சென்னையில் பிரபல இசைக் கலைஞர் எட் ஷீரனின் நிகழ்ச்சி- இவரின் பின்னணி என்ன?

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்

ஒரு சர்வதேச இசை பிரபலத்தின் இசை நிகழ்ச்சிக்கு (Concert) சென்னை தயாராகியுள்ளது. அது எட் ஷீரன்.

4 கிராமி விருதுகள், 8 முறை பில்போர்ட் அவார்ட்ஸ், யூட்யூபில் ஆயிரம் மில்லியன் பார்வைகளை கடந்த 4 பாடல்கள்- இதற்கெல்லாம் சொந்தக்காரர் 33 வயது எட் ஷீரன்.

இங்கிலாந்தைச் சேர்ந்த இவர், சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்ட 'Shape Of You' பாடல் யூட்யூபில் ஒரு பூகம்பத்தையே ஏற்படுத்தியது. இன்றளவும் உலகிலேயே அதிகம் பார்க்கப்பட்ட 10 யூட்யூப் வீடியோக்களில் இதுவும் ஒன்று.

இந்த பெருமைக்கெல்லாம் சொந்தக்காரரான எட் ஷீரனுக்கு சிறுவயதில் பேசுவதில் சிக்கல் இருந்ததாம். சிறு வயதில் பல ஸ்பீச் தெரபிகள் எடுத்தும் பலன் கிடைக்கவில்லையாம். ஆனால் அவருடைய அப்பா அவருக்கு எமினெம் ஆல்பம் போட்டு காட்ட, இயல்பாக இசை மீது ஆர்வம் இருந்ததால் அதோட ராப் வரிகளை பேசப் பேச அவருக்கு பேச்சு சரியானது.

பின்நாள்களில் எமினெம் உடன் ஒரே மேடையில் பாடவும் செய்தார் எட் ஷீரன்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)