இந்தியாவின் 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், இங்கு மட்டுமல்லாது வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

அக்டோபர் 2ஆம் தேதி மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் கொண்டாடப்படும் என்பதை சுட்டிக்காட்டிய ராம்நாத் கோவிந்த், மகாத்மா காந்தி வாழ்ந்த இந்தியாவை விட தற்போது நாம் வாழும் இந்தியாவுக்கும் மிகுந்த வேறுபாடு இருந்தும் காந்தி அப்போது கூறியது சமகால இந்தியாவுக்கும் பொருந்தும் என்றார்.

Presentational grey line

"பயங்கரவாதிகள், தீவிரவாதிகளின் தாய்வீடாக காஷ்மீர் இருக்கிறது"

"பயங்கரவாதிகள், தீவிரவாதிகளின் தாய்வீடாக காஷ்மீர் இருக்கிறது"

பட மூலாதாரம், Getty Images

காஷ்மீர் பயங்கரவாதிகள், தீவிரவாதிகளின் தாய்வீடாக இருப்பதாகவும் அவர்கள் இந்தியாவில் ஊடுருவ நுழைவாயில்போல இருப்பதாகவும் நடிகர் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். அரசியல்வாதிகள் இதனை அரசியலாக்கக்கூடாது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

சென்னை போயஸ் கார்டனில் அவரது வீட்டிற்கு வெளியில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், தமிழ் திரைப்படங்களுக்கு விருதுகள் கிடைக்காதது ஏமாற்றமளிப்பதாகக் கூறினார்.

Presentational grey line

"இந்தியா தீவிரவாத சித்தாந்தத்துடன் பேரழிவை நோக்கி செல்கிறது"

"இந்தியா தீவிரவாத சித்தாந்தத்துடன் பேரழிவை நோக்கி செல்கிறது" - இம்ரான் கான்

பட மூலாதாரம், AAMIR QURESHI

இந்தியா தீவிரவாத சித்தாந்தத்துடன் பேரழிவை நோக்கி செல்கிறது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குற்றம் சாட்டியுள்ளார். பாகிஸ்தான் நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரில் உள்ள நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் இம்ரான் கான், காஷ்மீர் விவகாரத்தில் நரேந்திர மோதி பெரிய தவறை செய்து கொண்டிருக்கிறார் என்றும், மோதி தனது இறுதி ஆட்டத்தை ஆடிக் கொண்டிருக்கிறார் என்றும் சாடினார்.

Presentational grey line

பெஹ்லு கான் கும்பல் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆறு பேரும் விடுதலை

பெஹ்லு கான் கும்பல் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆறு பேரும் விடுதலை

பட மூலாதாரம், VIDEO GRAB

2017ம் ஆண்டு நிகழ்ந்த பெஹ்லு கான் கும்பல் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆறு பேரையும் ராஜஸ்தான் கீழ் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. விப்பின் யாதவ், ரவீந்திர குமார், காலு ராம், தயானந்த், யோகேஷ் குமார், பீம்ராட்டி ஆகியோருக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றங்களுக்கு போதிய ஆதாரங்கள் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Presentational grey line

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: