நிலக்கடலையை அடித்துச் சென்ற மழை - தடுக்க போராடிய விவசாயி (காணொளி)

நிலக்கடலையை அடித்துச் சென்ற மழை - தடுக்க போராடிய விவசாயி (காணொளி)
பிரசுரிக்கப்பட்டது

முன்னறிவிப்பு இல்லாமல் வருகின்ற பெருமழை தெருவோரம் கடைகள் வைத்திருக்கும் பல சிறு வியாபாரிகளைக் கடுமையாக பாதிக்கும். அவ்வாறு மகாராஷ்டிராவில் சமீபத்தில் பெய்த மழையொன்று அங்குள்ள விவசாயி ஒருவரின் விளைபொருட்களை அடித்துச் சென்றது. அதை தடுக்க அவர் முயற்சித்தும் எதுவும் செய்ய முடியாததால் மிகவும் வருத்தமடைந்தார். இந்த நிகழ்வின் காணொளி வெளியாகியுள்ளது.

திடீரென பெய்த மழையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த நிலக்கடலை அடித்துச் செல்லப்பட்டதால் அதைத் தடுக்க ஒரு விவசாயி போராடிய காட்சிதான் இது. கடந்த 15ஆம் தேதி இந்த சம்பவம் மகாராஷ்டிராவின் வாசிம் மாவட்டத்தில் உள்ள ஒரு விவசாய சந்தையில் நடந்திருக்கிறது. விவசாயி தரையில் அமர்ந்து நிலக்கடலையை தடுக்க போராடினார். எனினும், பெரும்பாலான நிலக்கடலைகள் அடித்துச் செல்லப்பட்டன.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு