You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
BBC தமிழ் இணையதளத்தில் கடந்த சில நாட்களில் வெளியான, நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய செய்திகள்
BBC தமிழ் இணையதளத்தில் கடந்த சில நாட்களில் வெளியான, நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய செய்திகள்.
வணக்கம் நேயர்களே! இந்த வாரம் உங்களுக்கு அருமையானதாக அமைந்திருக்கும் என்று நம்புகிறோம். இந்த வாரம் உலகமெங்கும் பல்வேறு விடயங்கள் நடந்தன, அவற்றை நாங்கள் தனித்தனி செய்திகளாக வெளியிட்டிருந்தோம்.
எனினும், நீங்கள் அவற்றில் சில முக்கியமான செய்திகளை தவற விட்டிருக்கலாம்.கவலை வேண்டாம். உங்களுக்காகவே இந்த வாரத்தில் வெளியான ஐந்து சிறப்பு கட்டுரைகளின் துணுக்குகளை இங்கே ஒரே இடத்தில் தொகுத்தளிக்கிறோம்.
நீங்கள் விரும்பும் கட்டுரையை அதற்கு கீழே உள்ள இணைப்பில் கிளிக் செய்து முழுவதும் படிக்க முடியும். பிபிசி தமிழில் நாங்கள் எப்போதுமே செய்திகளை மாறுபட்ட கோணத்தில் அளிப்பதுடன், ட்ரெண்டில் உள்ள செய்திகளை கலவையாக அளித்து வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
அந்த வகையில் இந்த வாரம், தமிழக செங்கோலை ஆட்சி மாற்ற அடையாளமாக நேருவிடம் மவுன்ட்பேட்டன் அளித்ததாக சொல்வது உண்மையா? ஆட்சி மாற்ற அடையாளமாக நேருவிடம் மவுன்ட்பேட்டன் அளித்ததாக சொல்வது உண்மையா?
சிங்கப்பூரின் லி குவான் யூவுக்கு மன்னார்குடியில் நினைவுச்சின்னம் குறித்து முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பின் சுவாரஸ்ய பின்னணி என்ன?, கனடா - இலங்கை ராஜீய மோதல்கள் மோசமான பாதையை நோக்கி செல்கிறதா? பெண்களை அதிகம் பாதிக்கும் தைராய்டு - 'தைராய்டு புற்றுநோய்' ஏற்பட வழிவகுக்குமா?, தோனி: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மகுடம் சூட்டிய மாய வித்தைக்காரர் என்பன உள்ளிட்ட ஐந்து கட்டுரைகளை இங்கே தொகுத்தளித்துள்ளோம்.
தமிழக செங்கோல்: ஆட்சி மாற்ற அடையாளமாக நேருவிடம் மவுன்ட்பேட்டன் அளித்ததாக சொல்வது உண்மையா?
இந்தியா சுதந்திரம் அடைந்த தருணத்தில் திருவாவடுதுறை ஆதீனத்தால் நேருவுக்கு வழங்கப்பட்ட செங்கோல் இந்தியாவின் புதிய நாடாளுமன்றத்தில் வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதிகாரம் கைமாறுவதன் அடையாளமாக, மவுன்ட்பேட்டனிடம் இருந்து அதைப் பெற்று அளித்ததாகச் சொல்லப்படும் தகவல் உண்மையா?
முழுமையாக அறிய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
சிங்கப்பூரின் லி குவான் யூவுக்கு மன்னார்குடியில் நினைவுச்சின்னம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பின் சுவாரஸ்ய பின்னணி என்ன?
சிங்கப்பூரின் நிறுவன தந்தைகளில் ஒருவராக விளங்கிய லி குவான் யூவுக்கு தமிழ்நாட்டில் மன்னார்குடியில் நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் உள்ள தமிழ் அமைப்புகள் இணைந்து நடத்திய கலாசார சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
முழுமையாக அறிய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
கனடா - இலங்கை ராஜீய மோதல்கள் மோசமான பாதையை நோக்கி செல்கிறதா?
கனடா நாடாளுமன்றத்தில் அதன் எம்.பிக்களால் நிறைவேற்றப்பட்ட தமிழர் இனப்படுகொலை தினம் கடைப்பிடிப்பு (மே 18) முன்மொழிவு தொடர்பான அறிவிப்பை கனடா பிரதமர் ஜெஸ்டீன் ட்ரூடோ வெளியிட்ட விவகாரத்தில் தனது கடுமையான எதிர்ப்பை இலங்கை தெரிவித்துள்ளது.
இது தற்போது அந்த இரு நாடுகளுக்கும் இடையில் ராஜீய அளவிலான மோதலாக உருப்பெற்றுள்ளது.
முழுமையாக அறிய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
பெண்களை அதிகம் பாதிக்கும் தைராய்டு - 'தைராய்டு புற்றுநோய்' ஏற்பட வழிவகுக்குமா?
ஒவ்வோர் ஆண்டும் தைராய்டு மற்றும் அதற்கான சிகிச்சை குறித்துப் புரிந்த கொள்ள உலகளவில் மே 25ஆம் தேதி தைராய்டு தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது.
2021ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி இந்தியாவில் 4.2 கோடி பேர் தைராய்டு நோய் உடையவர்களாக உள்ளனர்.
முழுமையாக அறிய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
தோனி: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மகுடம் சூட்டிய மாய வித்தைக்காரர்
சென்ற ஆண்டுக்கும் இந்த ஆண்டுக்கும் விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உள்ள மிகப்பெரிய வித்தியாசம் கேப்டன்சி தான். ரவீந்திர ஜடேஜாவுக்குப் பதிலாக மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்ற தோனி, அதே அணியை, அதே வீரர்களை வைத்துக் கொண்டு தனது வழக்கமான தனித்துவமான அணுகுமுறையால் அணியை மீண்டும் வெற்றிப்பாதைக்குத் திருப்பியுள்ளார்.
முழுமையாக அறிய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்