You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜப்பான் அனிமேஷன் ஸ்டூடியோவில் தீ வைப்பு : 33 பேர் பலி
ஜப்பான் நாட்டில் கியோடோ மாகாணத்தில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் ஒருவர் தீ வைத்த சம்பவத்தில் ஏறக்குறைய 33 பேர் பலியாகியுள்ளனர் என அந்நாட்டின் அவசரப்பிரிவு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
உள்ளூர் பத்திரிக்கை ஒன்றின்போது கூற்றுப்படி கியோடோ அனிமேஷன் ஸ்டூடியோவிற்குள் நுழைந்த, ஒருவர் அடையாளம் தெரியாத திரவத்தை வீசி நெருப்பை உண்டாக்கினார்.
மேலும், இந்த சம்பவத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.
அடையாளம் தெரியாத சந்தேகத்திற்குள்ளானவர் கைது செய்யப்பட்டு காயத்துடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
"திரவம் மூலமாக ஒருவர் தீ மூட்டினார்" என கியோடோவின் செய்தி தொடர்பாளர் ஒருவர் ஏஎஃப்பியிடம் கூறியுள்ளார். அவரை பற்றி வேறு எந்த தகவலும் கிடைக்கவில்லை.
காலை சுமார் 10.30 அளவில் நெருப்பு இந்த ஸ்டூடியோவின் 3 மாடிகளிலும் பரவியது.
பிற செய்திகள்:
- மருத்துவ படிப்புக்கான அரசு ஒதுக்கீடு: அரசு பள்ளி மாணவி ஒருவருக்கு மட்டுமே இடம்
- தேசிய கல்விக் கொள்கை வரைவு 2019: தமிழகத்தில் கடும் எதிர்ப்பு ஏன்?
- ‘’மனிதகுலத்தின் மிகப்பெரிய பாய்ச்சல்’’ - அப்போலோ 11-வால் நமக்கு கிடைத்த நன்மைகள் என்ன?
- அமெரிக்க போலீஸுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த கடத்தல் மன்னனுக்கு ஆயுள் சிறை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்