இந்திய அணியுடனான புகைப்படத்தில் மது பாட்டில் வைத்திருந்தாரா ரவி சாஸ்திரி?

பட மூலாதாரம், Getty Images
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. அந்த புகைப்படத்தில் அவருடைய இருக்கையின் அடியில் மது பாட்டில் ஒன்று இருக்கிறது.
இந்த படத்தில் ரவி சாஸ்திரியின் இடது பக்கம் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இருக்கிறார் பின்னால் யுகேந்திர சாஹல் சுழற்பந்து வீச்சாளர் நின்று கொண்டிருக்கிறார். சமூக வலைதளத்தில் 20000க்கும் மேற்பட்ட முறை பகிரப்பட்டுள்ள ரவி சாஸ்திரியின் இந்த புகைப்படத்திற்கு மக்கள் , ”தன்னுடைய அணியுடன் புகைப்படம் எடுக்க செல்லும்போது பயிற்சியாளர்களுக்கு எந்த விதிமுறையும் இல்லையா? இது குறித்து பிசிசிஐ விளக்கம் கேட்க வேண்டும்” என கருத்து கூறியுள்ளனர்.

செவ்வாயன்று நடைபெற இருந்த இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான அரையிறுதி போட்டி மழையால் தடைப்பட்டது. அதன்பின் இந்த புகைப்படம் வைரலானது.
புகைப்படத்தின் உண்மை
இந்த புகைப்படம் ஜுலை 6 அன்று இலங்கை அணிக்கு எதிராக இந்தியா ஆடுவதற்கு முன்னால் எடுத்த புகைப்படம் ஆகும்.
சிலர் ரவி சாஸ்திரியை குறிவைத்து அந்த புகைப்படத்தை மார்ஃப் செய்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர்.
பிசிசிஐ தன்னுடைய அதிகார ட்விட்டர் பக்கத்தில் இந்த புகைபடத்தை "ஒரு அணி, ஒரே நாடு, ஒரே உணர்வு" என்று எழுதி பதிவு செய்துள்ளனர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












