You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
BBC தமிழ் இணையதளத்தில் கடந்த சில நாட்களில் வெளியான, நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய செய்திகள்
BBC தமிழ் இணையதளத்தில் கடந்த சில நாட்களில் வெளியான, நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய செய்திகள்.
வணக்கம் நேயர்களே! இந்த வாரம் உங்களுக்கு அருமையானதாக அமைந்திருக்கும் என்று நம்புகிறோம். இந்த வாரம் உலகமெங்கும் பல்வேறு விடயங்கள் நடந்தன, அவற்றை நாங்கள் தனித்தனி செய்திகளாக வெளியிட்டிருந்தோம்.
எனினும், நீங்கள் அவற்றில் சில முக்கியமான செய்திகளை தவற விட்டிருக்கலாம்.கவலை வேண்டாம். உங்களுக்காகவே இந்த வாரத்தில் வெளியான ஐந்து சிறப்பு கட்டுரைகளின் துணுக்குகளை இங்கே ஒரே இடத்தில் தொகுத்தளிக்கிறோம்.
நீங்கள் விரும்பும் கட்டுரையை அதற்கு கீழே உள்ள இணைப்பில் கிளிக் செய்து முழுவதும் படிக்க முடியும். பிபிசி தமிழில் நாங்கள் எப்போதுமே செய்திகளை மாறுபட்ட கோணத்தில் அளிப்பதுடன், ட்ரெண்டில் உள்ள செய்திகளை கலவையாக அளித்து வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
அந்த வகையில் இந்த வாரம், அமெரிக்க வங்கிகள் வீழ்வது இந்திய பொருளாதாரத்தைப் பாதிக்குமா? ஆனந்த் ஸ்ரீநிவாஸன் பேட்டி, "பொய்களால் தொடரும் துயரம்" - மனைவியின் குற்றச்சாட்டை மறுத்து ஸ்ரீதர் வேம்பு விளக்கம், பொம்மன், பெள்ளி: ''நீலகிரி மலையில் இருந்து முதல் முறையாக சென்னை வந்தோம்'' - 'யானை பாகன்' தம்பதி நெகிழ்ச்சி, மக்கள் வரி செலுத்த தேவையில்லை; கல்வி, மருத்துவம் இலவசம் - எந்த நாட்டில் தெரியுமா? ஜெய் ஸ்ரீராம் முழக்கம்: ஷமி, சிராஜூக்கு இதற்கு முன்பு என்ன நடந்தது? கோலி, ரஹானே என்ன செய்தார்கள்? என்பன உள்ளிட்ட கட்டுரைகளை இங்கே தொகுத்தளித்துள்ளோம்.
அமெரிக்க வங்கிகள் வீழ்வது இந்தியப் பொருளாதாரத்தைப் பாதிக்குமா? ஆனந்த் ஸ்ரீநிவாஸன் பேட்டி
அமெரிக்காவில் சிலிக்கன் வேலி வங்கி, சிக்னேச்சர் வங்கி என வங்கிகள் திவாலாவது தொடர்கதையாகியிருக்கிறது. இதற்கு என்ன காரணம், இது உலகப் பொருளாதாரத்தை பாதிக்குமா, இந்தியாவில் உள்ளவர்கள் பாதிக்கப்படுவார்களா என்பது குறித்தெல்லாம் பொருளாதார வல்லுநர் ஆனந்த் ஸ்ரீநிவாஸனிடம் பேசினார் பிபிசி செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதன். முழுமையாக அறிய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
"பொய்களால் தொடரும் துயரம்" - மனைவியின் குற்றச்சாட்டை மறுத்து ஸ்ரீதர் வேம்பு விளக்கம்
மனைவிக்குத் தெரியாமல் தன்னிடமிருந்த தனது நிறுவன பங்குகளை தனது உறவினர்களுக்கு விற்றுவிட்டதாகக் கூறப்படும் விவகாரம் குறித்து, ஸோஹோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு விளக்கமளித்துள்ளார்.
முழுமையாக அறிய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
பொம்மன், பெள்ளி: ''நீலகிரி மலையில் இருந்து முதல் முறையாக சென்னை வந்தோம்'' - 'யானை பாகன்' தம்பதி நெகிழ்ச்சி
தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் காட்டுநாயகன் சமூகத்தைச் சேர்ந்த யானை பாகன் தம்பதியான பொம்மன் - பெள்ளியின் உண்மை கதையை வெளிக்கொண்டு வந்த 'தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்' என்ற குறு ஆவணப்படம் ஆஸ்கர் விருதை வென்றதை அடுத்து, யானை பாகன் தம்பதியை தமிழ்நாடு அரசு கெளரவித்தது.
இதையொட்டி இந்த தம்பதி முதன் முதலாக நீலகிரி மலையில் இருந்து சென்னை நகருக்கு வந்த அனுபவத்தை பகிர்ந்து நெகிழ்ச்சி அடைந்தனர். விரிவாக அறிய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
மக்கள் வரி செலுத்த தேவையில்லை; கல்வி, மருத்துவம் இலவசம் - எந்த நாட்டில் தெரியுமா?
கொரோனா பெருந்தொற்றாக இருந்தாலும் சரி, யுக்ரேனில் நடந்த போராக இருந்தாலும் சரி, அவை ஆசியாவின் இந்த சிறிய நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கவில்லை.
உலகெங்கிலும் உள்ள பல நாடுகளின் கடன் பெருமளவில் அதிகரித்துள்ளது. ஆனால் புருனேயில் எல்லாம் கட்டுக்குள் உள்ளது. அது எப்படி?
முழுமையாக அறிய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
ஜெய் ஸ்ரீராம் முழக்கம்: ஷமி, சிராஜூக்கு இதற்கு முன்பு என்ன நடந்தது? கோலி, ரஹானே என்ன செய்தார்கள்?
"ஒருவர் சார்ந்த மதத்தின் அடிப்படையில் அவரை விமர்சிப்பது ஒரு மனிதன் செய்யக் கூடிய மிகவும் பரிதாபமான செயல். அவர்கள் முதுகெலும்பில்லாதவர்கள். அவர்கள் மீது கவனம் செலுத்தி வாழ்க்கையில் ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்க விரும்பவில்லை"
- இவை 2021-ம் ஆண்டு இருபது ஓவர் உலகக்கோப்பைப் போட்டி ஒன்றில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியுற்ற போது, அணியில் இடம் பெற்றிருந்த முகமது ஷமியை சமூக ஊடகங்களில் ரசிகர்கள் விமர்சித்த போது அப்போதைய கேப்டன் விராட் கோலி உதிர்த்த வார்த்தைகள்.
முழுமையாக அறிய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்