You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு; நடந்தது என்ன?
சனிக்கிழமை அன்று அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.
வாஷிங்டன் நேரப்படி சனிக்கிழமை அன்று மாலை சுமார் 6 மணியளவில், பென்சில்வேனியா அவென்யூ சந்திப்பில் உள்ள ஐசன்ஹோவர் நிர்வாக அலுவலக கட்டடம் அருகே ஒருவர் தனது பையில் இருந்த துப்பாக்கியை எடுத்து சுடத் தொடங்கினார்.
அப்போது அங்கு பாதுகாப்பில் இருந்த ரகசிய சேவை பிரிவு அதிகாரிகள் துப்பாக்கியால் பதில் தாக்குதல் நடத்தினர். அதில் காயமடைந்த அந்த நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்தத் தாக்குதலில் பொதுமக்களில் ஒருவர் காயமடைந்துள்ளார். ஆனால் அவரின் நிலை குறித்து அதிகாரிகள் கூடுதல் தகவலை வெளியிடவில்லை. அதிகாரிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனால் வெள்ளை மாளிகையை சுற்றிப் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு