You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
BBC தமிழ் இணையதளத்தில் கடந்த சில நாட்களில் வெளியான, நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய செய்திகள்
BBC தமிழ் இணையதளத்தில் கடந்த சில நாட்களில் வெளியான, நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய செய்திகள்.
வணக்கம் நேயர்களே! இந்த வாரம் உங்களுக்கு அருமையானதாக அமைந்திருக்கும் என்று நம்புகிறோம். இந்த வாரம் உலகமெங்கும் பல்வேறு விடயங்கள் நடந்தன, அவற்றை நாங்கள் தனித்தனி செய்திகளாக வெளியிட்டிருந்தோம்.
எனினும், நீங்கள் அவற்றில் சில முக்கியமான செய்திகளை தவற விட்டிருக்கலாம்.கவலை வேண்டாம். உங்களுக்காகவே இந்த வாரத்தில் வெளியான ஐந்து சிறப்பு கட்டுரைகளின் துணுக்குகளை இங்கே ஒரே இடத்தில் தொகுத்தளிக்கிறோம்.
நீங்கள் விரும்பும் கட்டுரையை அதற்கு கீழே உள்ள இணைப்பில் கிளிக் செய்து முழுவதும் படிக்க முடியும். பிபிசி தமிழில் நாங்கள் எப்போதுமே செய்திகளை மாறுபட்ட கோணத்தில் அளிப்பதுடன், ட்ரெண்டில் உள்ள செய்திகளை கலவையாக அளித்து வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
அந்த வகையில் இந்த வாரம், டைட்டானிக் கப்பலை தேடிச் செல்லும் நீர்மூழ்கிப் பயணம் எப்படியிருக்கும்?- அனுபவம் பகிரும் யூடியூபர், நரேந்திர மோதியின் அமெரிக்கப் பயணத்தால் இந்தியாவுக்கு என்ன பயன்?, இலங்கை: தாய்மொழியை மறந்து தமிழ், சிங்களம் பேசும் போர்த்துகீசிய வம்சாவளிகள், பகலில் சிறிது நேரம் தூங்குவது மூளைக்கு நல்லது - புதிய ஆய்வில் தகவல், தேவர் மகன் திரைப்படத்தை தவறாகப் புரிந்து கொண்டு விமர்சித்தாரா மாரி செல்வராஜ்? ஆகிய ஐந்து கட்டுரைகளை இங்கே தொகுத்தளித்துள்ளோம்.
டைட்டானிக் கப்பலை தேடிச் செல்லும் நீர்மூழ்கிப் பயணம் எப்படியிருக்கும்?- அனுபவம் பகிரும் யூடியூபர்
”உலகளவில் மிகவும் பிரபலமான அந்த டைட்டானிக் கப்பலை, இதற்கு முன்னால் ஆவணப்படங்களிலும், தொலைக்காட்சிகளிலும் நாம் பார்த்திருப்போம். இந்த பூமியில் அத்தனை சிறப்பு வாய்ந்த ஒன்றை, நீங்கள் உங்கள் கண்களால் அருகில் சென்று பார்ப்பது என்பது நிச்சயம் தனித்துவமான அனுபவம்தான்”என்கிறார் ஆலன் எஸ்ட்ராடா. முழுமையாக அறிய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
நரேந்திர மோதியின் அமெரிக்கப் பயணத்தால் இந்தியாவுக்கு என்ன பயன்?
அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணமாகச் செல்வது எந்த ஒரு நாட்டின் தலைவருக்கும் கௌரவம்தான். ஆனால் மோதியின் இப்பயணத்தின் மூலம் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் என்ன பலன்கள் கிடைக்கும்? முழுமையாக அறிய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
இலங்கை: தாய்மொழியை மறந்து தமிழ், சிங்களம் பேசும் போர்த்துகீசிய வம்சாவளிகள்
இலங்கையை 150 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்தவர்கள் போர்த்துகீசியவர்கள். இவர்களது பரம்பரையினரான மட்டக்களப்பு 'பரங்கியர்'கள் (Burgher), தமது சொந்த மொழியான போர்த்துகீசிய மொழியை இழந்து வருகின்றனர். முழுமையாக அறிய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
பகலில் சிறிது நேரம் தூங்குவது மூளைக்கு நல்லது - புதிய ஆய்வில் தகவல்
லண்டனில் உள்ள பல்கலைக்கழக கல்லூரியில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் வழக்கமாக அவ்வப்போது சிறிது நேரம் தூங்குவது மூளைக்கு மிகவும் நல்லது என்றும், அதனால் மூளை சுருங்குவதை நீண்ட காலத்துக்கு தடுக்க முடியும் என்றும் தெரியவந்துள்ளது. முழுமையாக அறிய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
தேவர் மகன் திரைப்படத்தை தவறாகப் புரிந்து கொண்டு விமர்சித்தாரா மாரி செல்வராஜ்?
‘மாமன்னன்’ இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசனின் ‘தேவர் மகன்’ படம் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் பேசிய கருத்துகள் விவாதத்தை கிளப்பியுள்ளன. தேவர் மகனின் இசக்கிதான் தனது மாமன்னன் என்கிறார் மாரி செல்வராஜ். முழுமையாக அறிய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்