You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: தமிழ்நாட்டை சேர்ந்தவர் ஓமனில் கப்பலில் உயிரிழப்பு
காணொளி: தமிழ்நாட்டை சேர்ந்தவர் ஓமனில் கப்பலில் உயிரிழப்பு
பிரசுரிக்கப்பட்டது
ஓமன் கடற்கரைக்கு அப்பால் MT Celestial என்ற கப்பலின் இரண்டாம் நிலை அதிகாரியான நிஷாந்த் உயிர்த்தநாதன் உரிய நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காமல் கடந்த 11ஆம் தேதி மாலை உயிரிழந்ததாக கடல்சார் பணியாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பான Forward Seamen's Union of India தெரிவித்துள்ளது. பலமுறை அவசர அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும், பிராந்திய பதட்டங்களுக்கு மத்தியில் உரிய நேரத்தில் மருத்துவ ரீதியான மீட்பு பணிகள் தாமதமானதாவும் அந்த அமைப்பு கூறி உள்ளது. இரான் போர் காரணமாக சமீப மாதங்களாக இந்த பிராந்தியத்தில் பதட்டமான சூழல் உள்ளது. 35 வயதான நிஷாந்த் உயிர்த்தநாதன் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்.