You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
BBC தமிழ் இணையதளத்தில் கடந்த சில நாட்களில் வெளியான, நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய செய்திகள்
BBC தமிழ் இணையதளத்தில் கடந்த சில நாட்களில் வெளியான, நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய செய்திகள்.
வணக்கம் நேயர்களே! இந்த வாரம் உங்களுக்கு அருமையானதாக அமைந்திருக்கும் என்று நம்புகிறோம். இந்த வாரம் உலகமெங்கும் பல்வேறு விடயங்கள் நடந்தன, அவற்றை நாங்கள் தனித்தனி செய்திகளாக வெளியிட்டிருந்தோம்.
எனினும், நீங்கள் அவற்றில் சில முக்கியமான செய்திகளை தவற விட்டிருக்கலாம்.கவலை வேண்டாம். உங்களுக்காகவே இந்த வாரத்தில் வெளியான ஐந்து சிறப்பு கட்டுரைகளின் துணுக்குகளை இங்கே ஒரே இடத்தில் தொகுத்தளிக்கிறோம்.
நீங்கள் விரும்பும் கட்டுரையை அதற்கு கீழே உள்ள இணைப்பில் கிளிக் செய்து முழுவதும் படிக்க முடியும். பிபிசி தமிழில் நாங்கள் எப்போதுமே செய்திகளை மாறுபட்ட கோணத்தில் அளிப்பதுடன், ட்ரெண்டில் உள்ள செய்திகளை கலவையாக அளித்து வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
அந்த வகையில் இந்த வாரம், சித்தராமையா: முதலமைச்சர் இலக்கை மீண்டும் அடைந்த கர்நாடக அரசியலின் ‘மாஸ்டர்’, கள்ளச்சாராயம் Vs விஷ சாராயம்: மரக்காணத்தில் மனித உயிர்களை மெத்தனால் காவு வாங்கியது எப்படி?, "ரோஹிஞ்சா குடும்பத்தின் செத்துப் பிழைக்கும் வாழ்க்கை" - வங்கதேச எல்லை முகாமின் கள நிலவரம், நாம் ஏன் மூக்கில் விரல் விட்டு நோண்டுகிறோம்? - ஆய்வு செய்து 'ஐஜி நோபல்' பரிசு பெற்ற இந்தியர்கள், ஐபிஎல்: கோடிகளை கொட்டிக் கொடுத்தும் ஏமாற்றம் தரும் நட்சத்திர வீரர்கள் - ஓர் அலசல் என்பன உள்ளிட்ட ஐந்து கட்டுரைகளை இங்கே தொகுத்தளித்துள்ளோம்.
சித்தராமையா: முதலமைச்சர் இலக்கை மீண்டும் அடைந்த கர்நாடக அரசியலின் ‘மாஸ்டர்’
கிராமப்புற கர்நாடகத்தில் வலுவான பிடிப்புள்ள முன்னாள் முதல்வராக இருந்த சித்தராமையா முதல்வர் பதவிக்கு வருவது அவரது சாதனைகளின் வரிசையில் இன்னொரு சாதனை. முழுமையாக அறிய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
கள்ளச்சாராயம் Vs விஷ சாராயம்: மரக்காணத்தில் மனித உயிர்களை மெத்தனால் காவு வாங்கியது எப்படி?
மரக்காணம் கள்ளச்சாராய உயிரிழப்புகள் அடுத்தடுத்து பல கேள்விகளுக்கு வித்திட்டுள்ளன. மெத்தனால் கலந்த சாராயம் எந்த அளவுக்கு அபாயகரமானது? மனித உடலுக்குள் மெத்தனால் கலந்ததும் என்ன நடக்கிறது? உயிர் போகும் அளவுக்கு அதில் அப்படி என்ன ஆபத்து? உயிருக்கு ஆபத்தான, தொழிற்சாலைகளில் மட்டுமே பயன்படுத்தக் கூடிய மெத்தனால் கள்ளச்சாராய வியாபாரிகளின் கைகளில் எப்படி சேர்கிறது?
முழுமையாக அறிய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
"ரோஹிஞ்சா குடும்பத்தின் செத்துப் பிழைக்கும் வாழ்க்கை" - வங்கதேச எல்லை முகாமின் கள நிலவரம்
2017ஆம் ஆண்டு செப்டம்பரில் வங்கதேச எல்லையில் உள்ள அகதிகள் முகாமில் பிபிசி குழு முதன்முதலில் குழந்தை அன்வர் சாதிக்கை சந்தித்தபோது, பிறந்து சில மணி நேரமே ஆகியிருந்தான். அந்த பிஞ்சுக்குழந்தை இப்போது வளர்ந்து ஐந்து வயதை கடந்துள்ளான்.
முழுமையாக அறிய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
நாம் ஏன் மூக்கில் விரல் விட்டு நோண்டுகிறோம்? - ஆய்வு செய்து 'ஐஜி நோபல்' பரிசு பெற்ற இந்தியர்கள்
மூக்கின் உள்ளே விரல் விட்டு நோண்டும் பழக்கம் நம்மில் பலருக்குமே உண்டு. இந்தப் பழக்கத்தால் சில நேரங்களில் சங்கடங்களை எதிர்கொண்டிருப்போம். சில நேரங்களில் பிறர் இப்படிச் செய்வதைப் பார்த்து முகம் சுழித்தும் இருப்போம். முழுமையாக அறிய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
ஐபிஎல்: கோடிகளை கொட்டிக் கொடுத்தும் ஏமாற்றம் தரும் நட்சத்திர வீரர்கள் - ஓர் அலசல்
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைத்து வரும் ஐ.பி.எல். தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. முதல் அணியாக நடப்புச் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்துள்ளது. டெல்லி கேபிட்டல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய இரு அணிகளும் வெளியேறிவிட்டன. பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் உள்ளிட்ட 7 அணிகள் முட்டி மோதுகின்றன.
முழுமையாக அறிய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்