You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: பிரசவத்தில் உதவும் புரட்சிகர கருவியை வடிவமைத்த கார் மெக்கானிக்
ஓர் எளிய உத்தியில் இருந்து, நீண்டகால முயற்சியில் பிரசவத்தில் உதவக்கூடிய புரட்சிகரமான கருவி ஒன்றை கார் மெக்கானிக் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.
20 ஆண்டுகள் நீண்ட சோதனைகளுக்குப் பிறகு, அந்த யோசனை, ‘ஓடோன் அசிஸ்ட்’ என்ற கருவியாக உருவானது.
பிரசவத்தின் போது குழந்தையின் தலை சரியான பாதையில் பயணிக்க உதவும் வகையில், தலையை மென்மையாகச் சூழ்ந்துகொள்ளும் காற்றால் நிரப்பப்பட்ட உறையை இந்தச் சாதனம் பயன்படுத்துவதாக மருத்துவர் எமிலி ஹாடன் விளக்குகிறார்.
ஃபோர்செப்ஸ், சக்ஷன் கப்கள் போன்ற கருவிகளைவிட இந்தக் கருவி குறைந்த அழுத்தத்தையே செலுத்துகிறது, இதனால் தாய், சேய் இருவருக்கும் காயம் ஏற்படும் அபாயம் குறைகிறது.
இந்தக் கருவியைப் பயன்படுத்தி சோதனைகளை மேற்கொள்ளும் மருத்துவர்கள், மரபு முறைகளில் பொதுவாக ஏற்படும் சிராய்ப்புகள், காயங்கள் ஏதுமின்றிப் பல குழந்தைகள் பிறந்துள்ளதாகக் கூறுகின்றனர்.
அதன் கண்டுபிடிப்பாளரின் பெயரைக் கொண்ட ‘ஓடோன்அசிஸ்ட்’ முதன்முதலில் அர்ஜென்டினாவில் பரிசோதிக்கப்பட்டது. உலகளவில் 40 மருத்துவமனைகளிலும் சுமார் 300 பிரசவங்களிலும் இக்கருவி பயன்படுத்தப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு