You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நீங்கள் தங்கும் ஹோட்டலில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்தால் என்ன செய்வது?
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதிக்கு ஜேமி கிளாட்மேனும் அவரது 12 தோழிகளும் விடுமுறையை கழிக்க சென்று இருந்தனர். அங்கு இருந்த ஒரு வீட்டை Airbnb மூலமாக வாடகைக்கு எடுத்து விடுமுறையை கொண்டாடினர்.
அதில் ஒரு தோழி, தான் டிக்டாக்கில் பார்த்தது போல பாத்ரூமில் கேமரா மறைத்து வைக்கப்பட்டிருக்கிறதா என்பதை பிளாஷ்லைட் அடித்து சோதனை செய்து பார்த்துள்ளார்.
அப்போது அதிர்ச்சி அளிக்கும் வகையில் அவர்கள் தங்கியிருந்த வீட்டின் பாத்ரூமில் உள்ள பிளக் பாயின்டுக்குள் கேமரா மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை அனைவரும் கண்டுபிடித்தனர்.
அதைத் தொடர்ந்து அந்த விடுதி மீது புகார் அளிக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக பதிலளித்துள்ள Airbnb, "விடுதிகளில் கேமரா ஒளித்து வைக்கப்படுவதை நாங்கள் தடை செய்துள்ளோம். சம்பந்தப்பட்ட விடுதியை எங்கள் தளத்தில் இருந்து நீக்கிவிட்டோம். பாதிக்கப்பட்டவர்கள் செலுத்திய கட்டணத்தை திருப்பி அளித்திருக்கிறோம். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது," என அறிவித்துள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்