You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பேக்கரிக்குள் புகுந்து கேக்குகளை திருடிய கரடி
பேக்கரிக்குள் புகுந்து கேக்குகளை திருடிய கரடி
பிரசுரிக்கப்பட்டது
அமெரிக்காவில் கரடி ஒன்று பேக்கரிக்குள் புகுந்து கேக்குகளை எடுத்துக்கொண்டு சாலைக்கு வந்து தின்ற விநோத சம்பவம் நடந்துள்ளது.
அமெரிக்காவின் கனெடிகட் பகுதியில் இயங்கிவரும் பேக்கரி ஒன்றுக்கு அழையா வாடிக்கையாளராக கரடியொன்று வந்துள்ளது. அங்கு, கேக்குகள் வேனில் ஏற்றப்படுவதை பார்த்த கரடி தனக்கு தேவையான கேக்குகளையும் எடுத்துள்ளது.
அவ்வழியாக வந்த ஊழியர்கள் கரடியைப் பார்த்து அச்சத்தில் ஓட்டம் பிடித்தனர். தனது காரியத்தில் கண்ணாக இருந்த கரடி, மொத்தம் 60 கேக்குகளை தின்று தீர்த்தது. பின்னர், ஒருவழியாக காரில் வந்து கரடியை ஊழியர்கள் விரட்டியடித்தனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்