காணொளி: மதுபானங்களுடன் கவிழ்ந்த வாகனம் - முண்டியடித்த மக்கள்

காணொளி: மதுபானங்களுடன் கவிழ்ந்த வாகனம் - முண்டியடித்த மக்கள்
பிரசுரிக்கப்பட்டது

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் மதுபானங்களை ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்று நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வாகனம் அதிவேகமாக சென்றதால் விபத்து ஏற்பட்டதாகவும் வாகனத்தில் 12 லட்சம் ரூபாய் மதிப்பில் மதுபானம் இருந்ததாகவும் காவல்துறை அதிகாரி பிபிசியிடம் தெரிவித்தார். மேலும், இந்த விபத்தில் உடைந்த மதுபாட்டில்களைத் தவிர 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்கள் மீட்கப்பட்டதாகவும் 3 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை மக்கள் எடுத்து சென்றதாகவும் அவர் தெரிவித்தார்.

வீடியோ மூலம் அதிக அளவிலான மதுபானங்களை எடுத்துச் சென்றவர்களை அடையாளம் கண்டு, அவற்றை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு