IND Vs BAN டெஸ்ட் போட்டியில் இஷாந்த் சர்மா அபாரம்: 106 ரன்களில் வங்கதேசம் ஆட்டமிழப்பு

பட மூலாதாரம், Getty Images
கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்றுவரும் இரண்டாவது மற்றும் டெஸ்ட்டில், முதலில் பேட் செய்த வங்கதேசம், தனது முதல் இன்னிங்சில் 106 ரன்களில் ஆட்டமிழந்தது.
இந்தியா விளையாடும் முதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டி இது என்பதால் இந்த போட்டியின் மீது அதிக கவனம் இருந்தது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த போட்டியை வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி, பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி, ஜாம்பவான் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் உள்பட பலர் மைதானத்தில் நேரில் கண்டனர்.
இந்த போட்டி பகல்-இரவு டெஸ்ட் போட்டியாக நடப்பதால் பிங்க் நிற பந்து பயன்படுத்தப்படுகிறது.
போட்டி தொடக்கம் முதலே இந்திய வேகப்பந்துவீச்சளர்களின் கையே ஓங்கி இருந்தது.

பட மூலாதாரம், Getty Images
இஷாந்த் சர்மா முதல் விக்கெட்டை எடுத்தார். வங்கதேச பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாட முடியாதவண்ணம் இந்திய வேகப்பந்துவீச்சளர்களின் அழுத்தம் இருந்தது.
உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளையும், முகமது ஷமி 2 விக்கெட்டுகளையும் எடுக்க, மிக சிறப்பாக பந்துவீசிய இஷாந்த் சர்மா 12 ஓவர்களில் 22 ரன்களை மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பிற செய்திகள்:
- இலங்கையை வசப்படுத்த ஜெய்சங்கர் மூலம் காய்நகர்த்துகிறதா மோதி அரசு?
- மனிதக் கழிவுகளை உரமாக்குவது எப்படி? - மாற்று கழிப்பறைக்காக போராடும் விஷ்ணுப்ரியா #iamthechange
- ஈடன் கார்டனில் 'பிங்க்' நிறத் திருவிழா: பகல்-இரவு டெஸ்ட் போட்டிகள் ரசிகர்களை ஈர்க்குமா?
- இந்து கோயில் சிற்பங்களை ‘அசிங்கம்’ என்று கூறியது ஏன்? - திருமாவளவன் பேட்டி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












