திருச்சி சிவா வீட்டை தாக்கிய சம்பவம்: அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் நால்வரை இடைநீக்கம் செய்த திமுக மேலிடம்

திருச்சி சிவா

பட மூலாதாரம், Getty Images

பிரசுரிக்கப்பட்டது

இன்று காலையில் திருச்சி சிவா வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் தி.மு.கவின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் காஜாமலை விஜய், திருச்சி மாவட்ட துணைச் செயலாளர் முத்துசெல்வம், மாவட்டப் பொருளாளர் துரைராஜ், வட்டச் செயலாளர் ராமதாஸ் ஆகியோர் காவல்துறையில் சரணடைந்துள்ளனர்.

இவர்கள் நான்கு பேரையும் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்வதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திட்டமிடப்பட்டுள்ள பணிகளைத் துவங்கி வைத்ததோடு, ஏற்கெனவே திட்டமிடப்பட்டு பணிகள் முடிவடைந்த திட்டங்களைத் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு இன்று தொடங்கி வைத்தார்.

அதன் ஒரு பகுதியாக எஸ்.பி.ஐ. காலனியில் 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட நவீன இறகு பந்து உள்விளையாட்டு அரங்கத்தையும் அவர் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர், மேயர், மாநகராட்சி ஆணையர் சட்டமன்ற உறுப்பினர்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஆனால், இதில் மாநிலங்களவை உறுப்பினரான திருச்சி சிவாவின் பெயர் இல்லையெனக் கூறப்படுகிறது. இதனால், சிவாவின் ஆதரவாளர்கள் கோபத்தில் இருந்தனர்.

இந்த நிகழ்ச்சிக்குப் பங்கேற்பதற்காக சிவாவின் வீடு உள்ள நியூ ராஜா காலனி வழியாக அமைச்சர் கே.என். நேரு உள்ளிட்ட பிரமுகர்களின் வாகனங்கள் சென்றுள்ளன. சிவாவுக்கு உரிய மரியாதை கொடுக்கப்படாத கோபத்தில் இருந்த அவரது ஆதரவாளர்கள் அமைச்சரின் வாகனம் அவ்வழியாகச் சென்றபோது கறுப்புக் கொடி காட்டினர்.

இருந்தபோதும் அமைச்சர் உள்ளிட்டோரின் கார்கள் அதனைக் கடந்து சென்று விட்டன.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

திறப்பு விழா நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு, சிவாவின் வீட்டிற்கு வந்த சிலர் அங்கிருந்த காரைத் தாக்கினர். அதற்குப் பிறகு, சிவாவின் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.

இந்த சம்பவம் தொடர்பாக மாநில பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ் உள்ளிட்ட பத்துப் பேரைப் பிடித்து அமர்வு நீதிமன்ற காவல் நிலையத்தில் வைத்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், அங்கு வந்த அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள், அவர்களைத் தாக்கினர். காவல்துறையைச் சேர்ந்த ஒருவரும் இந்தத் தாக்குதலில் காயமடைந்தார்.

இதையடுத்து காவல்நிலையம் முன்பாக பெரும் எண்ணிக்கையிலான காவலர்கள் குவிக்கப்பட்டனர்.

இதற்குப் பிறகு திருச்சி சிவாவின் ஆதரவாளர் சூரியகுமார் கொடுத்த புகாரில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அமைச்சரின் ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், தி.மு.கவின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் காஜாமலை விஜய், திருச்சி மாவட்ட துணைச் செயலாளர் முத்துசெல்வம், மாவட்டப் பொருளாளர் துரைராஜ், வட்டச் செயலாளர் ராமதாஸ் ஆகியோர் காவல்துறையில் சரணடைந்தனர். இவர்கள் நான்கு பேரையும் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்வதாக தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் எதிர்க் கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிச்சாமி கண்டனம் தெரிவித்தார்.

"தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வண்ணம், காவல்நிலையத்திற்குள்ளேயே புகுந்து நேரடியாக வன்முறை வெறியாட்டம் நடத்தும் அராஜக திமுகவினரால், இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு ரவுடிகளின் கட்டுப்பாட்டில் உள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது" என்று கூறியிருந்தார்.

என்ன நடந்தது?

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திட்டமிடப்பட்டுள்ள பணிகளைத் துவங்கி வைத்ததோடு, ஏற்கெனவே திட்டமிடப்பட்டு பணிகள் முடிவடைந்த திட்டங்களைத் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு இன்று தொடங்கி வைத்தார்.

அதன் ஒரு பகுதியாக எஸ்.பி.ஐ. காலனியில் 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட நவீன இறகுபந்து உள்விளையாட்டு அரங்கத்தையும் அவர் திறந்துவைத்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர், மேயர், மாநகராட்சி ஆணையர் சட்டமன்ற உறுப்பினர்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஆனால், இதில் மாநிலங்களவை உறுப்பினரான திருச்சி சிவாவின் பெயர் இல்லை என கூறப்படுகிறது. இதனால், சிவாவின் ஆதரவாளர்கள் கோபத்தில் இருந்தனர்.

இந்த நிகழ்ச்சிக்குப் பங்கேற்பதற்காக சிவாவின் வீடு உள்ள நியூ ராஜா காலனி வழியாக அமைச்சர் கே.என். நேரு உள்ளிட்ட பிரமுகர்களின் வாகனங்கள் சென்றுள்ளன. சிவாவுக்கு உரிய மரியாதை கொடுக்கப்படாத கோபத்தில் இருந்த அவரது ஆதரவாளர்கள் அமைச்சரின் வாகனம் அவ்வழியாகச் சென்றபோது கறுப்புக் கொடி காட்டினர்.

இருந்தபோதும் அமைச்சர் உள்ளிட்டோரின் கார்கள் அதனைக் கடந்து சென்றவிட்டன. திறப்பு விழா நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு, சிவாவின் வீட்டிற்கு வந்த சிலர் அங்கிருந்த காரைத் தாக்கினர். அதற்குப் பிறகு, சிவாவின் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.

@KN_NEHRU

பட மூலாதாரம், @KN_NEHRU/Twitter

இந்தச் சம்பவம் தொடர்பாக மாநில பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ் உள்ளிட்ட பத்துப் பேரைப் பிடித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. அமர்வு நீதிமன்ற காவல் நிலையத்தில் வைத்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுவந்த நிலையில், அங்கு வந்த அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள், அவர்களைத் தாக்கினர்.

இதையடுத்து காவல்நிலையம் முன்பாக பெரும் எண்ணிக்கையிலான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரை, அமைச்சர் கே.என். நேரு தரப்பிற்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவா தரப்பிற்கும் நீண்ட காலமாக மோதல் நிலவுகிறது

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: