காணொளி: நள்ளிரவில் ஒருசிலருக்கு தூக்கம் கலைவது ஏன்? மருத்துவர் விளக்கம்

காணொளி: நள்ளிரவில் ஒருசிலருக்கு தூக்கம் கலைவது ஏன்? மருத்துவர் விளக்கம்
பிரசுரிக்கப்பட்டது

இரவில் வழக்கம் போல உறங்கிக் கொண்டிருக்கும் போது, திடீரென அதிகாலை 2 அல்லது 3 மணியளவில் விழிப்பு வந்த அனுபவம் உண்டா? அப்படி விழித்த பிறகு, நீண்ட நேரம் மீண்டும் தூங்க முடியாமல் தவிப்பது இன்னும் அதிகமாக எரிச்சலூட்டும் விஷயமாக இருக்கும்.

மன அழுத்தம் காரணமாகவே இப்படி நடப்பதாகப் பலர் கருதுகிறார்கள். சிலர் இது ஏதோ தீவிர உடல்நலப் பிரச்னையின் அறிகுறியாக இருக்குமே எனக் கவலைப்படுகிறார்கள். ஆனால், நள்ளிரவில் விழிப்பு ஏற்படுவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். இது எப்போதுமே தீவிர உடல்நலப் பாதிப்பின் அறிகுறியாகவே இருப்பதில்லை.

இதுகுறித்து மருத்துவர் கூறுவது என்ன? விரிவாக காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு