BBC தமிழ் இணையதளத்தில் கடந்த சில நாட்களில் வெளியான, நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய செய்திகள்

பிரசுரிக்கப்பட்டது

BBC தமிழ் இணையதளத்தில் கடந்த சில நாட்களில் வெளியான, நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய செய்திகள்.

வணக்கம் நேயர்களே! இந்த வாரம் உங்களுக்கு அருமையானதாக அமைந்திருக்கும் என்று நம்புகிறோம். இந்த வாரம் உலகமெங்கும் பல்வேறு விடயங்கள் நடந்தன, அவற்றை நாங்கள் தனித்தனி செய்திகளாக வெளியிட்டிருந்தோம்.

எனினும், நீங்கள் அவற்றில் சில முக்கியமான செய்திகளை தவற விட்டிருக்கலாம்.கவலை வேண்டாம். உங்களுக்காகவே இந்த வாரத்தில் வெளியான 5 சிறப்பு கட்டுரைகளின் துணுக்குகளை இங்கே ஒரே இடத்தில் தொகுத்தளிக்கிறோம்.

நீங்கள் விரும்பும் கட்டுரையை அதற்கு கீழே உள்ள இணைப்பில் கிளிக் செய்து முழுவதும் படிக்க முடியும். பிபிசி தமிழில் நாங்கள் எப்போதுமே செய்திகளை மாறுபட்ட கோணத்தில் அளிப்பதுடன், ட்ரெண்டில் உள்ள செய்திகளை கலவையாக அளித்து வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

அந்த வகையில் இந்த வாரம், ஆடியோ லீக் சர்ச்சை: அமைச்சர் பி.டி.ஆர் விவகாரத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? பா.ஜ.க எம்.பி மீது பாலியல் புகார்: மீண்டும் வீதிக்கு வந்த ஒலிம்பிக் நட்சத்திரங்கள், சிங்கப்பூரில் கஞ்சா வழக்கில் தூக்கிலிடப்பட்டார் தங்கராஜு சுப்பையா, ChatGPT: வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும் முறையில் செயற்கை நுண்ணறிவு பாதிப்பை ஏற்படுத்துமா?, தோனிக்காக ஆடும் ரஹானேவுக்கு இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் வாய்ப்பு கிடைத்தது எப்படி? ஆகிய ஐந்து கட்டுரைகளை இங்கே தொகுத்தளித்துள்ளோம்.

ஆடியோ லீக் சர்ச்சை: அமைச்சர் பி.டி.ஆர் விவகாரத்தில் என்ன நடக்கிறது?

தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியதாகக் கூறப்படும் குரல் பதிவுகள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், இந்த விவகாரம் தி.மு.கவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நிதியமைச்சர் மாற்றப்படுவாரா என்ற கேள்விகளையும் அவை எழுப்பியிருக்கிறது.

முழுமையாக அறிய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.

பா.ஜ.க எம்.பி மீது பாலியல் புகார்: மீண்டும் வீதிக்கு வந்த ஒலிம்பிக் நட்சத்திரங்கள் - பயிற்சியில் வீராங்கனைகளுக்கு என்ன நடக்கிறது?

2023, ஜனவரி 18ஆம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் மகளிர் மல்யுத்த சாம்பியன் வினேஷ் போகத் தர்ணாவில் அமர்ந்த போது விளையாட்டு உலகமே அதிர்ச்சிக்குள்ளானது. இந்த நிலையில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீண்டும் போராட்டக் களத்திற்கு வந்துள்ளனர். என்ன நடக்கிறது?

முழுமையாக அறிய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.

சிங்கப்பூர்: கஞ்சா வழக்கில் தூக்கிலிடப்பட்ட தங்கராஜு சுப்பையா - கடைசி நேரத்தில் என்ன நடந்தது?

சிங்கப்பூரில் கஞ்சா கடத்தியதாக தமிழர் ஒருவருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. மரண தண்டனை வேண்டாம் என்று ஐ.நா. உள்பட உலகம் முழுவதும் இருந்து வந்த வேண்டுகோள்களை சிங்கப்பூர் அரசு புறந்தள்ளிவிட்டது.

முழுமையாக அறிய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.

ChatGPT: வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும் முறையில் செயற்கை நுண்ணறிவு பாதிப்பை ஏற்படுத்துமா ?

தற்போது பலரும் சாட் ஜிபிடி போன்ற மென்பொருட்களை பயன்படுத்தி தங்களது பயோடேட்டாவுக்கான கவர் லெட்டர்களை எழுதத் தொடங்கி விட்டனர். பணிக்கு ஒருவரை தேர்ந்தெடுக்கும் முறையில் செயற்கை நுண்ணறிவு எந்தளவு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதற்கு இது ஒரு சிறு உதாரணம்தான்.

முழுமையாக அறிய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.

தோனிக்காக ஆடும் ரஹானேவுக்கு இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் வாய்ப்பு கிடைத்தது எப்படி?

ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விஸ்வரூபம் எடுத்துள்ள ரஹானேவுக்கு இந்திய கிரிக்கெட் அணிக்கான கதவுகள் திறந்துள்ளன. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அவர், இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.

அதுவும் நேரடியாக ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்கான 15 வீரர்கள் கொண்ட பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

முழுமையாக அறிய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: