You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: சேலம் அருகே கிணற்றில் விழுந்த காட்டுமாடு மீட்பு
காணொளி: சேலம் அருகே கிணற்றில் விழுந்த காட்டுமாடு மீட்பு
பிரசுரிக்கப்பட்டது
சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த தேக்கம்பட்டி அருகே காட்டுமாடு ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் இருந்த கிணற்றுக்குள் விழுந்தது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் காட்டுமாட்டை கிணற்றுக்குள்ளிருந்து மீட்டனர். பின்னர் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு காட்டுமாடு அருகிலுள்ள அடர்ந்த வனப்பகுதியில் பாதுகாப்பாக விடப்பட்டது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு